2/26/2013

நீதி செத்துப் போனதா இங்கே!....



வாரங்கள் நான்கிலும்
வருந்தித்தான் பிழைக்கின்றோம்
ஏனம்மா எமைப் படைத்தாய்
ஏக்கம் கொண்டு வாழ்வதற்க்கா!

சாவுக்கே சாவு மணி
சர்ச்சை இன்றி நாம் அடிப்போம்
நீ வந்து துணை நின்றால்
நீங்காதோ எத் துயரும் !

கோரப் பல் முகம் காட்டி
கொடியவர்கள் ஆட்சி செய்ய
நீதிக்குத்  தண்டணையை
நெஞ்சமிங்கே ஏற்றிடுமா!

போருக்கு அழைத்தவர்களும்
போகுகின்றனரே  பாராளுமன்றம்
போர்க் குற்றவாளி என்று எம்மைப்
போகும் இடம் எல்லாம் சொல்லிவிட்டு!

யாருக்குத்தான் தெரியாது
யாதும் இங்கே போலியென்று பிறர் அறிய
சேதத்தை எடுத்துரைத்தும்
சேதாரம் செய்கின்றனரே அது எதற்கு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. எல்லாமே அரசியல்

    ReplyDelete
  2. போருக்கு அழைத்தவர்களும் 
    போகுகின்றனரே  பாராளுமன்றம்
    போர்க் குற்றவாளி என்று எம்மைப்
    போகும் இடம் எல்லாம் சொல்லிவிட்டு!... ////

    அருமையான வரிகள் சகோ! உணர்வு மிக்க கவிதை!!

    ReplyDelete
  3. //சேதத்தை எடுத்துரைத்தும் மேலும் எம்மை
    சேதாரம் செய்கின்றனரே அது எதற்கு !!!!.....//

    உண்மை தான்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........