வெற்றி வேலாயுதப் பெருமானே
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே
பற்றியதே பாசம் மலை போலே உயிர்
மெச்சிடுமே கந்தன் உனைத்தானே .....
உற்ற துணை என வந்த பெருமானே
கொடும் சூரரை வதைத்த மயிலோனே
நற்றமிழைத் தந்த முருகா எம்மை
எந்நாளும் காத்திட இங்கு வருவாயே ....
முக்கனியில் சிறந்த கனியோனே உன்னை
முன் நிறுத்தி விரதம் இருந்தோமே
அற்புதங்கள் நிகழ்த்த வாருமையா
ஆறுபடை வீடு கொண்ட எம் பெருமானே ...
முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
முன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே எமக்கு வரமாகும் ....
கந்தன் என வந்த எங்கள்
தண்டபாணித் தெய்வமே உன்றன்
கந்த சஷ்ட்டி கவசம் சொன்னால்
இன்பம் வந்து சேருமே ....
( வெற்றி வேலாயுதப் பெருமானே )
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே
பற்றியதே பாசம் மலை போலே உயிர்
மெச்சிடுமே கந்தன் உனைத்தானே .....
உற்ற துணை என வந்த பெருமானே
கொடும் சூரரை வதைத்த மயிலோனே
நற்றமிழைத் தந்த முருகா எம்மை
எந்நாளும் காத்திட இங்கு வருவாயே ....
முக்கனியில் சிறந்த கனியோனே உன்னை
முன் நிறுத்தி விரதம் இருந்தோமே
அற்புதங்கள் நிகழ்த்த வாருமையா
ஆறுபடை வீடு கொண்ட எம் பெருமானே ...
முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
முன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே எமக்கு வரமாகும் ....
கந்தன் என வந்த எங்கள்
தண்டபாணித் தெய்வமே உன்றன்
கந்த சஷ்ட்டி கவசம் சொன்னால்
இன்பம் வந்து சேருமே ....
( வெற்றி வேலாயுதப் பெருமானே )
இறைவன் அருள் பார்வை எமக்கு கிட்ட வேண்டிக்கோங்க அக்கா!
ReplyDeleteகந்தன் பெருமை சொல்லும் கவிதை அழகு!
ReplyDeleteகந்தன் பெயரைச் சொன்னாலே வெற்றிகள் பல வந்து சேரும்...
ReplyDeleteகந்தன் அருள் என்றும் கிடைக்கட்டும் உங்களுக்கு.. நல்ல பதிவு...
அருமையான படத்துடன் அற்புதமான பாடல் வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றும் என் பதிவினில் உங்களுக்குப் பிடித்தமான மேங்கோ ஜூஸ் + கோன் ஐஸ் க்ரீம் + பட்டுரோஜா முதலியவைகள் தரப்பட்டுள்ளன.
http://gopu1949.blogspot.in/2013/11/75-1-2.html
http://gopu1949.blogspot.in/2013/11/75-2-2.html
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
https://www.youtube.com/watch?v=Fuur0ekKJ8E
ReplyDeletelisten your song here also
www.kandhanaithuthi.blogspot.com
meenakshi paatti
முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
ReplyDeleteமுன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே எமக்கு வரமாகும் ....
முருகனைப் பற்றி முத்தான பாடல் ..பாராட்டுக்கள்..!
கந்தன் புகழ் பாடும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெற்றி வேல் வேந்தனுக்கு
ReplyDeleteஅலையாழி அமரனுக்கு
அழகான பாமாலை சகோதரி...
முருகா என்றாலே அனைத்து துன்பங்களும் பறந்தோடும்...
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
அருமை... வாழ்த்துக்கள்...
கந்தனின் கருணைக்கு எல்லையும் உண்டோ!..
ReplyDeleteஅழகன் முருகனுக்கு தாங்கள் சூட்டிய பாமாலை அழகு!.. பதிவின் முகப்பில் வள்ளி தேவயானை சமேத முருகன் அழகோ அழகு!..
கவிதை அழகு
ReplyDeleteபடம் மனதைக் கொள்ளைக் கொண்டது.....
ReplyDeleteஅழகிய கவிதை.
வணக்கம்
ReplyDeleteகந்தனின் கருணை பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல கவிதை. மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.
ReplyDeleteஷஷ்டி தொடங்கியதில் முருகன் பாடலா... கண்டிப்பாய் அற்புதங்கள் நிகழ்த்துவார்...
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
ReplyDeleteதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.