12/20/2013

விலங்கினமாகிரான் மனிதன்விலங்கினமாகிரான் மனிதன்
விம்மியே அழுகிறான் புனிதன்
பணம் தரும் துன்பம் இது போதும்
பராசக்தி உன்னருளே வேண்டும் ...

விலையுயர் வாழ்விதன் எல்லை
வித வித மான பெரும் தொல்லை
இருண்டிடும் உலகினில் தாயே
இன்னருள் புரிந்திடுவாயே .....

கொடி மலர்க் கம்பங்கள்  சிரிக்கக்
கொஞ்சிடும் சலங்கைகள் ஒலிக்க
இனியன பேசிட வரமருள் வாய்
இகபர சுகமெல்லாம் அருள்பவளே ...

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
செந்தூரப் பொட்டே புன் சிரிப்பே
எண்ணாமலே துயர் வந்து போக்கிடுவாய்
எம் சக்தி பரா சக்தித் தாயே அம்மா ....

கண்ணொன்று காட்சியது வேறாகுமா
கருணைக்குப் பெயர் பெற்ற தாயே அம்மா
பொன் விளையும் பூமியிதன் நலனைக் காக்கும்
பொக்கிசமாய் நீயமர்ந்தால்  போதுமம்மா ........

                                                                           தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

25 comments:

 1. வரமருளத் தாயினை வேண்டி!
  வழங்கினை பாவொன்று பாடி!
  கணந்தோறும் வேண்டும் உன்றன்
  கவலையெலாம் தீர்த்திடுவாள் காண்பாய்!

  பாமாலை மிக மிக அருமை!
  நல்லருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகிறேன் தோழி!

  த ம.1

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 2. வரமருளத் தாயினை வேண்டி!
  வழங்கினை பாவொன்று பாடி!
  கணந்தோறும் வேண்டும் உன்றன்
  கவலையெலாம் தீர்த்திடுவாள் காண்பாய்!

  பாமாலை மிக மிக அருமை!
  நல்லருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகிறேன் தோழி!

  த ம.1

  ReplyDelete
 3. பொன் விளையும் பூமியிதன் நலனைக் காக்கும்
  பொக்கிசமாய் நீயமர்ந்தால் போதுமம்மா ...
  >>
  நல்ல வேண்டுதல்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராஜி வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 4. அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 5. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 6. வணக்கம்
  சகோதரி
  கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 7. வணக்கம்
  த.ம5வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. சிறப்பான கவிதை தோழி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராடிற்கும் .

   Delete
 9. //இருண்டிடும் உலகினில் தாயே
  இன்னருள் புரிந்திடுவாயே .....//

  அருமையான இனிமையான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete

 10. வணக்கம்!

  காடும் நிறைந்திடும்! கள்ள மனிதா்கள்
  தேடும் பொருளின் திரட்டு

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 11. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 12. பொன் விளையும் பூமியிதன் நலனைக் காக்கும்
  பொக்கிசமாய் நீயமர்ந்தால் போதுமம்மா ........//

  அன்னை பூமி நலன் காப்பாள்!
  வாழ்த்துக்கள் கவிதைக்கு.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........