7/23/2012

அத்திப் பூ மணம் மணக்க

அத்திப் பூ மணம் மணக்க
என் அத்த மக உன் நினைப்பு
தித்திக்குது நெஞ்சுக்குள்ளே 
தேன் கொடுக்க நீ வருவாயா?

கத்தரித் தோட்டத்திலே  
கட்டி வைத்த பொம்மை போல 
நித்தம் உந்தன் நினைப்பில் நான் 
நிக்குறேனடி தன்னாலே!

பட்டு உடல் தொட்டணைக்க 
பரிசம் நான் போட்டிடவா?
கெட்டி மேளம் கொட்டிடவே 
தாலி அதைக்  கட்டிடவா?

மொட்டு விட்ட மலரே உன்றன்  
முக அழகைக் காட்டாதே!
எட்டி நிலா பார்த்தால் போதும் 
வெக்கத்தால் வாடுமெடி

தத்தித் தத்தி ஓடும் பெண்ணே 
தரையில் மானைக் கண்டாயா?
வெட்டி வெட்டி விளிக்கும் விழியால் 
வீரக் கதைகள் சொன்னாயா?

கட்டழகுப்  பெட்டகமே உன் 
கன்னம் இரண்டும் தேன் கிண்ணமெடி  
காட்டுக்குள்ளே நீ நடந்தால் 
கனிகள் கூட ங்குமடி 

உன் தோட்டக்காரன் நான்தானே 
ஒரு தூது சொல்லடி செந்தேனே 
காத்திருக்குது என் உசிரு  உன்னைக் 
கவர்ந்து செல்ல நான்  வருவேனே.....  

                                     (  அத்திப் பூ மணம் மணக்க....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

27 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  2. அத்திப் பூ மணம் மணக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. மொட்டு விட்ட மலரே உந்தன்
    முக அழகைக் காட்டாதே......
    எட்டி நிலா பார்த்தால் போதும்
    வெக்கத்தால் வாடுமெடி.... //

    நிலவும் நாணும் பெண்ணா!

    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  5. அப்படிச் சொல்லுங்க... அழகாக இருக்கு...
    நன்றி (த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  6. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா வரவிற்கும் வாழ்த்திற்கும்

      Delete
  7. மொட்டு விட்ட மலரே உந்தன்
    முக அழகைக் காட்டாதே......
    எட்டி நிலா பார்த்தால் போதும்
    வெக்கத்தால் வாடுமெடி....

    வெட்கம் அழகு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும்

      Delete
  8. அழகான காதல் பாடல் சந்த சுவையுடன் சேர்ந்து ரசிக்க வைக்கிறது! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும்

      Delete
  9. கவிதை படிக்கும் போது மனசுக்குள்ள ஒரு உற்சாகம் கறை புரண்டு ஓடுதே ஏன்னு தெரியலையே? (TM 2)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும்

      Delete
  10. அத்திப் பூ மணம் மணக்க நிற்கும் அத்தை பெண்ணு கவர்கின்றாள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும்

      Delete
  11. நல்ல நாடுப்புறப்படலின் வரிகள்,நன்றாகயிருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கிராமியபின்னணியில் அழகிய கவிதை

    ReplyDelete
  13. வணக்கம் சொந்தமே!பேசாம மெட்டு ஒன்று போட்டு பாடிட வேண்டியது தான்.வாழ்த்துக்கள்.அருமையாக உள்ளது.

    ReplyDelete
  14. அழகான பாடல்/கவிதை..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. அழகான பாடல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. உள்ள உணர்வுகள் உன்னதமாய் சொல்லப்பட்ட கவிதை.

    ReplyDelete
  17. ஆஹா.... நல்ல அருமையான கவிதை.
    #உன் தோட்டக்காரன் நான்தானே
    ஒரு தூது சொல்லடி செந்தேனே
    காத்திருக்குது என் உசிரு உன்னைக்
    கவர்ந்து செல்ல நான் வருவேனே..... #

    அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வருகை தாருங்களேன்?

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........