மறவர் புகழ் பெருமை காக்து
மண்ணில் புதைந்த வீரர்களே!
உறவு எங்கள் உறவு நீங்கள்
உயிரில் கலந்த தீபங்களே!
ஒளியைத் தந்து விழியைத் திறந்து
ஒதுங்கி நின்று காத்திடும்
மனதின் எண்ணம் மலருவது திண்ணம்
மறுமுறை பூப்பாய் கார்த்திகைப் பூக்களே!
அழுத விழிகள் சிரிக்கும் காலம்
அருகில் வந்து சேர்ந்திடும்!
அமுத மொழியில் உரைத்த சத்தியம்
அகிலம் முழு(வது)ம் பரவிடும்!
விதியின் பாதை சதியை விலக்கி
விடுதலைக்கு வித்திடும்!- இந்த
மொழியின் வலிமை உணரும் தருணம்
உனது கானம் ஒலித்திடும்!
எளிமையான வாழ்க்கைச் சூழல்
எம் இனத்தின் பலத்தைக் காத்திடும்!
என்றும் இல்லா ஆனந்தத்தில்
மனங்களிங்கே திங்கள் போல சிரித்திடும்!
பொங்குதமிழ்க் குலத்தின் மரபே!
மாவீரத் திலகங்களே!
சங்கெடுத்து முழங்குகின்றோம்
உனது சத்தியம்தான் வெல்லுமிங்கே!
உணர்ச்சி மிக்க கவிதையை எழுச்சிமிக்க வரிகளில் படைத்துள்ளீர்கள். வீர வணக்கங்களுடன் பாராட்டுக்கள்.
ReplyDeleteதர்மத்தின் வாதுதனை சூது கவ்வும்
ReplyDeleteதர்மம் மறுபடியும் வெல்லும்
தர்மம் மறுபடியும் வெல்லும்!..
ReplyDeleteவீர மறவர் பெருமை காத்து உயிரில் கலந்த தீபங்களின் புகழ் என்றும் வாழும்!...
கார்த்திகைப் பூத்தூவி
ReplyDeleteகாத்திருப்போமே நாம்!
போர்த்திரை விலகி
புதுவாழ்வு மலரட்டும்!
அருமையான உணர்வுக் கவிதை தோழி!
வாழ்த்துக்கள்!
பொங்கு தமிழ்க் குலத்தின் மரபே
ReplyDeleteமாவீரர் என்னும் வேங்கைகளே
சங்கெடுத்து முழங்குகின்றோம்
உனது சத்தியம் தான் யெயித்திடும்//
உணர்வுபூர்வமான அற்புதமான
கவிதைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
//அழுத விழிகள் சிரிக்கும் காலம்
ReplyDeleteஅருகில் வந்து சேர்ந்திடும்
அமுத மொழியில் உரைத்த சத்தியம்
அகிலம் முழு(வது)ம் பரவிடும்//
உண்மையாகட்டும்.....
அற்புதமான கவிதை பகிர்வுக்கு நன்றி.
உணர்வுபூர்வமான வரிகள் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அற்புதமான கவிதை பகிர்வுக்கு நன்றி tha.ma 4
ReplyDeleteஉணர்ச்சிகரமான வரிகள்! சத்தியம் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை! இந்தக் கனவு வரிகள் பலிக்கட்டும்! தமிழர் வெற்றிச் சங்கம் ஒலிக்கட்டும்!
ReplyDeleteதம் உயிரையே எண்ணெயாக்கி இலட்சியத்தீயை எரியவிட்டவர்களுக்கு நீங்கள் செய்த காணிக்கை இக்கவிதை. வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (சென்னை)
ReplyDeleteமாவீரர்கள் சாவதில்லை
ReplyDeleteசாவின் பின்னும் வாழ்பவர்களே!