எங்கோ ஒரு தெரு முனையில்
ஏதோ ஒரு தெய்வத்திற்குப்
பொங்க வைத்துப் படைப்பதெல்லாம் அன்று
ஏழைகள் வயிறு நிறைவதர்க்கே!
எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
ஏழைகள் வயிற்றைக் குளிர வைப்பீர்!
தங்கும் மங்களம் எந்நாளும்
தக தக தகவென இல் வாழ்வினிலே!
ஒளியை ஏற்றும் திருநாளில்
வெடியைப் போட்டு மகிழாதீர்!
விடியும் காலம் வேண்டும் எனில்
மடியும் உயிர்களுக்கு உணவளிப்பீர்!
கருணை பொங்கும் இதயத்தில்
கடவுள் தெரிவான் எந்நாளும்
உயிரைக் காக்கும் செயலொன்றே
உன்னதமான செயலாகும்!
வருவாய் இருந்தால் ஏழைக்கும்
வாழ்வளிக்கத் துணிபவரைத்
தொழுவார் உலகில் தெய்வமெனத்
தொண்டில் சிறந்தது இது தானே ?
இனிப்பாய் உண்ட பலகாரம்
இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்டும்!
வணக்கம்
ReplyDeleteஇனிப்பாய் உண்ட பலகாரம்
இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்ட
கவிதையின் வரிகள் மதை உருகவைததுவிட்டது வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
Deleteவருவாய் இருந்தால் ஏழைக்கும்
ReplyDeleteவாழ்வளிக்கத் துணிபவரைத்
தொழுவார் உலகில் தெய்வமெனத்
தொண்டில் சிறந்தது இது தானே ?...!!!!
தீபாவளி வாழ்த்துகள்..!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
Deleteஎன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
ReplyDeleteஏழைகள் வயிற்றைக் குளிர வைத்தால்
தங்கும் மங்களம் எந்நாளும்
தக தக தகவென இல் வாழ்வினிலே ...// அருமையான வரிகள்! சிறப்பான படைப்பு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
Deleteஇனிப்பாய் உண்ட பலகாரம்
ReplyDeleteஇதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்ட .//
அழகான பண்டிகை செய்தி.
பகிர்தல் மகிழ்ச்சி.
அதுவும் இருப்பவர்களெக்கே கொடுத்துக் கொண்டு இருக்காமல், இல்லாதவர்களுக்கு கொடுத்தால் நல்லது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
Deleteஎன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
நல்ல செய்தி...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
Delete//விடியும் காலம் வேண்டும் என்றால்
ReplyDeleteமடியும் உயிர்களுக்கு உணவளிப்பாய் ........//
அழகோ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
வாங்கோ ப்ளீஸ்: http://gopu1949.blogspot.in/2013/10/73.html#comment-form
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
Deleteஎன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
உண்மைதான் சாந்தரூபி!
ReplyDeleteஇந்தப் பண்டிகை என்றில்லை எல்லாப் பண்டிகைகளிலும்
எம் நினைவும் செயலும் அவர்கள் மேல் இருந்தால் அதைவிட
வேறு புண்ணிய காரியம் உண்டோ...
உன்னதமான உணர்வுத்தூண்டல் கவி படைத்தீர்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
Deleteஎன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
ஏழைகளுக்கு திண்டாட்டம்தான்....
ReplyDeleteமகிழ்ச்சியை பன்மடங்காக பெருக்க ஒரு வழி அடுத்தவருடன் பகிர்ந்துக்கொள்ளுவதன்தான்....
நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
Deleteஎன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
எல்லோர் நினைவும் இது போல் ஆயின் என்றுமே தீபாவளிதான்!
ReplyDeleteஅருமை
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
Deleteஎன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
Deleteஅழகாகச் சொல்லிட்டீங்க தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரியாரே !
Deleteமிக்க நன்றி .
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteஅருமையான வரிகள்.
தீபாவளி வாழ்த்துகள்
கருணை பொங்கும் இதயத்தில்
ReplyDeleteகடவுள் தெரிவான் எந்நாளும் !
தீபாவளி வாழ்த்துகள்..!