அத்திப் பூ மணம் மணக்க
என் அத்த மக உன் நினைப்பு
தித்திக்குது நெஞ்சுக்குள்ளே
தேன் கொடுக்க நீ வருவாயா?
கத்தரித் தோட்டத்திலே
கட்டி வைத்த பொம்மை போல
நித்தம் உந்தன் நினைப்பில் நான்
நிக்குறேனடி தன்னாலே!
பட்டு உடல் தொட்டணைக்க
பரிசம் நான் போட்டிடவா?
கெட்டி மேளம் கொட்டிடவே
தாலி அதைக் கட்டிடவா?
மொட்டு விட்ட மலரே உன்றன்
முக அழகைக் காட்டாதே!
எட்டி நிலா பார்த்தால் போதும்
வெக்கத்தால் வாடுமெடி
தத்தித் தத்தி ஓடும் பெண்ணே
தரையில் மானைக் கண்டாயா?
வெட்டி வெட்டி விளிக்கும் விழியால்
வீரக் கதைகள் சொன்னாயா?
கட்டழகுப் பெட்டகமே உன்
கன்னம் இரண்டும் தேன் கிண்ணமெடி
காட்டுக்குள்ளே நீ நடந்தால்
கனிகள் கூட ஏங்குமடி
உன் தோட்டக்காரன் நான்தானே
ஒரு தூது சொல்லடி செந்தேனே
காத்திருக்குது என் உசிரு உன்னைக்
கவர்ந்து செல்ல நான் வருவேனே.....
( அத்திப் பூ மணம் மணக்க....)
என் அத்த மக உன் நினைப்பு
தித்திக்குது நெஞ்சுக்குள்ளே
தேன் கொடுக்க நீ வருவாயா?
கத்தரித் தோட்டத்திலே
கட்டி வைத்த பொம்மை போல
நித்தம் உந்தன் நினைப்பில் நான்
நிக்குறேனடி தன்னாலே!
பட்டு உடல் தொட்டணைக்க
பரிசம் நான் போட்டிடவா?
கெட்டி மேளம் கொட்டிடவே
தாலி அதைக் கட்டிடவா?
மொட்டு விட்ட மலரே உன்றன்
முக அழகைக் காட்டாதே!
எட்டி நிலா பார்த்தால் போதும்
வெக்கத்தால் வாடுமெடி
தத்தித் தத்தி ஓடும் பெண்ணே
தரையில் மானைக் கண்டாயா?
வெட்டி வெட்டி விளிக்கும் விழியால்
வீரக் கதைகள் சொன்னாயா?
கட்டழகுப் பெட்டகமே உன்
கன்னம் இரண்டும் தேன் கிண்ணமெடி
காட்டுக்குள்ளே நீ நடந்தால்
கனிகள் கூட ஏங்குமடி
உன் தோட்டக்காரன் நான்தானே
ஒரு தூது சொல்லடி செந்தேனே
காத்திருக்குது என் உசிரு உன்னைக்
கவர்ந்து செல்ல நான் வருவேனே.....
( அத்திப் பூ மணம் மணக்க....)
kaathal rasamnga....
ReplyDeleteமிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteஅத்திப் பூ மணம் மணக்கிறது !
ReplyDeleteமிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteஓஹோ...
ReplyDeleteமிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteமொட்டு விட்ட மலரே உந்தன்
ReplyDeleteமுக அழகைக் காட்டாதே......
எட்டி நிலா பார்த்தால் போதும்
வெக்கத்தால் வாடுமெடி.... //
நிலவும் நாணும் பெண்ணா!
கவிதை அருமை.
மிக்க நன்றி ஐயா வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteஅப்படிச் சொல்லுங்க... அழகாக இருக்கு...
ReplyDeleteநன்றி (த.ம. 1)
மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteகவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா வரவிற்கும் வாழ்த்திற்கும்
Deleteமொட்டு விட்ட மலரே உந்தன்
ReplyDeleteமுக அழகைக் காட்டாதே......
எட்டி நிலா பார்த்தால் போதும்
வெக்கத்தால் வாடுமெடி....
வெட்கம் அழகு
மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும்
Deleteஅழகான காதல் பாடல் சந்த சுவையுடன் சேர்ந்து ரசிக்க வைக்கிறது! அருமை!
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும்
Deleteகவிதை படிக்கும் போது மனசுக்குள்ள ஒரு உற்சாகம் கறை புரண்டு ஓடுதே ஏன்னு தெரியலையே? (TM 2)
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும்
Deleteஅத்திப் பூ மணம் மணக்க நிற்கும் அத்தை பெண்ணு கவர்கின்றாள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும்
Deleteநல்ல நாடுப்புறப்படலின் வரிகள்,நன்றாகயிருக்கிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகிராமியபின்னணியில் அழகிய கவிதை
ReplyDeleteவணக்கம் சொந்தமே!பேசாம மெட்டு ஒன்று போட்டு பாடிட வேண்டியது தான்.வாழ்த்துக்கள்.அருமையாக உள்ளது.
ReplyDeleteஅழகான பாடல்/கவிதை..வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகான பாடல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆஹா.... நல்ல அருமையான கவிதை.
ReplyDelete#உன் தோட்டக்காரன் நான்தானே
ஒரு தூது சொல்லடி செந்தேனே
காத்திருக்குது என் உசிரு உன்னைக்
கவர்ந்து செல்ல நான் வருவேனே..... #
அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வருகை தாருங்களேன்?
http://newsigaram.blogspot.com