அழகென்ன அழகென்று
அகம் வியந்து நிற்கிறது!
இயற்கை அதன் அழகு கண்டே
இதயம் பறி போகிறது!
மனப் பாறை குளிர்ந்திடத்தான்
மழையும் இங்கே பொழிகிறது!
மனிதன் இனப்போரை நடத்துவதால்
மனதில் இன்பம் குறைகிறது!
அகத் தூய்மை இல்லாதார்
அறிவாரோ இத் துயரை!
அன்று தொட்டு இன்று வரை
அதே கேள்வி எழுகிறது!
குண்டு மழை பொழிந்துலகைக்
குப்பை மேடாய் ஆக்கி வைக்கும்
பண்பிழந்த மனிதர்கட்கு நல்ல
படிப்பினையை யார் தருவார்!
எங்கும் உயிர்கள் போகிறது!
எதிலும் குறைகள் நேர்கிறது!
அரசியலில் இதுவெல்லாம்
அவசியமாய்ப் படுகிறது!
அந்த நாடு இந்த நாடு
எந்த நாடு என்ற போதினிலும்
சொந்த நாட்டைக் காப்பதற்கே
சூழ்ச்சி செய்வார் உலகினிலே!
ஒட்டுமொத்த நாட்டினிலும்
இன ஒழிப்பை எதிர்த்து வந்தால்
கட்டித் தங்கம் இவர்களைத்தான்
கடவுள் என்றும் நாமுரைப்போம்!
கட்டித் தங்கம் இவர்களைத்தானே
ReplyDeleteகடவுள் என்றும் நாமுரைப்போம்
>>
அப்படிப்பட்ட கடவுளை காண நமக்கு இன்னும் நேரம் வாய்க்கவில்லை அக்கா!
சித்திக்க வேண்டிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா...
ReplyDelete//குண்டு மழை பொழிந்துலகைக்
ReplyDeleteகுப்பை மேடாய் ஆக்கி வைக்கும்
பண்பிழந்த மனிதர்கட்கு நல்ல
படிப்பினையை யார் தருவார் ????...!!!!///
????
//கட்டித் தங்கம் இவர்களைத்தானே
ReplyDeleteகடவுள் என்றும் நாமுரைப்போம்.//
கட்டித்தங்கம் போன்ற கவிதை தந்துள்ள கட்டித்தங்கத்திற்கு நன்றிகள்.
இன்னும் ஜூஸ் சாப்பிடவே வரவில்லையாக்கும். ;(
http://gopu1949.blogspot.in/2013/11/85-2-2.html
மனிதன் இனப் போரை நடத்துவதால்
ReplyDeleteமனதில் இன்பம் குறைகிறது!..
அகத் தூய்மை இல்லாதார்
அறிவாரோ இத் துயரை
அன்று தொட்டு இன்று வரை
அதே கேள்வி எழுகிறது!..
நிதர்சனமான உண்மை. நெஞ்சை சுடுகின்றது.
கவிதையாக்கம் மிக நன்று..
நல்ல கவிதை.....
ReplyDeleteத.ம. 3
படங்களும் கவிதை பாடுகின்றன,, பாராட்டுக்கள்..!
ReplyDeleteசிந்தனையை தூண்டவைத்த கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனந்தொட்ட கவிதை தோழி!
ReplyDeleteஎன்றுதான் விடியப் போகிறதோ?
வாழ்த்துக்கள்!
த ம.4
சீக்கிரம் விடியல் வரட்டும்...
ReplyDeleteகமலின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது ...
ReplyDeleteகடவுள்இல்லேன்னு சொல்லலே ,இருந்தா நல்லதுன்னுதான் சொல்றேன் !த .ம 7
கமலின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது ...
ReplyDeleteகடவுள்இல்லேன்னு சொல்லலே ,இருந்தா நல்லதுன்னுதான் சொல்றேன் !த .ம 7
எங்கும் உயிர்கள் போகிறது
ReplyDeleteஎதிலும் குறைகள் நேர்கிறது
அரசியலில் இதுவெல்லாம்
அவசியமாய்ப் படுகிறது ......//சரியாக சொன்னீர்கள் சகோதரி.இனியாவது நல்ல காலங்கள் பிறக்கவேண்டும்.
அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்...
ReplyDeleteநல்ல கவிதை...