11/01/2013

தீப ஒளியது அசைந்தாடதீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத்
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே  ..........
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ......

ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே .....

பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும் 
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ...


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

20 comments:

 1. விரிந்திடும் ஒளிச்சுடர்
  வியாபிக்கட்டும் அவனியெங்கும்..
  விதைக்கட்டும் நல்லுணர்வுகளை..

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
  இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி..

  ReplyDelete
 2. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //தீப ஒளியது அசைந்தாடத் தீமைகள் எல்லாம் பறந்தோட//

  ஆரம்ப வரிகளே அசத்தலாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. விரையட்டும் ஒளி மிளிர்ந்து!
  கரையட்டும் எம் கவலைகள்!

  இனிய கவிதை தோழி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தித்திக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
  தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே !

  இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்.. !

  ReplyDelete
 6. தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே ...
  >>
  தேவியின் அருள்பார்வை உங்க வீட்டுப்பக்கமே இருக்க விடாம தங்கச்சி வீட்டுக்கும் திருப்பி விடுங்கக்கா!

  ReplyDelete
 7. பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
  புரியாத புதிர் எல்லாம் விலகிடவும்
  பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
  தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே ..//
  தேவியின் அருளாட்சி நிறைந்து ஒளீத்திருநாள் ஒளிரும்!
  உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அருமையான கவிதை வரிகள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. //பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
  புரியாத புதிர் எல்லாம் விலகிடவும்
  பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து//

  ஹா..ஹா..ஹா.... இந்தக் கடைசி வரி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு:)... ஒரே தீபாவளிக் கவிதையா வடிக்கிறீங்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. அருமை...

  இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. தேவியின் அருளால் தீமைகள் விலை நன்மைகள் பெருகட்டும்!தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete

 12. வணக்கம்!

  தமிழ்மணம் 7

  எண்ணங்கள் யாவும் இனிதே நடந்தேறக்
  கண்ணன் அருள்வான் கமழ்ந்து!

  மண்ணை வதைக்கும் நிலையகல நற்சிவன்
  கண்ணைத் திறப்பான் கனிந்து!

  தேவி புகழினைக் கூவி மொழிந்திடுவோம்!
  தாவிப் பறக்கும் தடை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 13. தீப ஒளி திருநாள் வாழ்த்துக் கவிதை அருமை . நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 15. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
  தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே

  விடியும் ஒருநாள் -துன்பம்
  விலகும் வருநாள்
  முடியும் கொடுங்கோல்-விரைவில்
  முறியும் திருநாள்


  ReplyDelete
 17. தீபாவளிக்கவிதை அருமை.
  உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
  உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
  போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
  தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே

  அனைத்தும் அருமைஅருமை...!
  வாழ்த்துக்கள்....! என் இனிய தீபாவளிநல் வாழ்த்துக்கள்.....!

  துன்பம் என்று துவளாமல் வென்றிட
  வேணும் என்ற எண்ணம் வளர்த்திடு,
  நல்வழி காட்டிடு அனைவருக்கும் என்றும் இந்நாளில்

  ReplyDelete
 19. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.கவிதை அருமை.

  ReplyDelete
 20. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........