நலிந்து கிடக்கும் உள்ளத்தைத்
தட்டி எழுப்பிய துரதிஸ்டம்
அதன் இஸ்டம்போல ஆட்டிவித்தால்
இதயத் துடிப்பு எப்படி இருக்கும்!.....
கணக்கில் இட்டால் தாங்காது பின்
கண்கள் இரண்டும் தூங்காது வரும்
வழக்கில் மட்டும் புலனைச் செலுத்திக் கொண்டால்
வருந்தும் மனம்தான் என்ன செய்யும்.........
மறந்து போக நினைப்பதையே
மறக்க முயன்று தோற்றுப் போகும்
அவரவர் குணத்திற்கேற்ப பாதிப்புகள்
குறைந்த பட்சம் வந்தே தீரும்!......
தவிர்க்க முடியாத் தண்டணை இதைத்
தவிர்த்துக்கொள்ள ஒரே ஒரு வழி
அம்மன் துதியே அவ்வழியாகும்
அகிலம் போற்றும் நல்வழியாகும்!.....
சொல்லும் பொருளும் மனச் சோர்வைச்
சிதைத்தே வாழ்வில் இன்பம் தரும்
இனிய இசைக்கு மயங்காத ஓர்
இதயம் உண்டோ சொல் இவ்வுலகினிலே!....
அரிய பாடல்கள் இதைக் கேட்டே
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
உரிய முறையில் பயிற்சிகளை ஊட்டி
எம் சந்ததியையும் வளர்த்திடுவோம்.....
சொல்லும் பொருளும் மனச் சோர்வைச்
ReplyDeleteசிதைத்தே வாழ்வில் இன்பம் தரும்
இனிய இசைக்கு மயங்காத ஓர்
இதயம் உண்டோ சொல் இவ்வுலகினிலே!....
இனிய பாடல் ..பாராட்டுக்கள்..
மிக்க நன்றி சகோதரி வவுக்கும் இனிய கருத்திற்கும் .
Deleteஅருமையான பாடல்... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வவுக்கும் இனிய கருத்திற்கும் .
Deleteகவிதையும் அதற்கேற்ற பாடலும் அருமை! நன்றி!
ReplyDelete