10/20/2013

பன்னிரு கரத்தான் திருவடியைப் பற்றிட இன்பம் பெருகிடுமே

பன்னிரு கரத்தான் திருவடியைப்
பற்றிட இன்பம் பெருகிடுமே
வற்றிய குளத்தில் தாமரை போல்
வாடிடும் நிலை தான் ஓடிடுமே ....

முன் வினைப் பயனது அறுந்திடவும்
முகம் அது மலர்ச்சி பெற்றிடவும்
கந்தனின் அருளைப் போற்றி நிற்கும்
கந்த சஷ்டி கவசத்தை ஓதிடுங்கள்.....

அல்லலைப் போக்கிடும்  அவன் கவசம்
அமுதினும் இனிய சொற் குடமாம்
நல்லதை நினைந்து எந்நாளும் இங்கே
நவின்றவர் வாழ்விற்கோர்  துன்பமில்லை..

அரக்கர்களை  அழித்துத் தேவர்களுக்கும்
அமைதியைக் கொடுத்த முருகனுக்கு
மனம் அது பாற் கடல் என்றுணர்ந்தால்
மகிழ்வுடன் விரதம் இருந்திடுங்கள் ....

நினைத்தது நடக்கும் அவனருளால்
நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற
இனித்திடும் செந்தமிழ்க் காவலனை
இன்னிசையாலே போற்றிடுங்கள் ............. 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

21 comments:

 1. நினைத்தது நடக்கும் அவனருளால்
  நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற!..

  காலைப்பொழுதில் அழகிய பாடலின் வரிகள் கண்டு மனம் மகிழ்ந்தது. என்றும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தெய்வீக வழி காட்டும் இப்பாடலை
   சுப்பு தாத்தா அடானா ராகத்தில்
   இங்கே பாடுகிறார்.

   மீனாட்சி பாட்டி.
   www.kandhanaithuthi.blogspot.com

   Delete
  2. மிக்க நன்றி ஐயா(துரை செல்வராஜு ) வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
  3. மிக்க நன்றி மீனாட்சிப் பாட்டியவர்களே !

   Delete
 2. நினைத்தது நடக்கும் அவனருளால்
  நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற
  இனித்திடும் செந்தமிழ்க் காவலனை
  இன்னிசையாலே போற்றிடுங்கள் .............

  இனிய பகிர்வுகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 3. தெய்வீக வழி காட்டும் இப்பாடலை
  சுப்பு தாத்தா அடானா ராகத்தில்
  இங்கே பாடுகிறார்.
  http://www.youtube.com/watch?v=g2YVahKgmMM&feature=youtu.be
  மீனாட்சி பாட்டி.
  www.kadhanaithuthi.blogspot.com


  ReplyDelete
  Replies
  1. இந்த சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள் எங்கள் சுப்புத்
   தாத்தாவிற்கு !

   Delete
 4. சோமவார சிறப்புப் கவிதை
  வெகு வெகு சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 5. Replies
  1. நன்றி ரமணி ஐயா .

   Delete
 6. அன்புடையீர்!.. தங்களுடைய பாடல் திரு. சுப்பு தாத்தா அவர்களால் பாடி பதிவு செய்யப்பட்டுள்ளது.

  http://www.youtube.com/watch?v=g2YVahKgmMM

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியுடன் தாங்கள் தந்த தகவலுக்கு மிக்க நன்றி ஐயா .

   Delete
 7. நினைத்தது நடக்கும் அவனருளால்
  நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற

  ஓடி வாருங்கள் ஜூஸ் பருக .......

  http://gopu1949.blogspot.in/2013/10/68.html

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா .இனிய நற் கருத்திற்கும் அழைப்பிற்கும் .

   Delete
 8. தமிழுக்கு காவலன்
  பார்போற்றும் குமரன்
  தேன்தமிழ் கந்தன்
  முதிர்சோலை அழகனுக்கு
  அழகான பாமாலை சகோதரி..
  அருமை அருமை...

  ReplyDelete
 9. நினைத்தது நடக்கும் அவனருளால்
  நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற!.

  ReplyDelete
 10. வண்ணம் ( சந்தம் ) கலையா
  வாய்த்தமிழே இதழ் உதிர
  எண்ணம் கனியும்
  இயலிசை கண்டேன் ...!

  சுவைமிகு குரலில்
  சுழலும் வரிகளில்
  சுருதி தழைக்க
  சுகமானதே கவிதை....!

  அருமையான கவிதையை அழகாய் எழுதிய அம்பாளுக்கும் அடிமுறை பிழையாமல் பாடிய சுப்பு தாத்தாவுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  ReplyDelete
 11. இணையில்லா அழகன்
  ஈந்திடும் அருளமுதன்
  துணவேண்டி அவனடி தேடும்
  அழகான கவிதை.. அருமை!

  வாழ்த்துக்கள் தோழி!

  த ம.4

  * உங்கள் கவிதையினை அழகுறப் பாடிய சுப்பு ஐயாவுக்கும்
  எனது பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. அழகிய வரிகள், அழகிய கருத்து. பக்தியூட்டும் கவிதை! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........