7/23/2011

மூச்சுக் காற்று மூன்றின் தொடர்....

பூத்துக் குலுங்கும் அன்பெனும் இன்பச் சோலையில் 
மூச்சுக்காற்றுகள் மூன்றாக வகுத்து என் அன்புச் சகோதரர் 
(வசந்தமண்டபம்) மகேந்திரன் அவர்தந்த தொடர் பணியினை 
அழகாக முடிந்தவரைத் தொடரவந்தேன் என் உறவுகளே 
அந்தவகையில் எனக்குத் தெரிந்த பாணியில் இதோ அந்த 
(தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்) மூச்சுக்கள் மூன்றின் தொடர். 
 
(1 )நல்லவராய் வாழ்வதற்குத்  தேவை.
      அன்பு ,பொறுமை,உண்மை.
 
(2 )கெட்ட சகுனங்கள் மூன்று.
      தீயவரைக்காணுதல்,தீயது பேசுதல்,தீயது செய்தல்.
 
(3 )நினைத்துப் பார்க்க வேண்டியது. 
      செய் நன்றி ,கடமை ,உறவுகள்.
 
(4 )நினைக்கக்கூடாதது  
      நடந்து முடிந்த தீயவை,கெட்ட சிந்தனை,துரோகம்.
 
(5 )வெற்றிக்கு வழி வகுப்பவை.
      தன்னம்பிக்கை,விடாமுயற்சி,பொறுமை.
 
(6 )வீரனுக்கு அழகு.
      பிறர் நன்மைகருதி விட்டுக்கொடுத்தல்.
      தீய செயல்கண்டு பொங்கி எழுதல்.
      வலுவிளன்தொரைக் காத்தல்.
 
(7 )அரசனுக்கு அழகு.
       மக்களைக் காத்தல்
       மக்களின் நன்மைக்காகமட்டும் உழைத்தல்.
       மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தல்
 
(8 )மனைவிக்கு அழகு.
      பணிவன்போடு பேசுதல்
      நற்பண்புகளுடன் வாழுதல்
      இல்லறத்தை அழகாகக் காத்தல்.
 
(9 )கணவனுக்கு அழகு.
      ஆணாதிக்கத்தை மறத்தல்.
      அன்பால் அரவணைத்துச் செல்லுதல்
      குடும்ப நன்மைகருதி உழைத்தல்.
 
(10 )பிள்ளைகளுக்கு அழகு.
        பெற்றவர் சொற்க்கேட்டு நல்லவராய் வளர்த்தல்.
        வயோதிப காலத்தில் பெற்றோரைக் காத்தல்.
        நல்ல பிள்ளை என்றுமட்டும் பெயர் எடுத்தல்.
 
(11 )உண்மையான சகோதரத்துவத்துக்கு இலக்கணம்.
        கூட இருக்கும்போது  இருந்த அன்பை இறக்கும்வரைக் காத்தல்.
        இடர்வந்தபோது தன்னை மறந்து உதவுதல்.
        பெண் என்றால் அவள் கற்ப்பை தன் உயிராய்  மதித்தல்.
 
(12)பூப்படைந்தவளின் நலனுக்கு உகந்தவை.
       குட்டை ஆடை அணிவதைத் தவிர்த்தல்.
       எங்கு சென்றாலும் நல்ல தோழியுடன் செல்லுதல்.
       புதிய ஆணின் நட்பை வேண்டப்பட்டவரிடம் தெரிவித்தல் 
 
(13 )நல்ல நட்புக்கு அழகு.
       முடிந்தவரை உண்மையாக இருத்தல்.
       ஆபத்தில் உதவுதல்,பிரிந்தாலும் பழகிய நட்பை மறவாதிருத்தல்.
 
(15 )எந்த  வலைத்தளத்துக்கும் அழகு.
        ஆபாசப் படங்களைத் தவிர்த்தல்,
        ஆபாசச் செய்திகளைத் தவிர்த்தல்
         தரமான பயனுள்ள செய்திகளை வழங்குதல்.
 
(16 )அடிக்கடி மாறக்கூடியது .
        மனித மனம்,இயற்கையின் குணம்,அறிவின் வளர்ச்சி .
       
இன்று இது போதும் உறவுகளே உங்கள் விருப்பம் கண்டு நாளையும்
தொடரும்!... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

30 comments:

 1. முத்தான மூன்றிலே
  மூழ்கி முத்தெடுடுக் வந்துள்ள
  அம்பாள் அடியாள் அவர்களே

  அன்போடு தந்த அத்தனையும்
  அருமை..

  இந்த மூன்று செய்திகளில் தங்களது
  மனம், நமபிக்கை, நன்றி, சமுதாய சிந்தனை என யாவும் தெரிகிறது..

  வாழ்த்துக்கள்.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 2. மூச்சுகாற்று மூன்று.... சீராக சிறப்பாக அழகாக வீசியது... மிகவும் பயனுள்ளவையாக குறிப்புட்டுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கேட்க மறந்தேன்,

  உந்துருளி விபத்தில் ஏற்பட்ட காயங்கள்
  குணமாகிவிட்டதா ?

  உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
  ஒரு 2 நாள் கழித்து கூட பதிவிடலாம்.

  ஆமாம்..
  உந்துருளி என்றால் ?

  TWO WHEELER ஆ ,

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 4. ம்ம் மூன்று மூன்றாய் நல்லாய் இருக்கு

  ReplyDelete
 5. ஒரே ஒரு கேள்வி இதில் வரும் கேள்விகளை நீங்கள் பெற்றீர்களா, அல்லது உங்கள் சொந்தக் கேள்விகளா? மற்றும்படி எல்லாம் நன்றாக உள்ளது. சகோதரர் ஜானகிராமன் கூறியது போல உங்கள் மனம், சிந்தனை தெரிகிறது. உங்கள் உடல் நலம் பெற இறையருள் கிட்டட்டும்.
  Vetha. Elangathilakam
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 6. அழகான சுவாசங்கள் சகோதரி,
  என் அழைப்பிற்கிணங்கி அருமையான
  படைப்பை நல்கியதற்கு
  மேலும் மேலும் உங்கள் படைப்புத்திறன் பெருக
  எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
  மிக்க நன்றி.
  தோழர் ஜானகிராமன் சொன்னதுபோல்
  உந்துருளி விபத்தா உங்களுக்கு???
  கவனம், ....
  சாலையின்மீதும் உங்கள் உடல்நிலைமீதும்

  அன்பன்
  மகேந்திரன்

  ReplyDelete
 7. ஒவ்வொருவரும் வீட்டில் பிரேம் போட்டு மாட்டலாம்,அருமை.

  ReplyDelete
 8. முத்தான மூன்றிலே
  மூழ்கி முத்தெடுக்க வந்துள்ள
  அம்பாள் அடியாள் அவர்களே

  அன்போடு தந்த அத்தனையும்
  அருமை..

  இந்த மூன்று செய்திகளில் தங்களது
  மனம், நம்பிக்கை, நன்றி, சமுதாய சிந்தனை என யாவும் தெரிகிறது..

  வாழ்த்துக்கள்.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  மிக்க நன்றி அன்பரே தங்கள் வரவும் வாழ்த்தும்

  என் மனதை மகிழவைத்தது.

  ReplyDelete
 9. மூச்சுகாற்று மூன்று.... சீராக சிறப்பாக அழகாக வீசியது... மிகவும் பயனுள்ளவையாக குறிப்புட்டுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்

  நன்றி சகோதரரே வரவுக்கும் வாழ்த்துக்கும்.....

  ReplyDelete
 10. கேட்க மறந்தேன்,

  உந்துருளி விபத்தில் ஏற்பட்ட காயங்கள்
  குணமாகிவிட்டதா ?

  உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
  ஒரு 2 நாள் கழித்து கூட பதிவிடலாம்.

  ஆமாம்..
  உந்துருளி என்றால் ?

  TWO WHEELER ஆ ,

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  இடித்துத் தள்ளியது மகிழுந்து இதைச் சொன்னால் என்னை முற்றிலும் ஓய்வு எடுக்கச் சொல்லிவிடுவீர்கள்
  என்றுதான் சற்று மறைக்க
  நினைத்தேன் முடியவில்லை.
  நடைபாதையில் மிக அழகாக சென்ற என்னை நிறுத்தாமல் வந்த மகிளுந்திடம்(கார்) இருந்து முற்றிலும் தப்ப நினைத்தபோது
  தெய்வத்தின் அருளால் வலது பக்கம் பட்டும் படாமலும் விழுந்த
  அடி என்னைப் பாதுகாப்பாய்த் தூக்கி எறிந்ததில் சற்று உடல் நோ ,
  பாதத்திலும் சின்ன முறிவு அவ்வளவுதான் யார்செய்த புண்ணியமோ பிளைத்துவிட்டேன்.நன்றி அன்பரே அன்போடு நலன் விசாரித்தமைக்கு.

  இங்கே எனக்கு நிகழ்ந்த தகவல் அறிந்தவர்கள்கூட ஒன்றைத் தெரிந்து
  கொள்ள வேண்டும் என்பது என் அவா .இப்பெல்லாம் நடைபாதையில் கூட விபத்து அதிகம் நிகழ்வதால் எல்லோரும் கொஞ்சம் விழிப்புணர்வுடன் செல்லுதல் வேண்டும்.குழந்தைகளைத் தனியே விடுவதிலும் அதிகம் கவனம் எடுங்கள் .எனக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் சுவிசில் இதுவே எமது
  நாட்டில் எனில் இன்னும் கவனம் அதிகம் தேவை அப்படித்தானே?. நன்றி அன்பரே.

  ReplyDelete
 11. ம்ம் மூன்று மூன்றாய் நல்லாய் இருக்கு

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் வாழ்த்துக்கும்....

  ReplyDelete
 12. VERY NICE ...CONGRATS PLZ CONTINUE

  நன்றி புதுமைப் பையா.போடுறேன்

  வாழ்த்துக்கள் தங்களின் உல்லாசப் பயணத்துக்கு....

  ReplyDelete
 13. ஒரே ஒரு கேள்வி இதில் வரும் கேள்விகளை நீங்கள் பெற்றீர்களா, அல்லது உங்கள் சொந்தக் கேள்விகளா? மற்றும்படி எல்லாம் நன்றாக உள்ளது. சகோதரர் ஜானகிராமன் கூறியது போல உங்கள் மனம், சிந்தனை தெரிகிறது. உங்கள் உடல் நலம் பெற இறையருள் கிட்டட்டும்.
  Vetha. Elangathilakam
  http://www.kovaikkavi.wordpress.com

  மிக்க நன்றி அம்மா தங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும்.
  எல்லாமே என் சொந்தக் கேள்விகள்தான். இங்கே பகிரப்படும்
  அனைத்துப் பகிர்வும் தனித்துவமாய் அமைய வேண்டும் என்பது
  எனது ஆவல்.இவை அனைத்தும் என் அம்பாளையே சாரும் . நன்றி
  என் உடல்நலத்திலும் கவனம் செலுத்தியமைக்கு .

  ReplyDelete
 14. எல்லா மூன்றுமே அருமை

  ReplyDelete
 15. அழகான சுவாசங்கள் சகோதரி,
  என் அழைப்பிற்கிணங்கி அருமையான
  படைப்பை நல்கியதற்கு
  மேலும் மேலும் உங்கள் படைப்புத்திறன் பெருக
  எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
  மிக்க நன்றி.
  தோழர் ஜானகிராமன் சொன்னதுபோல்
  உந்துருளி விபத்தா உங்களுக்கு???
  கவனம், ....
  சாலையின்மீதும் உங்கள் உடல்நிலைமீதும்

  அன்பன்
  மகேந்திரன்

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் வாழ்த்துக்கும்

  என்மீது காட்டும் அன்பிற்கும்.

  ReplyDelete
 16. ஒவ்வொருவரும் வீட்டில் பிரேம் போட்டு மாட்டலாம்,அருமை.
  மிக்க நன்றி ஐயா. தங்களின் ஒருவாசகமே எனக்கது
  திருவாசகம்போல் இருந்தது. நன்றி தங்களின் வரவுக்கும்
  பாராட்டுக்கும்........

  ReplyDelete
 17. எல்லா மூன்றுமே அருமை

  மிக்க நன்றி சகோதரரே!......

  ReplyDelete
 18. வணக்கம் சகோ,
  சிறிய இடை வேளையின் பின் வந்திருக்கிறேன்.
  வெவ்வேறு தலைப்புக்களின் கீழ், வாழ்விற்குத் தேவையான, நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய முத்தான மூன்று விடயங்களை, அறிவுரையாகப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமை.

  ReplyDelete
 19. எல்லொரு கடைபிடிக்க வேண்டிய மூன்று.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 20. நல்ல கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள்! உங்கள் பணிதொடர வாழ்த்துகிறேன்! நட்புடன் - புதியதென்றல்.

  ReplyDelete
 21. நல்ல கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. எல்லொரு கடைபிடிக்க வேண்டிய மூன்று.பகிர்வுக்கு நன்றி.

  நன்றி சகோ வரவுக்கும் கருத்துக்கும்.......

  ReplyDelete
 23. thanks 4 sharing

  சரி சகோ வரவுக்கு நன்றி.......

  ReplyDelete
 24. வணக்கம் சகோ,
  சிறிய இடை வேளையின் பின் வந்திருக்கிறேன்.
  வெவ்வேறு தலைப்புக்களின் கீழ், வாழ்விற்குத் தேவையான, நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய முத்தான மூன்று விடயங்களை, அறிவுரையாகப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமை.

  நன்றி சகோதரரே தங்களின் வரவும்

  பாராட்டும் கண்டு மனம் மகிழ்ந்தேன்......

  ReplyDelete
 25. எல்லொரு கடைபிடிக்க வேண்டிய மூன்று.பகிர்வுக்கு நன்றி.

  நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும்...........

  ReplyDelete
 26. நல்ல கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள்! உங்கள் பணிதொடர வாழ்த்துகிறேன்! நட்புடன் - புதியதென்றல்.

  நன்றி மிக்க நன்றி தங்களின் வரவும் வாழ்த்தும்கண்டு மனம் மகிழ்ந்தேன்......

  ReplyDelete
 27. நல்ல கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள்!

  நன்றி சகோதரி வரவுக்கும் பாராட்டுக்கும்.......

  ReplyDelete
 28. மூச்சுகாற்று மூன்று.... சீராக சிறப்பாக அழகாக வீசியது... மிகவும் பயனுள்ளவையாக குறிப்புட்டுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்
  Vetha.

  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........