ஒற்றை ரூபாய் மடிப்பிலே
ஓராயிரம் ஆசைகள் நினைப்பிலே
பெற்ற தாயின் தவிப்பினை
பிறர்தான் அறிய முடியுமா!!!.....
சற்றும் சோர்வு கொள்ளாமல்
தன் சுகத்தை மட்டும் தேடாமல்
முற்று முழுதாய் எமக்காக
முதுகு கோண உழைத்தாளே!!!....
குப்பை மேட்டில் அவள் கனவு
குலைந்து போகத் தனிமையிலே
செற்ற உடலைத் தாங்கியபடி அவள்
சீவன் உலாவுது எதனாலே!!......
உற்றார் உறவினர் யாவருமே
உயிராய் பழகி வந்தாலும்
பெற்ற தாய்க்கு இணையாக
பூமியில் எமக்கு யாருண்டோ
நித்தம் வரும் நினைப்பிதனால்
தன் நின்மதியை இழப்பவள் தாய்
அவள் கற்றுத் தரும் நன்னெறியைக்
காக்க மறந்தால் நல் வாழ்வுண்டோ!....
பல்கிப் பெருகும் கலாச்சாரம் எமை
பாதை தவற அழைத்தாலும்
கல்லில் பொறித்த எழுத்தாகக்
காலம் முழுதும் வாழ்வோம் நாம்
உன்னைத் தொழுதால் போதும் அம்மா
உலகில் யாவும் இனிதாகும் இங்கு
கண்ணைத் திறந்து பேசும் தெய்வம்
உன் காலடி பட்ட மண்ணும் கவி பாடும்!...
// உற்றார் உறவினர் யாவருமே
ReplyDeleteஉயிராய் பழகி வந்தாலும்
பெற்ற தாய்க்கு இணையாக
பூமியில் எமக்கு யாருண்டோ
//
உயிரோட்டமுள்ள வரிகள் மட்டுமல்ல, உண்மை வரிகளும் ஆகும் நன்று! நன்றி!
சா இராமாநுசம்
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் .
Deleteபல்கிப் பெருகும் கலாச்சாரம் எமை
ReplyDeleteபாதை தவற அழைத்தாலும்
கல்லில் பொறித்த எழுத்தாகக்
காலம் முழுதும் வாழ்வோம் நாம்
உன்னைத் தொழுதால் போதும் அம்மா
உலகில் யாவும் இனிதாகும் இங்கு
கண்ணைத் திறந்து பேசும் தெய்வம்
உன் காலடி பட்ட மண்ணும் கவி பாடும்!.//
அருமையான ஆழ்மனம் தொடும்
அற்புத வரிகள்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் .
Deletetha.ma 2
ReplyDeleteஉன்னைத் தொழுதால் போதும் அம்மா
ReplyDeleteஉலகில் யாவும் இனிதாகும் இங்கு
கண்ணைத் திறந்து பேசும் தெய்வம்
உன் காலடி பட்ட மண்ணும் கவி பாடும்!..
அருமையான வரிகள்.
தாயின் காலடி சொர்க்கம் அல்லவா!
அடிக்கடி எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் .
Deleteநேரில் நின்று.. பேசும் தெய்வம்..
ReplyDeleteபெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..?
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
பகிர்வுக்கு நன்றி... (த.ம. 4)
மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் சிறந்த கருத்திற்கும் . . .
Deleteஅன்பு அம்மாவுக்கு ஒரு கவிதை.......அழகோ அழகு....!
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் பாராட்டிற்கும் . . .
Deleteகவிதை வடிவில் அம்மா.. அருமை சகோ.
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் பாராட்டிற்கும் . . .
Deleteஅம்மா.... அருமையான கவிதை....
ReplyDeleteமிக்க நன்றி தங்கள் வரவுக்கும் பாராட்டிற்கும் . . .
Deleteநல்ல கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் . .
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் பாராட்டிற்கும் . . .
ReplyDeleteமிக்க நன்றி அம்மா தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் .
ReplyDeleteவாழ்த்துக்கள்..!அருமை சொந்தமே!
ReplyDeleteஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!