அடிமை விலங்குகள் தெறிக்கட்டும்
அகதி வாழ்விது முடியட்டும்
கொடிய விலங்குகள் திருந்தட்டும்
கொட்டு முரசு நீ கொட்டு பாரதியே .....
விடிய விடிய சுதந்திரத்தை
விழித்திருந்து பெற்றவனே
மடியும் யுகத்தைப் பார்த்தாயா ?...!!
மறுபடியும் நீ வர வேண்டும் ...
நெடிய பார்வைக் கணை வீசி
நெருப்பை வெல்லும் பாவலனே
பொதிகை மலையில் அமர்ந்தவனைப் போல்
பொங்கி எழுந்து நீ வர வேண்டும் ........
அசுர குலத்தின் அழிவுக்கோர்
அடிக்கல் நாட்டித் தர வேண்டும்
இடியும் மின்னல் மழையோடும்
இருண்ட கண்டம் விடியட்டும் ...
துணிச்சல் மிகுந்த பாவலனே
தும்பைப் பூ நிற மனத்தவனே
இனிக்கும் ஒரு நாள் இந்நாளாம்
இனியவன் நீ பிறந்த பொன்னாளாம் ....
//இனிக்கும் ஒரு நாள் இந்நாளாம்
ReplyDeleteஇனியவன் நீ பிறந்த பொன்னாளாம் ....//
மகா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...
மகா கவி மேல் கவிபாடியுள்ள கவிதாயினியும் வாழ்க, வாழ்கவே ! ;)
பாரதியின் பிறந்த நாளை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி. இன்று பாரதி மீண்டும் வந்தால், எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது இந்த பாரதம் என்று வருந்தி, மீண்டும் "நெஞ்சுப் பொருக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட அரசியல்வாதிகளைப் பார்த்தால்" என்று பாடுவார்.
ReplyDeleteநெஞ்சம் கொண்ட
ReplyDeleteதனல் உணர்வுகளை
பஞ்சமில்லாது படைத்த
முண்டாசுக் கவிக்கு
பாடிய பிறந்தநாள் பாமாலை
மிகவும் அழகு சகோதரி.
மகாகவி பாரதியின் நினைவினைப் போற்றுவோம்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபாரதிக்கு புனைந்த சிறப்புக்கவிதை அருமை வாழ்த்துக்கள்
எனது புதிய வலைத்தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உணர்வுபூர்வமான கவிதை. பாரதி வந்தால் நிச்சயம் பாராட்டுவான்.
ReplyDeleteசிறப்புத்தின சிறப்புப் பதிவு
ReplyDeleteவெகு அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
பாட்டு மிகவும் சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அசுர குலத்தின் அழிவுக்கோர்
ReplyDeleteஅடிக்கல் நாட்டித் தர வேண்டும்
இடியும் மின்னல் மழையோடும்
இருண்ட கண்டம் விடியட்டும் ...
விடியாத பொழுது என்று எதுவுமே இல்லை.
நிச்சயம் ஒரு நாள் விடிந்தே தீரும்..
அசுரர் குலம் மடிந்தே தீரும்!..
துயரும் இருளும் முடிந்தே தீரும்!..
https://www.youtube.com/watch?v=JAuAAlVKlEM
ReplyDeleteகா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...
மகா கவி மேல் கவிபாடியுள்ள கவிதாயினியும் வாழ்க, வாழ்கவே ! ;)
subbu thatha
www.subbuthatha72.blogspot.com
ஆஹா! அருமை!
ReplyDeleteபாரதியின் பிறந்த நாளில் சிறப்பானதோர் கவிதாஞ்சலி....
ReplyDelete