நிலவு தேய்ந்து வளர்வது போல் சில
நினைவும் தேய்ந்து வளருதே!
இறைவன் இல்லை என்றவர் முன்
இரண்டு விழியும் நனையுதே!
உனதருமை பெருமையெல்லாம்
உணர்த்தும் நல்ல நேரமே!
உலக மக்கள் நன்மைக்காக
உயிர் துறந்த தேவனே!
எளிமையான தோற்றத்தோடு
எங்கும் உலாவும் சக்தி நீ!
இருள் கடத்தி ஒளி பரப்பும்
இன்பமான சோதி நீ!
சிலுவையிலே தொங்கும் காட்சி
சிந்தை அதை வாட்டுதே! நீ
மறுபடியும் பிறந்த செய்தி
மனதில் இதம் ஊட்டுதே!
இரக்கமுள்ள இஜேசுவின்
இன்முகத்தைக் காணவே
பரந்து விரிந்த சமூகத்தில்
பல சமையமும் நிக்குதே!
மன வினைகள் போக்கும் தேவன்
மலர்ப் பதத்தைத் தொட்டதும்
இருந்த துன்பம் பறந்து மீண்டும்
இளமை நெஞ்சில் பொங்குதே ....
மிகவும் சிறப்பு அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா .
Delete//சிலுவையிலே தொங்கும் காட்சி
ReplyDeleteசிந்தை அதை வாட்டுதே நீ
மறுபடியும் பிறந்த செய்தி
மனதில் இதம் ஊட்டுதே .......//
அருமையான ஜூஸ் .. ஸாரி .. இனிமையான கவிதை. பாராட்டுக்கள். ;)
:)))) மிக்க நன்றி ஐயா மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஎளிமையான தோற்றத்தோடு
ReplyDeleteஎங்கும் உலவிய சக்தி நீ!..
இருள் கடத்தி ஒளி பரப்பும்
இன்பமான ஜோதி நீ!..
பறவைகளுக்குக் கூடு உண்டு.. விலங்குகளுக்கு வளை உண்டு. மனித குமாரனுக்கு தலை சாய்க்கவும் இடமில்லை!..
- என்ற எளிமையின் சின்னம் - ஸ்ரீஇயேசு பிரான்.
அவர் எல்லாரையும் ஆசீர்வதிக்கட்டும்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .
Deleteஇறையரு ளோங்கும் இயேசு பிறப்பால்
ReplyDeleteகுறையகலக் கூடும் குளிர்வு!
இயேசுபிரான் பக்திப் பாமாலை சிறப்பு!
வாழ்த்துக்கள் தோழி!
கிறிஸ்துமஸ் வரும் மாதத்தில் இயேசுபிரான் பற்றிய அருமையான கவிதை. பாராட்டுகள் சகோ.
ReplyDeleteஅருமையான கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteநிலவு தேய்ந்து வளர்வது போல் சில
ReplyDeleteநினைவும் தேய்ந்து வளருதே ....
இறைவன் இல்லை என்றவர் முன்
இரண்டு விழியும் நனையுதே ........
வளமிகு உவமை! இயேசுவின் பெருமை!
உளமதில் ஊன்றிய கவிதை அருமை!
மன வினைகள் போக்கும் தேவன்
ReplyDeleteமலர்ப் பதத்தைத் தொட்டதும்
இருந்த துன்பம் பறந்து மீண்டும்
இளமை நெஞ்சில் பொங்குதே ....//
துன்பம் நீக்கி மகிழ்வு தரும் மலர்ப் பதத்தை துணையாக கொள்வோம்.
வாழ்த்துக்கள்.