அன்பு செய்ய வந்தவளே! எம்மை
ஆதரித்து நின்றவளே!
உயர் பண்பதனால் உருவானவளே!
உத்தமியே! கொஞ்சம் நில்லு!
புறமுதுகு காட்டாமல்
புலியையும்தான் விரட்டியவள்
நடுநிசியில் பெருநெருப்பாய்
நகர்ந்து நீயும் எங்கே வந்தாய்!
கொடியவரை அழித்திடவோ
கோ மகளே புறப்பட்டாய்!
நெடிய துயர் நெஞ்சை வாட்ட
நீ போகும் பாதை எதுவோ!
விடியும் வரைக் காத்திருந்து
விம்மி விம்மி அளவும் மாட்டாய்!
படை நடுங்கும் உனைத்தான் கண்டு
பாசம்மிகு தமிழ்த் தாயே நில்லு!
ஒத்தையிலே போர் முனைக்கு நீ
ஓடோடிச் செல்கையிலே
சித்தமெல்லாம் கலங்குதடி
சினம் தணிந்து வா தாயே!
ஊளையிடும் நரிகளுக்கு
உன்னால்தான் முடிவு பிறக்கும்!
கோழையல்ல தமிழினத்தின்
கொள்கை நிலைத்திடும் நீ வா தாயே!
வீர மறவரை ஈன்றெடுத்தவள்
வேதம் அனைத்தும் கற்றுக் கொடுத்தவள்
உயிரின் நாதமெனத் தமிழ்மொழியில் உதித்தவள்
உலகப் புகழின் உச்சமே! நீ வா தாயே!
கொடியவரை அழித்திடவோ
ReplyDeleteகோ மகளே புறப்பட்டாய்?..
நெடிய துயர் நெஞ்சை வாட்ட
நீ போகும் பாதை எதுவோ ?..
விழியில் மட்டுமல்ல வேல்..
வளைக் கரம்தனிலும் வேல்!..
போர் முரசு காதில் ஒலிக்கின்றது..
கனல் அணையாது காக்க
ReplyDeleteநிச்சயம் இது போன்ற கவிதைகள்
அடிக்கடி அவசியம்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
#நடுநிசியில் பெருநெருப்பாய்
ReplyDeleteநகர்ந்து நீயும் எங்கே வந்தாய் ?...#
உங்கள் கனவு நனவானால் நல்லது !
த ம 2
மனதைத் தொடும் வரிகள். பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் உயிர்த்துடிப்பு என்னையும் மெய் கலங்க வைத்தது... உணர்வுகள் வார்த்தையாக பிறந்த விதம் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகும் அருமையான வரிகள் அம்மா...
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
ஓங்கு புகழ்தரும் ஒப்பில் நெறிகளைத்
தாங்குமே அம்பாள் தமிழ்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
"//ஊளையிடும் நரிகளுக்கு
ReplyDeleteஉன்னால் தான் முடிவு பிறக்கும்
கோழையல்ல தமிழினத்தின்
கொள்கை நிலைத்திடும் நீ வா தாயே ...//"
- அருமை சகோதரி வாழ்த்துக்கள்.
அருமையான படமும் பகையை வெல்ல வேண்டும் எனும் ஆதங்கம் மிளிர புனைந்த கவிதை அருமைதோழி வாழ்த்துக்கள்....!
ReplyDeleteமனதைத் தொட்ட கவிதை.
ReplyDeleteஅன்னையை போற்றும் அற்புத கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDelete"அன்பு செய்ய வந்தவளே எம்மை
ReplyDeleteஆதரித்து நின்றவளே
உயர் பண்பதனால் உருவானவளே
உத்தமியே கொஞ்சம் நில்லு..." என
தமிழர் நிலை சொன்னீர்
பாராட்டுகள்