அங்கமெல்லாம் புண்ணாகிப்
பாடையிலே போகும் போது
பருத்தி மட்டும் சிரித்ததடா!
மானம் காக்கப் பிறந்தவனை
மரம் போல் எண்ணி வாழ்ந்தவர்கள்
வாடும் போது மனம் வாடாமல்
வாட்டும் போது அழுதார் ஏன்!
கூடு விட்டுப் பறந்த பின்னால்
கொந்தளிக்கும் மன நலத்தைக்
காடுவரைச் சுமப்பவரா
கருணையுள்ள மனிதரிங்கே!
வாழும் போது வாழ்த்துவதும்
வறுமை நிலையைப் போக்குவதும்
தேடற்கரிய சுகம் என்று
தெரிந்தால் மட்டுமே வாழ்வுண்டு!
இயேசு நாதர் போல் புத்தர்
எங்கும் நிறைந்த காந்தி மகான்
பாசம் மிகுந்த மனிதர்கள்
பாதை எதுவோ அதைப் பாரீர்!
வாசம் நிறைந்த மல்லிகையாய்
மலர்ந்தார் மக்களை வாழ வைத்தார்!
தேசம் விட்டுப் போன பின்பும் நாம்
தேடிக் கொண்டாடிடும் தெய்வங்கள்!
கவிதை மிக அருமை சகோ.
ReplyDeleteபாராட்டுகள்.
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஇயேசு நாதர் போல் புத்தர்
ReplyDeleteஎங்கும் நிறைந்த காந்தி மகான்
பாசம் மிகுந்த எம் தலைவன்
பாதை எதுவோ அதைப் பாரு ..!!!!
வாசம் நிறைந்த மல்லிகையாய்
மலர்ந்தார் மக்களை வாழ வைத்தார்
தேசம் விட்டுப் போன பின்பும் நாம்
தேடிக் கொண்டாடிடும் தெய்வங்களாய் !!!! //
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteவரிகள் மிகவும் சிறப்பு அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteகவிதை மிக அருமை சகோதரி. உண்மை தான். கடையில் பட்டு சேலை விற்கும் விற்பனைப் பெண்கள், அதைத் தொட முடியுமே தவிர அணிய முடியாது.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் .
Delete//வாழும் போது வாழ்த்துவதும்
ReplyDeleteவறுமை நிலையைப் போக்குவதும்
தேடற்கரிய சுகம் என்று
தெரிந்தால் மட்டுமே வாழ்வுண்டு ...///
வாழ்வியல் யதார்த்தம்,
அருமை சகோதரியாரே நன்றி
மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteவாசம் நிறைந்த மல்லிகையாய் கவிதை வடித்த எங்கள் கவிதாயினி படிக்கும் எங்கள் மனங்களையே மலரச்செய்தார் கும்மென்று. ;)
ReplyDeleteஅவர் என்றும் வாழ்க வாழ்கவே!!
மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்திற்கும் .
Deleteஅருமையான கவிதை தோழி. வாழ்த்துகள் !!!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
Delete
ReplyDelete"இயேசு நாதர் போல் புத்தர்
எங்கும் நிறைந்த காந்தி மகான்
பாசம் மிகுந்த எம் தலைவன்
பாதை எதுவோ அதைப் பாரு...!" என்
கருத்துகளை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி...
த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஅருமையான வரிகள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteகூடு விட்டுப் பறந்த பின்னால்
ReplyDeleteகொந்தளிக்கும் மன நலத்தைக்
காடுவரைச் சுமப்பவரா
கருணையுள்ள மனிதரிங்கே ?...!!!!!
வாழும் போது வாழ்த்துவதும்
வறுமை நிலையைப் போக்குவதும்
தேடற்கரிய சுகம் என்று
தெரிந்தால் மட்டுமே வாழ்வுண்டு ...
வருந்திடும் மனது கண்டு உன்
வலையினில் விழுந்தேன் பெண்ணே
கொதித்திடும் உள்ளம் கண்டு பனித்தன கண்கள்
உன் உள்ளத்து மனிதம் கண்டு இனித்தது நெஞ்சம்
என் இனிய தோழியே அருமையான வரிகள் என்னை ஆட்கொண்டன.
சக்கை போடு போடு ராணி
சக்களத்தி போரு மாதி
மிக்க நன்றி ...! தொடர வாழ்த்துக்கள்....!
மிக்க நன்றி தோழி தங்கள் வரவும் இனிய நற் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் !
Deleteஉண்மை தோழி!
ReplyDeleteமகத்தானவர்களை மாள்வதில்லை.
எங்கள் இதயங்களில் என்றும்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்!
மிக மிக அருமை! வாழ்த்துக்கள்!
த ம.5
மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Delete/ இயேசு நாதர் போல் புத்தர்
ReplyDeleteஎங்கும் நிறைந்த காந்தி மகான்
பாசம் மிகுந்த எம் தலைவன் /.... எம் தலைவன்....?
தமிழீழ மக்களின் இதயத்தில் குடியிருப்பவன் ,நாம் வணங்கும் தெய்வம் எவனோ அவனே எம் தலைவனும் .மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் .
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராடிற்கும் .
Deleteகாந்தி அகிம்சை கருணைதரும் புத்தனாய்
ReplyDeleteஏந்திட எண்ணும் தலை !
தலைவன் புகழ்தீட்டும் தாங்கா கவியில்
அலையும் உனக்காய் அழும்!
என்னினிய உள்ளத்தில் ஏகாந்த மாயுறையும்
வன்னித் தலைவனை வாழ்த்து
எல்லாக் குறளும் எடுத்தியம்பும் உண்மையிலே
சொல்லும் உணர்வே சுகம் !
அருமை அருமை அக்கா
வாழ்த்துக்கள் இனிய நத்தார்தின வாழ்த்துக்களும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களும்
வாழ்க பலமுடன்
''வாழும் போது வாழ்த்துவதும் வறுமை நிலையைப் போக்குவதும்
ReplyDeleteதேடற்கரிய சுகம் என்று தெரிந்தால் மட்டுமே வாழ்வுண்டு ..'' உண்மையிலேயே தேடற்கரிய சுகம்தான் அது. வாழ்த்துக்கள். உங்களைப் போல நல்லவற்றை நினைப்பதற்கு நாலு பேர் இருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது