8/11/2012

வரிவுடை நாயகியே ...

வரிவுடை நாயகியே நல்
வரம் தரும் தாயே உன்
அருள் இல்லையேல்
மண்ணில் நற் பொருளேது !...........
கொடியவர் மனங்களில்
தினம் ஒரு நினைவலை
அது தரும் துயர் இங்கு
அறுபட  வழி ஏது !!!...........

விடை கொடு தாயே
உயிர் விடு படும் முன்னே
ஒரு கணமேனும்
நீதி நிலைத்திடவே
உறையுது ரெத்தம் இது
உயிர் விடும் யுத்தம்
துடைத்தெறி களங்கம்
என் தூயவளே!.................

எரியுது எரியுது
நல் மனங்கள் இங்கே!!!....
இடரது கொடியென
தொடர்வதென்ன!.....
மலைகளைக் கடந்து 
நதியென வருவாய் 
தீய விதி இதை முடித்து 
உன் அருள்மழை பொழிவாய் 
இரு கரம் தொழுதேன் வா முன்னே 
துயிர் படும் துயரது  அறிபவளே 
அறமது பாடி முடித்துவிட்டேன்
 இனி உன் திருவடி சேர
 ஒரு வரம் அருள்வாய்.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

19 comments:

  1. Valthukkal arumaiyana kavi varikal . Nichayam unkalukku arul kidaikkum

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  2. நல்ல வரிகள்...
    அருமையாக முடித்துள்ளீர்கள்... நன்றி சகோ...

    தொடர வாழ்த்துக்கள்... (TM 1)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய
      நல் வாழ்த்திற்கும் .

      Delete
  3. அழகான வார்த்தை பிரயோகம் ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. நிறைய நபர்களின் மனதில் உள்ள எண்ணம் தங்கள் அழகிய கவி வரிகளில்

    நன்றி சகோ பகிர்ந்தமைக்கு .

    அன்புடன்

    எம் .ஆர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவிற்கும்
      இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  5. காக்கும் தாயிடம் வேண்டுதல் அழகிய கவிவடிவில்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும்
      அழகிய கருத்திற்கும் .

      Delete
  6. மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும்
      அன்பு கலந்த நல் வாழ்த்திற்கும் .

      Delete
  7. அகிலம் காக்கும் அன்னைக்கு
    அழகிய பாமாலை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  8. அம்மனை பற்றிய அழகான பாடல்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  9. நல்ல கவிதை வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  10. தாயின் அருள் இல்லையேல் சேய் எப்படி உயிர் வாழமுடியும்.தாயின் அருள்வேண்டிய கவிதை அருமை.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........