8/08/2012

காலனைத் தொழும் கரங்கள்!....


தூண்டிலில் மாட்டிய புழுப்போலே
துடியாய் துடிக்கும் யீவன்களுக்கு
வேண்டிய வரமது அளிப்பதற்கு
நீ தான் என்றும் விதிவிலக்கு!:......

கேட்டவர் மனதை வதைக்கின்றாய்
கேளாத உயிரைப் பறிக்கின்றாய்
நாற்பதும் பத்தும் உனக்கில்லை
நல்லதும் கெட்டதும் உனக்கில்லை 

மின்னல் போலே வருகின்றாய்  
மிதமாய் துயரைத் தருகின்றாய் 
சொன்ன தேதியில் உன் கடமை 
அதை சுயமாய் முடித்துச் செல்கின்றாய்!... 

கல்லுக்குள்ளே மறைந்தாலும் 
காலன் கணக்குத் தப்பாது !........
மண்ணில் வந்து பிறந்துவிட்டோம் 
நாம் மடியும் காலம் எப்போது !...


முதுமையில் வரும் துயர் புரிகிறதா !!....
அவர்கள் முகங்களில் சோகம் தெரிகிறதா!...
அருமையாய் எம்மை ஈன்றெடுத்த 
அன்னை தந்தையோ பெரும் பாரம் இங்கே!.....

ஒரு வழி அற்றுத் தவிக்கின்றார் 
தம் உரிமையை நினைத்து துடிக்கின்றார்!....
இவர்கள் பொறுமையை நாமும் சோதித்தால் 
புண்ணியம் என்பதுதான் வருமோ !!!........ 

கடமையை மறந்து நாம் சென்றால் 
வரும் காலம் எம்மை வாட்டிடுமே 
நிலைமையை உணர்ந்து ஆதரிப்போம் 
அவர்களை நின்மதியாக வாழ வைப்போம்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. முதியோரை மதிப்போம் வாழ வைப்போம்.....வரும் காலத்தில் நாமும் முதியவர்கள் ஆவோம் மதியில் கொள் மனிதா...?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் முதல் வரவிற்கும் இனிய நற்
      கருத்திற்கும் .

      Delete
  2. ////
    ஒரு வழி அற்றுத் தவிக்கின்றார்
    தம் உரிமையை நினைத்து துடிக்கின்றார்!....
    இவர்கள் பொறுமையை நாமும் சோதித்தால்
    புண்ணியம் என்பதுதான் வருமோ !!!........
    ///

    நல்ல வரிகள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும்
      பாராட்டிற்கும் .

      Delete
  3. கடமையை மறந்து நாம் சென்றால்
    வரும் காலம் எம்மை வாட்டிடுமே
    நிலைமையை உணர்ந்து ஆதரிப்போம்
    அவர்களை நின்மதியாக வாழ வைப்போம்!...//

    இன்றைய சூழலுக்கு
    அவசியம் தேவையான கவிதை
    மன்ம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும்
      வாழ்த்திற்கும் .

      Delete
  4. கருத்துள்ள கவிதை...
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
    நன்றி…(TM 3)

    ReplyDelete
  5. நல விதையை விதைத்திடுவோம் இந்நாளில்
    இன்றைய முன்னோர் முதுமை
    நாளையை நம் முதுமை
    மனதில் கொள்வோம்..
    அழகிய கவிதை சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய
      கருத்திற்கும் .

      Delete
  6. கல்லுக்குள்ளே மறைந்தாலும்
    காலன் கணக்குத் தப்பாது !.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி வரவிற்கும் கருத்திற்கும் .

      Delete
  7. காலனை வேண்டி நிற்கும் கரங்களில்தான் எத்தனை வகைகள். என்னைக் கொண்டு போகாதே... என்னைவிட்டால் என் பிள்ளைகளுக்கு ஆதரவில்லை என்று சில கரங்கள். என்னைக்கொண்டுபோய்விடு, என்னால் என் பிள்ளைகளுக்கேன் வீண் தொல்லை என்று சில கரங்கள். எல்லாமே பிள்ளைக்காய், பிள்ளையின் நலனுக்காய் வேண்டும் வரங்கள். பெற்றோருக்காக காலனை வரவேண்டாமென்று வேண்டி நிற்கும் பிள்ளைக்கரங்கள் எத்தனை உண்டு? இதோ கண்முன் காண்கிறேன் கவி வடிவில் காலனிடம் வேண்டுதல் ஒன்று. மனம் தொட்டக் கவிதை. பாராட்டுகள் அம்பாளடியாள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் இனிய
      கருத்திற்கும் .

      Delete
  8. இனிய வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........