வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே.இன்றைய எனது மறக்க
முடியாத நினைவுகளில் இடம்பெற இருப்பது இலங்கையில்
கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையில் வீற்று
இருக்கும் ஸ்ரீ வீர மகா கண்ணகி அம்மன் (பத்தினி)கோவில்.
இந்தக் கோவில் 1973 ல் ஸ்தாபிக்கப்பட்டது .இது ஒரு மிகச் சிறிய
கோவில். ஆனாலும் அம்பாளின் அருளாட்சிக்கு எல்லை இல்லை.
பக்த்தர்கள் தம் விருப்பம்போல அம்பாளுக்கு பாலாபிசேகம்
செய்வதுமுதற்கொண்டு அன்னதானம் வழங்குவதிலும் இந்த
ஆலயத்தைப் பராமரிப்பதுவரை அவரவர் விருப்பம்போல்
காணிக்கைகளைச் செலுத்தி அம்பாளின் அருளைப்பெற்று
வருகின்றார்கள்.வேண்டிய வரம் அளிக்கும் இந்தக் கண்ணகி
அம்மன் கோவிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள்
வந்துபோகின்றனர்.விசேஷ தினங்களில் அன்னையின் தரிசனத்தைக்
காண்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அத்தனைக்கும் காரணம்
நான் சொல்வதைவிட உங்களில் யாருக்காவது சந்தர்ப்பம் கிட்டினால்
இந்தக் கோவிலுக்கு ஒருதரம் சென்று வாருங்கள்.ஆலயங்கள்
இன்று முழத்துக்கு முழம் எங்கெல்லாம் அமைந்திருந்தாலும் சில
ஆலயங்களில்மட்டுமே புதுமையான உணர்வைப் பெறமுடிகின்றது.
அந்தவகையில் இந்தக் கோவிலில் உள்ள சிறப்பினை நான் பிறர்போல்
விளம்பரம் செய்வதர்க்குக்கூட விரும்பவில்லை.காரணம் என்
மனதில்க் குடிகொண்டிருக்கும் என் அம்பாள்மீது பக்தி மட்டும் அல்ல
நான் அவள்மீது நிறைந்த பாசமும் வைத்திருக்கின்றேன்.என் எண்ணம்
என் சிந்தனை உடல் பொருள் ஆவி அத்தனையிலும் குடிகொண்டிருக்கும்
இந்த உணர்வை வெறும் பிதற்றல் என பிறர் நம்ப மறுத்தால் அதைத்
தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்குக் கிடையாது.ஆனாலும் இந்த
அம்பாளினுடைய புதுமையை பலரும் அறியச் செய்வதில் எனக்கொரு
பேரானந்தம்.அதற்குக் காரணம் நிறையவே இருக்கின்றது.
எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிட முடியாது.ஆனாலும்
ஒரே வார்த்தையில் சொல்கின்றேன் நான் நானாக வாழ எனக்கு
வேண்டிய வரத்தைக் குறைவின்றிக் கொடுத்தாள்.இன்றும் அவளால்த்
தான் நான் உயிர்வாழ்கின்றேன்.இப்போது நான் இட்ட தலைப்பிற்கு
வருவோம்!...
இதுவரை இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் சிறப்பைத்தான் சொன்னேன். அன்று நான் காணும்போது கற்கோவிலில் குடிகொண்டு இருந்ததாய் என்று என் இதயக்கோவிலில் வந்து அமர்ந்தாளோ
அன்றுதான் அவளருளால் முதன்முறையாக இந்த வலைத்தளத்தை நான்
ஆரம்பித்தேன். முகவரி தொலைந்த எனக்கு இப்படி ஒரு முகவரியைத்
தேடியடைய வைத்தவளும் அவள்தான்.எப்படி என்று கேட்க்கின்றீர்களா?..
பல கனவுகள் சுமந்து எதுவுமே கைகூடாமல் இந்த வெறும்கூடு
இது இருந்து என்ன பயன். மனிதனாகப் பிறந்தால் எதையாவது சாதிக்க
வேண்டும் .நான் அப்படி எதைச் செய்துவிட்டேன்?ஏதாவது செய்யவேண்டும்
என்று ஆதங்கத்துடன் இந்தத் தாயை நினைந்து ஆழமாகச் சிந்தித்தேன் .
கிட்டத்தட்ட பத்துப் பாடல்கள் உருவாக்கும் வல்லமையை அவள்
எனக்கருளினாள். இதை எதிலாவது வெளியிட வேண்டும் என்று
என் ஆவலின் நிமிர்த்தம் எனக்கு இந்த வலைத்தள செய்திகிட்டவே
அவள்தந்த பாடலுடன் நான் ஆரம்பித்த இந்தத் தளத்தில் அவளின்
அன்புக்கு நான் அடிமை என்ற உணர்வு எனக்குள் எழவே "அம்பாளடியாள்"
என்று பெயர் சூட்டினேன்.அந்தப்பாடலே எனது ஆக்கங்களுள் பிரபல
மான இடுகைகளில் ஒன்றாக வெளிவந்த "ஆதி சக்தி ஆனவளே
அம்மா தாயே" என்றபாடல் இதை நானே பாடி வெளியிட உள்ளேன்.
இந்தப் பாடல் வருகின்ற 16 ம் திகதி என் வலைத்தளத்தில் நீங்களும்
கேட்கலாம். நன்றி உறவுகளே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
தவறாமல்க் கருத்திட்டு இந்த ஆக்கத்தை வாழ வையுங்கள் என்று
பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி வணக்கம்....................
தங்களுக்கு எந்தக்குறையுமின்றி இனிமையான வாழ்வை அந்த அம்மனே அமைத்துக்கொடுப்பாள் சகோதரி. அம்மனருள் என்றும் தங்களுக்குண்டு. தொடரட்டும் தங்கள் பணி். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களூக்கு 2 ஆலோசனைகள்
ReplyDelete1. பேரா பேராவாக பிரித்து எழுதுங்கள்
2. எழுத்துரு மாற்றுங்கள்
Thanks 4 sharing..
ReplyDeleteதங்களுக்கு எந்தக்குறையுமின்றி இனிமையான வாழ்வை அந்த அம்மனே அமைத்துக்கொடுப்பாள் சகோதரி. அம்மனருள் என்றும் தங்களுக்குண்டு. தொடரட்டும் தங்கள் பணி். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோ தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும்....
உங்களூக்கு 2 ஆலோசனைகள்
ReplyDelete1. பேரா பேராவாக பிரித்து எழுதுங்கள்
2. எழுத்துரு மாற்றுங்கள்
மிக்க நன்றி ஐயா தங்களின் ஆலோசனைக்கு.எனக்கு வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதுவது ஒரு புதிய
அனுபவம்.அத்தோடு என் இடுக்கை
இடும் பகுதியில் மொழிபெயர்ப்பு தொகுதி அதன் செயல்திறனை இழந்துவிட்டது.இதை சீரமைக்க
முடியவில்லை.இதனால் வேறோர் இடத்தில் எழுதி அதன் பிரதியை இங்கு இணைக்கும்போது அதிகம்
சிரமமாக உள்ளது.விரைவில் இக்குறைகளைத் தவிர்த்துக் கொள்கின்றேன் உறவுகளே...
Thanks 4 sharing..
ReplyDeleteநன்றி சகோதரரே!...........
பக்தியின் பலன் பலனடைந்தவர்களுக்கு மட்டுமே நன்கு விளங்கும் .....http://www.google.com/transliterate/ இந்த இணைய பக்கத்துக்கு சென்றால் தாங்கள் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய முடியும் ,எழுத்துருவும் நன்றாக இருக்கும் ...இது ஒரு சிறிய ஆலோசனை .
ReplyDeleteவந்தேன் பெண்ணே ...நான் கேட்ட நினைத்த பெயர் காரணம் புரிந்தது ...நன்றி ...வாழ்த்துக்கள்
ReplyDelete--
//மிக்க நன்றி ஐயா தங்களின் ஆலோசனைக்கு.எனக்கு வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதுவது ஒரு புதிய
ReplyDeleteஅனுபவம்.அத்தோடு என் இடுக்கை
இடும் பகுதியில் மொழிபெயர்ப்பு தொகுதி அதன் செயல்திறனை இழந்துவிட்டது.இதை சீரமைக்க
முடியவில்லை.இதனால் வேறோர் இடத்தில் எழுதி அதன் பிரதியை இங்கு இணைக்கும்போது அதிகம்
சிரமமாக உள்ளது.////
am also facing same problem..if u got solution plz share
தங்களின் நினைவுகள் இன்னும் விரியட்டும்..
ReplyDeleteபாடலைக் கேட்க ஆவலாக
ReplyDeleteஇருக்கிறேன்
புலவர் சா இரமாநுசம்
அம்மன் அருள்பெற்ற
ReplyDeleteஅம்பாளடியாள்
அவர்களே
உங்களின் படைப்புத்திறன்
மேலும் பெருகட்டும்.
வாழ்த்துக்கள்... நிறைய புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்...
ReplyDeleteபாடலைக் கேட்க ஆவலாக இருக்கின்றேன் அம்மாள் அருள்கடாச்சம் உங்களுக்கு அதிகம் இருக்கிறது அதனால்தான் ஆன்மீகப் பதிவுகளை இப்படிச் சிறப்பாக எழுதுகிறீர்கள்.
ReplyDeleteஅம்பாள் அடியாள்
ReplyDeleteபெயர்க்காரணம் கண்டு மகிழ்ந்தோம்.
நன்றி...
பக்தியின் பலன் பலனடைந்தவர்களுக்கு மட்டுமே நன்கு விளங்கும் .....http://www.google.com/transliterate/ இந்த இணைய பக்கத்துக்கு சென்றால் தாங்கள் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய முடியும் ,எழுத்துருவும் நன்றாக இருக்கும் ...இது ஒரு சிறிய ஆலோசனை .
ReplyDeleteநன்றி சகோதரரே.இதைத்தான் இப்போது நான் செய்துவருகின்றேன்.
ஆனாலும் இதன் பிரதியை இடுக்கைப் பகுதியில் இட்டபின் முன்னோட்டம்
பார்க்கும்போது அங்கும் இங்குமாக இடைவெளிகள் அதிகம் உள்ளதனால்
இதைச் சரி செய்வதுதான் இப்போது எனக்கு உள்ள குழப்பமே. இருந்தாலும்
நீங்கள் எடுத்துக்கொண்ட அக்கறைக்கு மிக்க நன்றி சகோதரரே...........
வந்தேன் பெண்ணே ...நான் கேட்ட நினைத்த பெயர் காரணம் புரிந்தது ...நன்றி ...வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோ தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும்..........
//மிக்க நன்றி ஐயா தங்களின் ஆலோசனைக்கு.எனக்கு வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதுவது ஒரு புதிய
ReplyDeleteஅனுபவம்.அத்தோடு என் இடுக்கை
இடும் பகுதியில் மொழிபெயர்ப்பு தொகுதி அதன் செயல்திறனை இழந்துவிட்டது.இதை சீரமைக்க
முடியவில்லை.இதனால் வேறோர் இடத்தில் எழுதி அதன் பிரதியை இங்கு இணைக்கும்போது அதிகம்
சிரமமாக உள்ளது.////
am also facing same problem..if u got solution plz share
அடடா உங்களுக்கும் இதேகெதியா!............
வழி தெரிந்தால் நிட்சயமாக அறிவிப்பேன் சகோ
கவலை வேண்டாம்....
அந்த அம்மனின் அருள் முழுமையாகக் கிட்டட்டும். தங்களின் குரல் வலைத்தளத்தில் ஒலிக்கக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteநன்றி சகோதரரே.....
தங்களின் நினைவுகள் இன்னும் விரியட்டும்..
ReplyDeleteநன்றி சகோதரரே....
பாடலைக் கேட்க ஆவலாக
ReplyDeleteஇருக்கிறேன்
புலவர் சா இரமாநுசம்
நன்றி ஐயா.....
அம்மன் அருள்பெற்ற
ReplyDeleteஅம்பாளடியாள்
அவர்களே
உங்களின் படைப்புத்திறன்
மேலும் பெருகட்டும்.
நன்றி சகோதரரே.......
வாழ்த்துக்கள்... நிறைய புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்...
ReplyDeleteநன்றி சகோ.......
பாடலைக் கேட்க ஆவலாக இருக்கின்றேன் அம்மாள் அருள்கடாச்சம் உங்களுக்கு அதிகம் இருக்கிறது அதனால்தான் ஆன்மீகப் பதிவுகளை இப்படிச் சிறப்பாக எழுதுகிறீர்கள்.
ReplyDeleteநன்றி சகோதரரே...
அம்பாள் அடியாள்
ReplyDeleteபெயர்க்காரணம் கண்டு மகிழ்ந்தோம்.
நன்றி...
மிக்க நன்றி அன்பரே!.......
அம்பாளின் அருளாட்சிக்கு எல்லை இல்லை//
ReplyDeleteஎல்லையற்ற பரம்பொருளின் அருள் கடட்சம் நிறைந்த பகிர்வுக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள்.