காரிருள் கண்களை மறைத்தாலும் நான்
கைதொழும் தெய்வம் நீ என் தாயி ....
பேரருள் பெற்றிட வரமருள்வாய்
பெருமையோ சிறுமையோ கொள்ளாமல்
நாரொடு மலர்போல் இணைந்தவளே
நறுமணம் வீசிடும் என் தாயி .....
வேரொடு பகைக்கும் நிலை வரினும்
வரம் வேண்டியே தொழுவேன் உனை நானே ....
மாறிடும் வையகம் ஒரு நாளில்
மலர் விழி திறந்திங்கு நீ பார்த்தால்
தேறிடும் உயிர் வளம் உகமெலாம்
தேவியுன் புன்னகைப் பூ பூத்தால் ...
மேவிடும் துயர்களைக் களைபவளே
வெண் மேகமாய் ஊர் வலம் வருபவளே
என் ஆவியே பொருளே அங்கமே நீ
ஆனந்தக் கூத்துகந் தாடிடுவாய் ........
அம்பாளடியாள்
எல்லா துயர்களையும் சக்தி களைவார்கள் அம்மா... வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .
Deleteநீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -
ReplyDeleteதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...
விளக்கம் :
http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html
நிட்சயம் முயற்சி செய்கின்றேன் சகோதரா .உடல் நலக் குறைபாடு அறுவைச் சிகிச்சை ஒன்றினைத் தொடரவிருக்கும் இத் தருணத்தில் முடிந்தவரை முயற்சி செய்து பார்கின்றேன் ஒரு வேளை இப் போட்டியில் கலந்து கொள்ள முய்டியாமல் போனால் மன்னிக்கவும் சகோதரா .
Deleteதோடி ராகத்தில் பாட இயலும் வகையில் கவிதை மிக்க சிறப்புடைத்து.
ReplyDeleteஓடி வரும் அனைவருக்கும் தேடி வந்தருள் புரியும் தாயி அவள்.
எனினும்,
அம்பாள் அடியாள் அவர்கள்
ஏசு பிரான் பாடலைக் கேட்டாரா எனத் தெரியவில்லை.
வாயைத் திறக்கலாமா என
தாயையே கேட்டு நின்றேன்.
சுப்பு தாத்தா.
பாடுங்கள் சுப்புத் தாத்தா உங்கள் அம்பாளடியாளின் இப் பாடல்களைப்
Deleteபாடுவதற்கு அனுமதி எதற்கு ?...இஜேசு நாதரைப் போற்றி நான் எழுதிய ஆக்கமும் பாடலாக வெளியிட்டுள்ளீர்களா ?..மன்னிக்கவும் தாத்தா நான் அதைக் கவனிக்கவில்லை .முடிந்தால் அதன் லிங்கை எனக்குக் கொடுங்கள் நானும் நன்றியோடு கேட்டு மகிழ்கின்றேன் .
நீங்கள் இங்கேயும் இந்த பாடலை சுப்பு தாத்தா பாட கேட்கலாம். ராகம் சஹானா.
Deletesubbu thatha
மீனாச்சி பாட்டி.
மிக்க நன்றி சுப்புத் தாத்தா .
Delete//மாறிடும் வையகம் ஒரு நாளில்
ReplyDeleteமலர் விழி திறந்திங்கு நீ பார்த்தால்
தேறிடும் உயிர் வளம் உகமெலாம்
தேவியுன் புன்னகைப் பூ பூத்தால் ..//
ஆஹா, மேங்கோ ஜூஸ் போல இனிக்கும் வரிகள் ;) பாராட்டுக்கள்.
மிக்க நன்றி கோபாலகிருஸ்ணன் ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteசக்தியின் கருணை எல்லையில்லாதது. கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் பாராடிற்கும் .
Deleteமேவிடும் துயர்களைக் களைபவளே
ReplyDeleteவெண் மேகமாய் ஊர் வலம் வருபவளே
என் ஆவியே பொருளே அங்கமே நீ
ஆனந்தக் கூத்துகந் தாடிடுவாய் .....
ஆனந்தப் பகிர்வுகள்..அருமை..!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராடிற்கும் .
Deleteமாறிடும் வையகம் ஒரு நாளில்
ReplyDeleteமலர் விழி திறந்திங்கு நீ பார்த்தால்
தேறிடும் உயிர் வளம் உலகமெலாம்
தேவியுன் புன்னகைப பூபூத்தால் ...
நிதர்சனம்.. அம்மன் தரிசனம்.
அன்பின் சகோதரி.. உடல் நலக்குறைவு என்று எழுதியிருப்பதைக் கண்டு வருத்தமுற்றேன். கவலை வேண்டாம். அன்னை அவள் கவனித்துக் கொள்வாள்.
மிக்க நன்றி ஐயா என் மீதும் என் கவிதைகள் மீதும் தாங்கள்
Deleteகொண்டுள்ள அன்பிற்கு .
நீங்கள் இங்கேயும் இந்த பாடலை சுப்பு தாத்தா பாட கேட்கலாம். ராகம் சஹானா.
ReplyDeleteமீனாச்சி பாட்டி.
மிக்க நன்றி சுப்புத் தாத்தா .
ReplyDeleteதுயரங்கள் நீங்க அருள் புரியட்டும்......
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteமேவிடும் துயர்களைக் களைபவளே//
ReplyDeleteஎல்லா துயர்களையும் களைந்து வளம் சேர்ப்பாள் வாழ்வில்..
வாழ்த்துக்கள்.