11/03/2013

வெற்றி வேலாயுதப் பெருமானே

வெற்றி வேலாயுதப் பெருமானே
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே
பற்றியதே பாசம் மலை போலே உயிர்
மெச்சிடுமே  கந்தன் உனைத்தானே .....

உற்ற துணை என வந்த பெருமானே
கொடும் சூரரை வதைத்த மயிலோனே
நற்றமிழைத் தந்த முருகா எம்மை
எந்நாளும் காத்திட இங்கு வருவாயே ....

முக்கனியில் சிறந்த கனியோனே உன்னை
முன் நிறுத்தி விரதம் இருந்தோமே
அற்புதங்கள் நிகழ்த்த வாருமையா
ஆறுபடை வீடு கொண்ட எம் பெருமானே ...

முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
முன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே  எமக்கு வரமாகும் ....

கந்தன் என வந்த எங்கள்
தண்டபாணித் தெய்வமே உன்றன்
கந்த சஷ்ட்டி கவசம் சொன்னால்
இன்பம் வந்து சேருமே ....

                             (  வெற்றி வேலாயுதப் பெருமானே )
                                                         



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. இறைவன் அருள் பார்வை எமக்கு கிட்ட வேண்டிக்கோங்க அக்கா!

    ReplyDelete
  2. கந்தன் பெருமை சொல்லும் கவிதை அழகு!

    ReplyDelete
  3. கந்தன் பெயரைச் சொன்னாலே வெற்றிகள் பல வந்து சேரும்...

    கந்தன் அருள் என்றும் கிடைக்கட்டும் உங்களுக்கு.. நல்ல பதிவு...

    ReplyDelete
  4. அருமையான படத்துடன் அற்புதமான பாடல் வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இன்றும் என் பதிவினில் உங்களுக்குப் பிடித்தமான மேங்கோ ஜூஸ் + கோன் ஐஸ் க்ரீம் + பட்டுரோஜா முதலியவைகள் தரப்பட்டுள்ளன.

    http://gopu1949.blogspot.in/2013/11/75-1-2.html

    http://gopu1949.blogspot.in/2013/11/75-2-2.html

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. https://www.youtube.com/watch?v=Fuur0ekKJ8E

    listen your song here also
    www.kandhanaithuthi.blogspot.com

    meenakshi paatti

    ReplyDelete
  6. முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
    முன் வினையை அகற்ற வருவாயே
    பக்தி தரும் பார்வை உனதாகும்
    பன்னிரு கரத்தான் நீயே எமக்கு வரமாகும் ....

    முருகனைப் பற்றி முத்தான பாடல் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. கந்தன் புகழ் பாடும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வெற்றி வேல் வேந்தனுக்கு
    அலையாழி அமரனுக்கு
    அழகான பாமாலை சகோதரி...

    ReplyDelete
  9. முருகா என்றாலே அனைத்து துன்பங்களும் பறந்தோடும்...

    அருமை... வாழ்த்துக்கள்...

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. கந்தனின் கருணைக்கு எல்லையும் உண்டோ!..

    அழகன் முருகனுக்கு தாங்கள் சூட்டிய பாமாலை அழகு!.. பதிவின் முகப்பில் வள்ளி தேவயானை சமேத முருகன் அழகோ அழகு!..

    ReplyDelete
  11. படம் மனதைக் கொள்ளைக் கொண்டது.....

    அழகிய கவிதை.

    ReplyDelete
  12. வணக்கம்
    கந்தனின் கருணை பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. நல்ல கவிதை. மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. ஷஷ்டி தொடங்கியதில் முருகன் பாடலா... கண்டிப்பாய் அற்புதங்கள் நிகழ்த்துவார்...

    ReplyDelete
  15. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........