7/10/2012

மனமே மயங்காதிரு!...

அன்னம் தண்ணி ஏதுமின்றி
அவதியுறும்  யீவன்கள் பல இருக்க 
இன்னும் இன்னும் வேண்டும் என்று
எதை எதையோ தேடி அலைகின்றோமே!..

என்ன புண்ணியம் செய்தோம் இங்கே
இத்தனை சுகங்கள் பெறுவதற்கு என 
எண்ணும் உணர்வு பெற்றால் போதும்
இதயத்தில் சுமைகள் குறைவதற்கு 


மனக் கண்ணில் தோன்றும் வாழ்க்கை என்பது 
எம் மனம் போல் என்றும் அமையாது இதைச்
சொன்னால் கேட்க்க மறுக்கும் குணத்தால்
வாழ்வில் சோதனைகள் குறையாது!...

கல்லில் முள்ளில் நடந்து வரினும்
கௌரவங்கள் குறையாது  பிறர் 
தொல்லைப் படுத்தும் அளவு கடனைப் பெற்றால் 
துன்பம்  என்றுமே தொடராகும்!!...


வெள்ளை மனமும் பிள்ளை குணமும் 
எல்லை இல்லா ஆனந்தம் தரும்!.. 
இது இல்லை என்றால்  போதும் உன்னிடம் 
இருப்பதெல்லாம் பொய்யாகும்


என்னை உன்னை உயர்த்திக் காட்ட 
என்ன வேண்டுமோ "நிஜ" வாழ்வினிலே 
அதை என்றும் தேடிக் கற்றால் போதும்
இந்த உலகம் உன்னைப் போற்றிடுமே!...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

 1. unmaithaan ayya!

  padam kalanga vaithathu!

  ReplyDelete
 2. மனதை கலங்கடித்த படம்....

  ReplyDelete
 3. நல்ல கவிதைக்கு நன்றி

  ReplyDelete
 4. என்ன புண்ணியம் செய்தோம் இங்கே
  இத்தனை சுகங்கள் பெறுவதற்கு என
  எண்ணும் உணர்வு பெற்றால் போதும்
  இதயத்தில் சுமைகள் குறைவதற்கு //

  மனநிறைவு வேண்டும் நிச்சயம்.

  படம் மனதை கலக்கி விட்டது.
  உலக போற்றும் கவிதை அருமை.

  ReplyDelete
 5. நலமா ?

  நீண்ட இடைவெளிக்கப்புறம் சந்திப்பதில் மகிழ்ச்சி...


  அன்னம் தண்ணி ஏதுமின்றி
  அவதியுறும் யீவன்கள் பல இருக்க//

  என் மகளிடம் அடிக்கடி நினைவுபடுத்துவது இது தான்..

  என்னை உன்னை உயர்த்திக் காட்ட
  என்ன வேண்டுமோ "நிஜ" வாழ்வினிலே
  அதை என்றும் தேடிக் கற்றால் போதும்
  இந்த உலகம் உன்னைப் போற்றிடுமே!...
  //
  முத்தாய்ப்பு..

  ReplyDelete
 6. அன்னம் தண்ணி ஏதுமின்றி
  அவதியுறும் யீவன்கள் பல இருக்க
  இன்னும் இன்னும் வேண்டும் என்று
  எதை எதையோ தேடி அலைகின்றோமே!..
  மிக அருமையான வரிகள்! கண்ணை கலங்கவைத்த படம்! கண்ணை மட்டுமல்ல மனதையும்!

  ReplyDelete
 7. படமும் கவியும்
  நெஞ்சை உருக்குகிறது சகோதரி....

  ReplyDelete
 8. மிக அருமையான அருமையான வரிகளும் அதற்கு பலம் சேர்க்கும் காட்சியும்....நல்லதொரு பகிர்வு அருமை சொந்தமே..!

  ReplyDelete
 9. அருமையான வரி வளங்கள் , வாழ்த்துக்கள். உங்கள் கவிதையை இங்கு பகிர்ந்துள்ளேன். www.thiraddu.com

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........