அடக்கு முறைக்குள்
சிக்குண்டு தவிக்கும் எம்
நாவுக்கு விடுதலை கொடுத்துப் பார்
உன் படை பலம் தோற்கும் !
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் எதனையும் வென்று காட்ட
புத்தியுள்ள மனிதர்களுக்கு
சக்தி கிடைத்தால் போதுமிங்கே!
குத்திக் குத்தி உடல்களைக் கிழித்து
அச்சம் ஊட்டி வென்ற வெற்றி
எச் சமயத்திலும் தோற்க்கும்
தோற்றால் உன்றன் நிலைமை என்ன!
காட்டு மிராண்டித் தனத்திற்கும்
இந்தக் கையாலாகத் தனத்திற்கும்
வேட்டு வைக்க ஒரு நாள் வரும்
வரும் வரைத்தான் இத்துன்பம்!
மாட்டைப் போல சொன்னது கேட்டு
மடியில் இருப்பதை உன்னிடம் தந்தும்
ஏன் நாம் ஏட்டுக் கல்வியைத் தொடர வேண்டும்
இதுதான் இறுதியில் வெல்லும் பார்!
மேனியெங்கும் குத்திக் கிழிக்கும்
ReplyDeleteஅறியாமை எனும்
ஆணியின் கூரினை மழுங்க வைத்திட
கசடக் கற்றிடு இன்றே...
அதையும் வாழ்வினில் ஏற்றிடு நன்றே...
மிக்க நன்றி சகோதரரே இனிய நற் கருத்தினால் என்றும் மனம்
Deleteமகிழ வைக்கும் தங்களுக்கு !
ஏற்றமிகு கருத்தொன்றை தோழர் மகேந்திரன் படைத்திட்டார் இங்கே. அதை நான் ஆமோதிக்கிறேன் நன்றே! பயன் தரம், ரசனைமிகும் கவிதை தந்திடும் அம்பாளடியா ளெனும் குணக்குன்றே! வாழி நீவீர்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தங்களைப் போன்றவர்களின் வாழ்த்துரை
Deleteஒன்றே போதும் இன்பக் கவிதை என்றும் இனிதே மலரும் !
கற்ற அறிவைப் போல் பயனுள்ளது வேறு ஒன்றும் இல்லை.
ReplyDeleteகல்வி செல்வத்தை கொடுக்கும் வறுமையைப்போக்கும்.
சுய மரியாதையையும் யதேச்சாரிகத்தை எதிர்க்கும் மன
வலிவையும் அளிக்கும்.மகா கவி பாரதியை நினைப்பூட்டும்
கவிதை உங்களுடையது.
என்றும் மனம் குளிரவைக்கும் கருத்துரைகள் உங்களது !
Deleteநன்றி மிக்க நன்றி சகோதரரே ......
அப்படிச் சொல்லுங்க... (கருத்துரை சொன்னவர்களுக்கும்)
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
வாருங்கள் சகோ ! நான் கருத்திடாது போனாலும் தொடர்ந்தும் என் ஆக்கங்களுக்கு ஊக்குவிப்புக் கொடுத்து வரும் தங்களின் கருத்துரைகளை நான் மிகவும் மதிக்கின்றேன் .மிக்க நன்றி !
Deleteஅடக்கு முறைக்குள்
ReplyDeleteசிக்குண்டு தவிக்கும் எம்
நாவுக்கு விடுதலை கொடுத்துப் பார்
உன் படை பலம் தோற்கும் !.........
அருமையான வரிகள் உள்ளத்தை தொட்டு ஆக்ரோஷ்த்தை கொடுக்கும் வரிகள்
உங்கள் கவிதைகள் அனனத்தும் ஒலி யும் ஒளியும் கொடுக்கும் கவிதைகள் நான் படித்த வரை( நான் புதுசு பதிவுலகதிர்க்கு )
வணக்கம் ! தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் .
Deleteமிக்க மகிழ்ச்சி வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .
சிக்குண்டு தவிக்கும் தங்கப் புதையல்
ReplyDeleteதரணியி லின்றும் தோண்டி யெடுக்கஎங்கும்
சக்தியிடு சாட்டையடி வீழுமதிர் தானெழும்
தாகம்திகை தாளும் உனது............
மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !...
Deleteவீரமிகு வீரிய வரிகள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !...
Delete