காலை இளந் தென்றற் காற்றே
கண் சிமிட்டும் நேரம் இதோ!
பூவும் இலையும் தலையை ஆட்டப்
புன்னகை வருகிறதே!
சோலை வண்ணம் என் எண்ணம்
கூடும் நேரம் இந்நேரம்
மாமன் நெஞ்சில் மஞ்சம் போடும்
தோழி நான் தானே!
( காலை இளந் )
தாயைப் போன்ற உள்ளத்தில்
தாவிக் குதிக்கும் கிள்ளை நான்
காலம் எல்லாம் நம் சொந்தம்
காண வேண்டும் ஊர்கோலம் ..
ஆசை உள்ள நெஞ்சுக்குள்
ஆலவட்டம் நான் போட
மீசை துடிப்பதேன் மச்சானே! - நீ
பேசும் வார்த்தைகள் நான் தானே?
நாம் கூட்டுச் சேர்ந்த பொழுதினிலே
ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்
அடடா சிரித்திடும் வெண்மேகமே!
ஊரைக் கூட்டித் தாலி கட்டி
உறவை வளர்த்த மச்சானே
நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
எந்நாளும் இங்கே கொண்டாட்டம்தான் ......
( காலை இளந்)
வணக்கம்
ReplyDeleteபுனைந்த கீதம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான ரசிக்க வைக்கும் பாடல்... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா கனிவான இந்த வாழ்த்திற்கு .
Deletemm..
ReplyDeleterasaai..
நன்றி கருத்துப் பகிர்வுக்கு .
Deleteகாலை இளந் தென்றல் கதகதப்பாகப் பாட வைத்துவிட்டதோ?...:)
ReplyDeleteஅருமை! மிகவே ரசித்தேன்!
வாழ்த்துக்கள் தோழி!
மிக்க நன்றி தோழி தங்களின் ரசனைக்கு .
Deleteஇது சினிமா பாட்டா ? இல்லை நீங்களே எழுதினதா ? சூப்பர்ப்....!
ReplyDeleteஎன்றைக்காவாது ஒரு நாளைக்கு இதுவும் சினிமாப் பாடலாக
Deleteவலம் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் எழுதிக் கொண்டே இருக்கின்றேன் உங்களைப் போன்றவர்கள் இதற்கொரு வடிகாலாக அமையட்டுமே .மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
காதல் கீதம் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஅருமை,வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteரஸித்தேன். பாடல் நல்லா இருக்குது. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான பாடல். . .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteசிறப்பான பாடல்.
ReplyDeleteத.ம. 7
மிக்க நன்றி சகோதரே வருகைக்கும் பாராட்டிற்கும் .
DeleteMTG வலையிலிருந்து இங்கு வந்தேன் .
ReplyDeleteமுதலில் இது சினிமாப் பாடலென்றே நினைத்தேன். பிறகு தான் புரிந்தது இது உங்கள பாடலென்று மிக அருமையாக இருக்கிறது.
சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற லட்சியத்துடன் தான்
Deleteஇவ்வாறு பாடகளையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகின்றேன் .மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் பாராடிற்கும் .
எந்த சினிமாவுக்காக எழுதிய பாடல் என்பதையும் சொல்லியிருக்கலாமே! (காதல் சுவை நனிசொட்டச்சொட்ட எழுதியிருக்கிறீர்கள். காதலுக்கு எப்போதுமே மார்க்கட் உண்டு தானே!)
ReplyDeleteவிரைவில் இந்த வாய்ப்பும் கிட்டும் என்ற நம்பிக்கையில் தான் ஐயா எழுதி வருகின்றேன் .ஆதலால் இன்னும் எந்த சினிமாப் படம் என்று சொல்ல இயலாதையா :) .மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராடிற்கும் .
Deleteபூவோடு சேர்ந்த நாருக்கும் வாசம் உண்டு என்பர். அதுபோல உங்கள் பாவில் "நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
ReplyDeleteஎந்நாளும் இங்கே கொண்டாட்டம் தான்..." என்ற அடிகள் நினைவுக்கு வர வைத்தது.
உங்கள் பாவிற்குப் பாராட்டுகள்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராடிற்கும் .
Deleteபூவோடு சேர்ந்த நாருக்கும் வாசம் உண்டு என்பர். அதுபோல உங்கள் பாவில் "நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
ReplyDeleteஎந்நாளும் இங்கே கொண்டாட்டம் தான்..." என்ற அடிகள் நினைவுக்கு வர வைத்தது.
உங்கள் பாவிற்குப் பாராட்டுகள்.
நித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட
ReplyDeleteசித்தம் வைத்தீரா செப்பிடுவீர் அம்பாளே!
சித்தமதில் கவிதையின்றி உங்கள் அம்பாளின்
Deleteசீவனது நிலைக்காதே ஐயா !!