கொடியிடையில் மயங்கிக்
கொடுமை தனை இழைக்கும்
கொடியவரை அழித்திடவே
கொண்டு வாரும் புதுச் சட்டம்!
அடிமையல்ல பெண்ணினத்தின்
அடி வயிறு பத்தி எரிகிறது!
துணிவுடனே துப்பாக்கியைத்
தூக்கி நில்லும் இவ்விடத்தில்!
வெறிப் பிடித்த நாய்களென்று
கொன்று குவிக்கும் சட்டத்திற்கு
ஐந்தறிவும் ஒன்றுதான்
ஆறறிவும் ஒன்றுதான்!
வாய் பேசா நாய்களுக்கு
வகுத்த சட்டம் இப் பேய்களுக்கும்
வர வேண்டும் .இவ்வுலகினிலே என்று
வரும் வரைக்கும் கொடி பிடிப்போம்....
பெண்ணினத்தின் பெருமை சொல்லி
பெரிதும் தாளம் போடாமல்
கண்ணிமைக்கு நிகராக அவளைக்
காக்க வேண்டும் சட்டமிங்கே!
///வாய் பேசா நாய்களுக்கு
ReplyDeleteவகுத்த சட்டம் இப் பேய்களுக்கும்
வர வேண்டும் ///
அவசியம் வரத்தான் வேண்டும் சகோதரியாரே.
சிறப்பான கவிதை. எனது பதிவில் வெளியிட்ட பிறகு இங்கேயும் அதன் தொடர்ச்சியை படித்தேன்......
ReplyDeleteவாய்பேசா நாய்கள் கூட வல்லுறவு கொள்வதில்லை!..
ReplyDeleteகுணமறியா குடிகேடரைக் கொல்வதிலும் தவறு இல்லை!..
கனல் பறக்கும் கவிதை.
பெண்கள் நாட்டின் கண்கள் போல போற்றப் படவேண்டும்.
ReplyDeleteபேசிப்பேசி என்ன கண்டோம்
ReplyDeleteபெண்ணினமே எண்ணிப்பார்!
வீசு வாளெடுத்து வீழட்டும்
கேசமொடு அவன்தலையும்!...
ஆக்ரோசமான கவி தனில்
ஆத்திரத்தைக் கொட்டிக் காட்டிய கவி அருமை!
த ம.1
கடுமையான சட்டங்கள் வரத்தான் வேண்டும்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDelete//கண்ணிமைக்கு நிகராக அவளைக் காக்க வேண்டும்// ;)
ReplyDeleteஅருமையான உன்னதமான எண்ணங்கள் கவிதையாக மலர்ந்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.