உனக்கொரு தாஜ்மகால்
உள்ளத்தில இருக்குது
அதை உள்ளபடி காட்டிட
என் உள்ளம் இங்கே தவிக்குது!...
நீயொருத்தி இல்லை என்றால்
நெஞ்சமதைத் தாங்குமோ
நீ நடக்கும் பாதை தாண்டி
நான் நடக்கல் ஆகுமோ!.....
(உனக்கொரு)
வான் பரப்பில் நிலவுபோல்
வந்துபோகும் தேவதை அடி
நீ கொடுக்கும் ஒளியில்தான்
நான் மின்னுகின்ற தாரகை
ஏழ் பிறப்பும் நீ வேண்டும்
என்னுடனே வந்துவிடு
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
உன்னொளியில் வாழவிடு...
எனக்கெனப் பிறந்தவளே
என் எண்ணங்களில் தவழ்பவளே
உனக்கென வாழும் என்னை
உன் மனதில் தைத்து விடு ..
பெண் :
மனதினில் துயர் எதற்கு?..
என் மன்னவனே வந்துவிடு
இருவிழி காண்பதென்றும்
தனித் தனியாவதுண்டா ?.....
என் கனவினில் நினைவினில் உன்னை
எந்தன் காலமெல்லாம் சுமப்பேனே
உன் மடிதனில் தவழ்ந்திடவே
எனக்கொரு ஆணையிடு!
ஆண் :
அடி பெண்ணே இது
நீதானா நீதானா நீதானா!
உன் இரு விழி சொல்லும் வார்த்தை
அது நிஜம்தானா?
நிஜம்தானா`? நிஜம்தானா?
உன்னால் இன்பம்
வந்தது வந்தது வந்ததிங்கே
உள்ளத்தில் ஆனந்தம்
பொங்குது பொங்குது
பொங்குதிங்கே...
(உனக்கொரு.....)
azhaku!
ReplyDeletearumai!
உணர்வால் கட்டிய தாஜ்மகால் உன்னதம்
ReplyDeleteமனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும்
Deleteவாழ்த்துக்கும் .
Supper kavithai
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும்
Deleteபாராட்டுக்கும் .
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா தங்கள் வரவுக்கும்
Deleteவாழ்த்துக்கும் ......
//மனதினில் துயர் எதற்கு
ReplyDeleteஎன் மன்னவனே வந்துவிடு
இருவிழி காண்பதென்றும்
தனித் தனியாவதுண்டோ//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.....
மிக்க நன்றி சார் தங்கள் வரவுக்கும்
Deleteபாராட்டுக்கும் .
அழகான தாஜ்மகால் கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும்
Deleteபாராட்டுக்கும் .
பல்லவி.. சரணம்.. ம்ம்ம்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும்
Deleteபாராட்டுக்கும் .
அழகான வரிகள் ! ரசித்தேன் ! பாராட்டுக்கள் ! நன்றி சகோதரி !
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும்
Deleteபாராட்டுக்கும் .
ஃஃஃஃஇருவிழி காண்பதென்றும்
ReplyDeleteதனித் தனியாவதுண்டோ ஃஃஃஃ
ஒவ்வொரு வரியிலும் பாசம் தெறிககிறது சகோதரம்...
சகோ தடைகளை உடைத்துத் தரமான பதிவிட
Deleteவிரைந்து திரும்புங்கள் தங்கள் வலைத்தளத்திற்கு
மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .
/////என் கனவினில் நினைவினில் உன்னை
ReplyDeleteஎந்தன் காலமெல்லாம் சுமப்பேனே
உன் மடிதனில் தவழ்ந்திட
என் அரசனே நீ ஆணையிடு!..../////
மிகவும் ரசித்த வரிகள்
சிறப்பாக இருக்கு பாராட்டுக்கள் அக்கா
ஏழ் பிறப்பும் நீ வேண்டும்
ReplyDeleteஎன்னுடனே வந்துவிடு
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
உன்னொளியில் வாழவிடு
மிகமிக பிடித்த வரிகள்.சிறபடபான இப்படைப்பிற்கு என் பாராட்டுக்கள் சொந்தமே...
http://athisaya.blogspot.com/2012/06/blog-post_30.html
///////////////////என் கனவினில் நினைவினில் உன்னை
ReplyDeleteஎந்தன் காலமெல்லாம் சுமப்பேனே
உன் மடிதனில் தவழ்ந்திட
என் அரசனே நீ ஆணையிடு!..../////////////
பிடித்த வரிகள் நன்றி
//நீ கொடுக்கும் ஒளியில்தான்
ReplyDeleteநான் மின்னுகின்ற தாரகை//
சூரியன் ஒரு நட்சத்திரம், அதனிடம் கடன் பெற்ற ஒளிர்கிறது நிலா, நிலவும் இருக்கும் வானத்தில் நட்சத்திர ஒளிகள் மங்கிவிடுகின்றன், ஆனால் இங்கு நிலவால் மின்னும் நட்சத்திரம் ஒரு தாய்மைக்கு உரிய ஒரு செயல், பெண்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது வாழ்த்துக்கள்
கற்பனை தாஜ்மஹால் அபாரம்.
ReplyDeleteNICE
ReplyDeleteசகோ
ReplyDeleteஅன்பின் விருது ஓன்று பகிர்ந்துள்ளேன் ஏற்றுக்கொள்ளவும்
ஆஹா... அன்பின் சின்னமான தாஜ்மஹாலை வைத்து எழும்பிய அழகுத் தமிழ்க் கவிதை. நன்று. மிக ரசித்தேன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு இங்கே http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_24.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-