கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே
கண்ணிறைந்த தூக்கம் ஏனடி?
உன்னோடு வாழும் பொன்னான நாட்களை
இன்றோடு முடித்தாய் ஏனடி ?
மங்கள நாணில் சாபம் வீழ்ந்ததால் என்
மனமிங்கு வலிக்குதடி! - உன்னைத்
திங்களைப் போலே நினைத்தேன் அதனால் என்
திசை எட்டும் இருண்டதடி!
( கல்யாணப் பெண்ணே )
( கல்யாணப் பெண்ணே )
கங்கையைக் கண்ணில் சுமந்திடத்தானா
இந்தக் காதலும் சொல்லிங்கே ?
இந்தக் காதலும் சொல்லிங்கே ?
என் அங்கமும் உசிரும் துடிக்குது உன்னால்
என் ஆருயிரே நீ எங்கே ?
இதயம் இதயம் புண்ணானது என்
இளமை எல்லாம் மண்ணானது- ஓர்
உதயம் எனக்கு நீயானாய் இந்த
உயிரைப் பிரிந்து ஏன் போனாய்?
மலரே மலரே பேசாயோ? உன்
மலர்விழி திறந்தென்னைப் பாராயோ?
உலரும் நாவிலே உணர்வும் சாகுதே
என் உயிரே நீயும் பேசாயோ ?
மௌனப் பாசறை விட்டெழுந்து வா
மணவாளன் கைகளைத் தொட்டெழுந்து வா
பூவே உன் வாசம் போகாதடி
போனாலும் என்னுசிரு தாங்கதடி ......
( கல்யாணப் பெண்ணே )
என் உயிரே நீயும் பேசாயோ ?
மௌனப் பாசறை விட்டெழுந்து வா
மணவாளன் கைகளைத் தொட்டெழுந்து வா
பூவே உன் வாசம் போகாதடி
போனாலும் என்னுசிரு தாங்கதடி ......
( கல்யாணப் பெண்ணே )
ReplyDeleteவணக்கம்!
நெஞ்சைக் கலக்கம் நெடுந்தமிழைப் பாடினாய்!
வஞ்சியே வாழ்க வளா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
ReplyDeleteஉள்ளத்தை அள்ளிச்செல்லும் வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சினிமாவுக்காகஎழுதியதைப் போன்ற ' சூழ்நிலை' பாடலை எழுதி உள்ளதை ரசித்தேன் !
ReplyDeleteத ம 2
மனதை கனக்கச் செய்யும் வரிகள்
ReplyDeleteதம 3
ReplyDelete//மலரே மலரே பேசாயோ உன்
ReplyDeleteமலர்விழி திறந்தென்னைப் பாராயோ
உலரும் நாவிலே உணர்வும் சாகுதே
என் உயிரே நீயும் பேசாயோ ?.....//
அருமை.
த.ம. +1
அருமையான ஏக்கம் நிறைந்த சோகப் பாடல் தோழி பொதிந்து இருக்கும் பொருளும் மனதை பிழிகிறது. நன்றி வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteகல்யாணப்பெண்ணின் உறக்கத்தைக் கலைக்கவைக்கும் கவிதை மனதில் நின்றது.
ReplyDeleteஎன்ன மாதிரி சூழலில் இந்த கண்ணீர்க் கவிதையை வடித்தீர்கள் என்று தெரியவில்லை. படத்தில் படர்ந்துள்ள சோகம் கவிதையின் வரிகளிலும் தெரித்து விழுகின்றன. சிலசமயம் இறைவன் நம்மை இப்படியும் சோதித்து விடுகிறான்.
ReplyDeleteத.ம.5
சோகம் ததும்பும் தலைவன் தவிப்பு பாடும் பாடல் அழகு.வாழ்த்துக்கள் கவிக்கு
ReplyDeleteஅருமையான பாடல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலங்கினேன்...
ReplyDeleteகவி வரிகள் அருமை!சோகத்தைப் பிழிந்து....................ஏன்?(எனக்கு இங்க ஓட்டு இல்ல.///அதாவது,தமிழ் மணத்தில.)
ReplyDeleteஇதயம் இதயம் புண்ணானது என்
ReplyDeleteஇளமை எல்லாம் மண்ணானது
மனம் கணத்த வரிகள்
www.killergee.blogspot.com
ஏங்க இவ்வளவு சோகம்....?
ReplyDeleteபோங்கம்மா எனக்கு கவலை கவலையா இருக்குது.
அருணா இது வெறும் பாட்டும்மா இதற்கா இத்தனை சோகம் ?...:)))))))))))
Deleteமிக்க நன்றி அன்பு நெஞ்சங்களே அனைவரது வருகைக்கும் உணர்வுபூர்வமான நற் கருத்துகளிற்கும் .
ReplyDelete"கல்யாணப் பெண்ணே
ReplyDeleteகண்ணிறைந்த தூக்கம் ஏனடி?" எனக் கேட்டு
சிறந்த பாவரிகளைத் தந்தீர்களே!
போனாய்.நீ போனாய்.நீ என்றே புலம்புகிறாய்
ReplyDeleteமானாகப் பாய்ந்தவள் மாய்ந்தாளோ - தேனாய்
இனித்தும் திரும்பாத நாட்போலே! இந்த
தனித்த இடத்தின் தவிப்பு !
அழகிய பாடல் ஏக்கங்கள் அதிகமாய்
இனிய வாழ்த்து சகோ
வாழ்க வளமுடன் 9
ஆஹா ...என்ன ஓர் அருமையான பாடல் ! இசையமைத்துப் பாடினால்
ReplyDeleteகேட்பவர்கள் உள்ளத்தில் உறைந்து விடும் வரிகளின் தன்மை அப்படி ...!!!