11/24/2013

கார்த்திகை 27 கண்களில் ஒளிதீபம் ஏற்றுங்கள்


மறவர் புகழ் பெருமை காக்து
மண்ணில் புதைந்த வீரர்களே!
உறவு எங்கள் உறவு நீங்கள்
உயிரில் கலந்த தீபங்களே!

ஒளியைத் தந்து விழியைத் திறந்து
ஒதுங்கி நின்று காத்திடும்
மனதின் எண்ணம் மலருவது திண்ணம்
மறுமுறை பூப்பாய் கார்த்திகைப் பூக்களே!

அழுத விழிகள் சிரிக்கும் காலம்
அருகில் வந்து சேர்ந்திடும்!
அமுத மொழியில் உரைத்த சத்தியம்
அகிலம் முழு(வது)ம் பரவிடும்!

விதியின் பாதை சதியை விலக்கி
விடுதலைக்கு வித்திடும்!- இந்த
மொழியின் வலிமை உணரும் தருணம்
உனது கானம் ஒலித்திடும்!

எளிமையான வாழ்க்கைச் சூழல்
எம் இனத்தின் பலத்தைக் காத்திடும்!
என்றும் இல்லா ஆனந்தத்தில்
மனங்களிங்கே  திங்கள் போல சிரித்திடும்!

பொங்குதமிழ்க் குலத்தின் மரபே!
மாவீரத் திலகங்களே!
சங்கெடுத்து முழங்குகின்றோம்
உனது சத்தியம்தான் வெல்லுமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. உணர்ச்சி மிக்க கவிதையை எழுச்சிமிக்க வரிகளில் படைத்துள்ளீர்கள். வீர வணக்கங்களுடன் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தர்மத்தின் வாதுதனை சூது கவ்வும்
    தர்மம் மறுபடியும் வெல்லும்

    ReplyDelete
  3. தர்மம் மறுபடியும் வெல்லும்!..

    வீர மறவர் பெருமை காத்து உயிரில் கலந்த தீபங்களின் புகழ் என்றும் வாழும்!...

    ReplyDelete
  4. கார்த்திகைப் பூத்தூவி
    காத்திருப்போமே நாம்!
    போர்த்திரை விலகி
    புதுவாழ்வு மலரட்டும்!

    அருமையான உணர்வுக் கவிதை தோழி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பொங்கு தமிழ்க் குலத்தின் மரபே
    மாவீரர் என்னும் வேங்கைகளே
    சங்கெடுத்து முழங்குகின்றோம்
    உனது சத்தியம் தான் யெயித்திடும்//


    உணர்வுபூர்வமான அற்புதமான
    கவிதைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //அழுத விழிகள் சிரிக்கும் காலம்
    அருகில் வந்து சேர்ந்திடும்
    அமுத மொழியில் உரைத்த சத்தியம்
    அகிலம் முழு(வது)ம் பரவிடும்//

    உண்மையாகட்டும்.....

    அற்புதமான கவிதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உணர்வுபூர்வமான வரிகள் அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அற்புதமான கவிதை பகிர்வுக்கு நன்றி tha.ma 4

    ReplyDelete
  9. உணர்ச்சிகரமான வரிகள்! சத்தியம் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அருமை! இந்தக் கனவு வரிகள் பலிக்கட்டும்! தமிழர் வெற்றிச் சங்கம் ஒலிக்கட்டும்!

    ReplyDelete
  11. தம் உயிரையே எண்ணெயாக்கி இலட்சியத்தீயை எரியவிட்டவர்களுக்கு நீங்கள் செய்த காணிக்கை இக்கவிதை. வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (சென்னை)

    ReplyDelete
  12. மாவீரர்கள் சாவதில்லை
    சாவின் பின்னும் வாழ்பவர்களே!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........