வலிமையுள்ள மனிதனாக
வாழ்ந்து காட்ட வேண்டும் !
எளிமையான வாழ்வுக்கே
இடமளிக்க வேண்டும்!
தனிமையிலும் இனிமை காண
தன்னடக்கம் வேண்டும் !
தரணியெல்லாம் போற்றும் வகை
தயவு நெஞ்சில் வேண்டும்!
கலியுகத்தின் போக்கை மாற்ற
கருணை தம்முள் வேண்டும் !
கடவுள் என்றும் கொண்டாட
கடமை உணர்தல் வேண்டும் !
பழியுணர்வை போக்க வல்ல
பாசம் இங்கே வேண்டும் !
பகைவரையும் மன்னிக்கும்
பக்குவமும் வேண்டும் !
மனித குலம் உயிரினத்தை
மதித்து வாழ வேண்டும்!
மரணம் வரும் என்ற போதும்
மனதில் உறுதி வேண்டும் !
எவர் கொடுமை செய்தாலும்
எதிர்த்து நிற்க வேண்டும் !
எதிரிக்கும் வாழ்வளிக்கும்
இரக்க குணம் வேண்டும் !
கருவினிலே சுயநலத்தைக்
கலைத்து விட வேண்டும் !
கடவுள் பக்தி நேசமுடன்
கருத்துரைக்க வேண்டும் !
பொதுநலமாய் சிந்திக்கும்
பொறுப்பு மிக வேண்டும் !
பொன்போன்ற மனம் வாழ
பொறுமை காத்தல் வேண்டும் !
வணக்கம்
ReplyDeleteஅம்மா
காந்தி இருந்திருந்தால் இப்போ நடக்கும் நிகழ்வு கண்டு கண்ணீர் வடித்திருப்பார்...
காலம் உணர்ந்து கவி பாடிய விதம் வெகு சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
ReplyDeleteதம +1
ரொம்ப கஷ்டம்தான் போலிருக்கு :)
ReplyDeleteநற்குணங்களை போதிக்கும் கவிதைக்கு நன்றி.
ReplyDeleteஒவ்வொரு வரியும் மிகவும் சிறப்பானவை அம்மா...
ReplyDeleteசொற்செறிவும் பொருட்செறிவும் ஒருங்கே இணைந்த இந்த பாடல்,
ReplyDeleteஒவ்வொரு மனிதனும் மகாத்மா ஆக வழி ஒன்றை காட்டுகின்றது என்றால்
மிகையல்ல.
அம்பாள் அடியாள் அவர்களுக்கு எனது நன்றி.
இங்கேயும் பாடல் ஒலிக்கிறது. சொடுக்கினால் கேட்கலாம்.
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
" எவர் கொடுமை செய்தாலும் //எதிர்த்து நிற்க வேண்டும் !
ReplyDeleteஎதிரிக்கும் வாழ்வளிக்கும் //இரக்க குணம் வேண்டும் !"
என்று பைபிளின் மையக்கருத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்களே!
பொதுநலமாய் சிந்திக்கும்
ReplyDeleteபொறுப்பு மிக வேண்டும் !
பொன்போன்ற மனம் வாழ
பொறுமை காத்தல் வேண்டும் !
அருமை! அனைத்தும் நன்று!
எதிரிக்கும் வாழ்வளிக்கும்
ReplyDeleteஇரக்க குணம் வேண்டும் !
:) சூப்பர் :)
என்றும் இந்தக் குணமிருந்தால் நீயும் மகாத்மாவே !
அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.
அருமை பேத்தி!
ReplyDeleteதலைப்பிட உங்களிடம் தனிப் பாடமே கற்க வேண்டும் போல தோழி.
ReplyDeleteஅருமை! அருமை! ஆக்கமும் வெகு சிறப்பு.
கருத்தினை அழகாகவும் ஆழமாகவும்சொன்ன கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநெஞ்சில் தங்கும் கவிதை.
ReplyDeleteஅருமை சகோ.
கவிதை நன்று. குறிப்பாக இறுதி நான்கு வரிகள் இனிமை. பின்பற்ற வேண்டியவை. வாழ்த்துகள் அம்மா..!!!!
ReplyDeleteஅட மகாத்மாவாக வாருங்கள் என்றழைத்து அத்தனையும் பொன் மொழிகளாக தந்துள்ளீர்களே ம்..ம்..ம் அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteஅருமையான வரிகள்! ஊக்கம் தரும் கவிதை! சகோதரி!
ReplyDelete
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புள்ள சகோதரி கவிஞர் அம்பாளடியாள் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள கவிதைகளை தமிழ்மணத்தில் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். ஒரு சிறு விபத்து காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக வலைத்தளங்களில் நான் கருத்துரைகள் அதிகம் எழுதவில்லை. பதிவுகளைப் படிப்பது மட்டும்தான்.
ReplyDeleteநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (16.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 16ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/16.html
வணக்கம் !
ReplyDeleteஇனிய உறவுகளே தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி ! சற்று உடல் நலக் குறைபாட்டினால் தாமதமாக வந்து இக் கருத்தினை வெளியிடுகின்றேன் மன்னிக்கவும் !என்னுடைய படைப்புகள் யாவும் தங்களின் ஊக்குவிப்பால் உருவானவையே ஆதலால் பெருமை கொள்கிறேன் !வாழ்க தமிழ் வளர்க தம் பணி!...
இதெல்லாம் நடக்க வேண்டும்
ReplyDeleteஇப்படி பலபேர் பிறக்க வேண்டும்
அருமை தோழி, வாழ்த்துக்கள்