அடடா அடடா அழகிதடா
அமுதைப் பொழியும் நிலவிதடா!
உதடா உதடா தேன் கூடா
உலகம் சுற்றுதே என் தோழா!
கனவில் வந்தவள் அவள் தானே என்
கைகளைப் பிடித்தவள் அவள் தானே!
நினைவில் நின்றவள் அவள் தானே என் முன்
நீச்சலடித்தவள் அவள் தானே!
மின்னலடிக்கும் கண்ணழகி உயிர்
மூச்சைத் தடுக்கும் பெண்ணழகி!
அன்ன நடை அது நடையழகு என்னை
ஆட்டிப் படைக்குதே அவள் இடையழகு!
கன்னமிரண்டும் செவ்வாழை -அவள்
கழுத்தினில் தொங்குதேன் என் மூளை!
சிக்கனமாய் அவள் சிரிக்கையிலே நான் ஏன்
சிக்கித் தவிக்கிறேன் மச்சானே!
ஐயோ ஐயோ ஐயோ ஓரம் போங்கடா- இவன்
காதல் வலையில் விழுந்து புட்டான் தூரம் போங்கடா!
மச்சம் உள்ள இடத்தை மட்டும் விட்டுப்புட்டானே
மத்ததெல்லாம் சொல்லிச் சொல்லி மனசத் தச்சுப்புட்டானே!
கெட்டி மேளச் சத்தம் கேட்கும் நேரம் வந்தாச்சு
நம்ம நட்பு மெல்லத் தூரம் போகும் காலம் வந்தாச்சு
நண்பனுக்கு ராஜ யோகம் கூடி வந்தாச்சு அந்த
ராணியோட சேரும் காலம் தேடி வந்தாச்சு ...
பீப்பீ பீப்பீ பீப்பீ பீப்பீ ...
டும் டும் டும் டும்..
பீப்பீ ...பீப்பீ...பீப்பீ..பீப்பீ ..
டும் டும் டும் டும்....
அழகா அழகா அழகிதுவா?
அமுதைப் பொழியும் நிலவிதுவா?
உதடா உதடா தேன் கூடா?
உன் உலகம் சுற்றுதா என் தோழா?
பட்டு வேட்டி கட்டிக்கோ மெல்லப்
பாவை மனசில் ஒட்டிக்கோ
எட்டுப் பத்துப் பெத்துக்கோ
ஏன் தான் தாமதம் என் தோழா?
ஆஞ்சநேய பக்தனுனக்குக் காதல் வந்தாச்சு
அம்மா சொன்ன பொண்ணோடு தான் மோகம் வந்தாச்சு
நேந்து வச்ச நேத்திக்கேத்த பொண்ணு தானடா
நெத்தியடி பந்தயத்தில் நாம் செயிச்சுப் புட்டோம்டா!
வணக்கம்!
ReplyDeleteஅடடா! அடடா! அரும்அம்பாள் பாட்டைப்
படிடா படிடா பயன்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் !
Deleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
படமும் பாட்டும் தலைப்பும் படா ஜோரா இருக்குது.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteபடமும் பாட்டும் தலைப்பும் படா ஜோரா இருக்குது.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஆஞ்சநேய பக்தனுனக்குக் காதல் வந்தாச்சு
ReplyDeleteஅம்மா சொன்ன பொண்ணோடு தான் மோகம் வந்தாச்சு//
ஆஹா! நல்லது .
வாழ்த்துக்கள். வளமோடு வாழட்டும் மணமக்கள்.
மிக்க நன்றி தோழி இப்பாடலை வெறும் பாடலாகக் கருதாமல்
Deleteநன்கு ரசித்தும் வாழ்த்தியுள்ளீர்கள் :))))))
பாடிக்கொண்டே எழுதுவீர்களா....?
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
உண்மை தான் தோழி அருணா பாடிக்கொண்டேதான் எழுதுவது
Deleteஎன் வழக்கம் .மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
பிரமாதம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
மிக்க நன்றி அன்புச் சகோதரா தங்களின் பாராட்டிற்கும் இனிய
Deleteநல் வாழ்த்திற்கும் .
"கனவில் வந்தவள் அவள் தானே என்
ReplyDeleteகைகளைப் பிடித்தவள் அவள் தானே
நினைவில் நின்றவள் அவள் தானே என் முன்
நீச்சலடித்தவள் அவள் தானே..." என்ற அழகிய வரிகளுடன்
"பீப்பீ பீப்பீ பீப்பீ பீப்பீ ...
டும் டும் டும் டும்..
பீப்பீ ...பீப்பீ...பீப்பீ..பீப்பீ ..
டும் டும் டும் டும்..." என்ற இசை வரிகளுடன்
கவிதை சிறப்பாக உள்ளதே!
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteநல்ல கவிதை. ரசித்தேன்.
ReplyDeleteத.ம. +1
#அழகிதடா #
ReplyDeleteரசித்து பார்த்தால் அழகியும் போடுவாளோ தடா !
த ம 6
உண்மை தான் ஒரு பெண்ணின் அனுமைதியின்றி அவள் அழகினை ரசிப்பது குற்றமே இருப்பினும் கண்ணிருந்தால் ரசிக்கத் தானே செய்யும் இதற்கெல்லாம் "தடா" போட முடியாது பகவஞ்சியாரே :)))
Deleteஅற்புதம்
ReplyDeleteஅந்த பாடலுக்குரிய மெட்டோடு
இரண்டுமுறை படித்து ரசித்தேன்
மிகப் பொருத்தமாக வார்த்தைகள் இப்படி
அர்த்தத்துடன் அமைய அதிகப் பாண்டித்தியம் வேண்டும்
உங்களிடம் அம்பாள் அருளால் அது நிறைந்து இருக்கிறது
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி ஐயா தங்களின் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .
Deletetha.ma 7
ReplyDeleteநல்ல மெட்டுடன் கூடிய கவிதை சகோதரியே! மிகவும் ரசித்தோம்! நல்ல ரசனையான வரிகள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் .
Delete
ReplyDelete/// பட்டு வேட்டி கட்டிக்கோ மெல்லப்
பாவை மனசில் ஒட்டிக்கோ///
அப்படியா அப்ப யாராவது எனக்கு வேட்டிகட்ட சொல்லித்தாருங்களேன்
ஆச தோச அப்பளம் வட இருக்கிற உருட்டுக் கட்ட போதாதா இன்னொரு உருட்டுக் கட்ட வேணுமா ?...எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஓர் ஆசை தலை தூக்கும் இந்த மதுரைத் தமிழனுக்கு !! :))) வேட்டி இல்ல பெட்டி கட்டத் தான் வருவினம் தம்பி :))))))
Deleteபாடல் அசத்தல் தோழி மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteமனமுருக்கும் பாடல் மகிழ்வோடு பாட
ReplyDeleteநினைவிழந்து நின்றதென் நெஞ்சு !
அழகோ அழகோ உன் கவி அழகு
அருமை அருமை சகோ
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
11
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Delete