2/19/2013

காவல் தெய்வம் நீ எங்கே!......



ஏழரைக் கோடி மக்களைக் கொன்ற
அரக்கனின் வாழ்வும் சிறப்புறும் போது
ஒரு பாவமும் அறியாப் பாமர மக்கள்
பயந்தென்றும் வாழும் நிலை தகுமோ!

மாவிலைத் தோரணம் ஆடவும் இல்லை
மனதினில் வந்த துயர் போகவும் இல்லை
சாவினைத் தழுவிய சந்ததி இதற்க்கு
இச் சங்கடம் மேலும்  தொடர்வது எதற்கு!

நீதியை அநீதி புறக்கணிப்பதனால்
நித்தமும் வாழ்வில் சித்திரவதைதான்
எம்மை நாடி வந்த இத் துயர் தீர்ப்பவர் யாரோ!
நன்மைகள் தினம் அருளும் எம்பிரானே!

எத்தனை சாட்சிகள் வந்தும் என்ன
மனசாட்சி அற்ற மனிதர்கள் முன்னே !
இத்தனை காலமும் பொறுத்தது போதும்
இக்கரைக்கும் அக்கரைக்குமாய்  என்ன வாழ்க்கை!

ஓடி ஓடி அலுத்த பாதங்கள்
ஓரிடத்தில் நிற்ப்பது எப்போ!
வாடிக் குரல்வளை அடங்கும் முன்னே
வையகத்தில் எமக்கொரு தீர்ப்புச் சொல்லு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. எத்தனை சாட்சிகள் வந்தும் என்ன
    மனசாட்சி அற்ற மனிதர்கள் முன்னே !//
    உண்மைதான் என்ன செய்வது முடியலையே

    ReplyDelete

  2. மீண்டும் எழுவோம்! விளைந்த துயருக்கு
    வேண்டும் உலகில் விடை!

    ReplyDelete
  3. மனச்சாட்சியே இல்லை.... அவர்கள் மனிதர்களே இல்லை...

    ReplyDelete
  4. வேதனை வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........