3/12/2015

முடங்கிக் கிடந்தாள் அது அந்தக் காலம் !
காலம் கடந்து பெண்ணிங்கே 
  காற்றில் மிதந்து செல்கின்றாள் !
ஏலம்  விடுவோர் பின்வாங்க  
    என்றும் புதுமை காட்டித்தான் !
கோல விழியாள்  தான்கொண்ட 
    கொள்கை எதுவும் மாறாமல் 
பாலம் அமைத்துச் செல்கின்றாள்  
    பார்ப்போர் உள்ளமும்  கொண்டாட!

பெண்ணை அடிமை என்றோரும் 
     பெருமை கொள்ளும் பொற்காலம்
மண்ணில் தவழக் காண்கின்றோம்
     மாற்றம் இதுவே  போதாதா?.. 
கண்ணை மதிக்கத் தான்வேண்டும் 
     காலம் கடந்த பின்னாலும் 
எண்ணக் கருத்தில் மாற்றத்தை 
     என்றும் விரும்பார்  மாறுகவே !

சட்டம் வகுத்தார் பெண்ணுக்குச் 
   சார்பாய் எதுவும் இல்லாமல் !
திட்டம் இதனைத் தான்வென்று 
    தீபோல் எழுந்து நிற்கின்றாள் 
பட்டப் படிப்பால் எப்போதும் 
     பாரை வியக்க வைக்கும்பெண் !
முட்டப் பகைமை கொள்ளாதீர் 
     மூடர் எனவும்  நில்லாதீர் !

ஆட்டம் இழக்கச் செய்திடுவாள்    
     ஆளும் திறமை தான்கொண்டு !
பாட்டன் அவர்தம் முப்பாட்டன் 
      பாரில் எவரும் காணாப்பெண் ! 
கூட்டம் நடத்தி மானத்தைக் 
     கூவி இனிமேல் விற்போர்க்கும்  
சாட்டை அடிதான் தப்பாது !
      சற்றே இதனைச் சிந்திப்பீர் !

நாட்ட முடனே பொய்யின்றி 
   நாளும் உழைக்கும் பெண்ணுக்குச்
சூட்டப் பெயர்கள் தேடாதீர்
    சூடு சுரணை அற்றோரே !
வாட்டும் துயர்கள் போக்காமல்
    வாழ்வில் கொடுமை செய்வோர்க்கும் 
வேட்டும்  ஒருநாள் வைப்பாள்பார்
   வெல்லும் பெண்மை இவ்வுலகை !..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

40 comments:

 1. அருமை அம்மா.... சாட்டை அடி தப்பவே கூடாது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் சிறந்த நற் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

   Delete
 2. பெண்மை இவ்வுலகை வெல்லட்டும்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம 2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 3. //நாட்ட முடனே பொய்யின்றி
  நாளும் உழைக்கும் பெண்ணுக்குச்
  சூட்டப் பெயர்கள் தேடாதீர்
  சூடு சுரணை அற்றோரே !
  // நல்ல சவுக்கடி தோழி!
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் !:)

   Delete
 4. சூட்டப் பெயர்கள் தேடாதீர்
  சூடு சுரணை அற்றோரே !/// சரியான சாடல்.வாழ்த்துக்கள் புதிய ஆக்கத்திறனுக்கு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 5. பாரதி கண்ட கனவுகள் நனவாகட்டும். எழுச்சிமிகு வார்த்தைகள் தோழி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 6. அருமை சகோ உணர்ச்சி மிகுந்த வரிகள் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் !

   Delete
 7. சட்டம் வகுத்தார் பெண்ணுக்குச்
  சார்பாய் எதுவும் இல்லாமல்.,
  திட்டம் இதனைத் தான்வென்று
  தீபோல் எழுந்து நிற்கின்றாள்!..

  தீ போல எழுந்து நிற்க வேண்டும்!..
  அதைத் தான் விரும்புகின்றோம் நாங்களும்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 8. "வாட்டும் துயர்கள் போக்காமல்
  வாழ்வில் கொடுமை செய்வோர்க்கும்
  வேட்டும் ஒருநாள் வைப்பாள்பார்
  வெல்லும் பெண்மை இவ்வுலகை !.." என்ற
  வரிகளைத் தான் - நானும்
  அடித்துக் கூற விரும்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 9. வணக்கம்
  அம்மா
  பாரதி கண்ட எழுச்சி இப்போது பார் எங்கும் புரட்சி.. அருமையான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 10. சாட்டை அடிதான் தப்பாது சற்றே இதனைச் சிந்திப்பீர், ஒவ்வொரு வரியும் அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 11. சபாஷ்....சரியான வார்த்தை அடிகள் சகோ. நயமான வரிகள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 12. அருமையான அறுசீர்விருத்தப் பாக்கள்..

  தங்களின் தமிழ்த்தொண்டு தொடரட்டும் கவிஞரே!

  த ம கூடுதல் 1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 13. 'ஆண் +அவம் ' கொண்டோர்க்கு சரியான சாட்டை அடி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   மிகவும் சரியான கருத்து ஜீ ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete

 14. வணக்கம்!

  பெண்ணின் விடுதலையை எண்ணிக் கவிபடைத்தீர்
  பண்ணின் தலைமகன் பாரதிபோல்! - மண்ணின்
  இருள்போக்கும்! இன்ப எழிலுாட்டும்! அம்பாள்
  அருள்பூக்கும் ஆக்கம் அமுது!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா அமுதென்று கூறி அகம் மகிழ வைத்தமைக்கு !

   Delete
 15. கூட்டம் நடத்தி மானத்தைக்
  கூவி இனிமேல் விற்போர்க்கும்
  சாட்டை அடிதான் தப்பாது !
  சற்றே இதனைச் சிந்திப்பீர் !

  அடேங்கப்பா பயமால்ல இருக்கு
  என்ன ஒரு ஆழமான வரிகள் நன்றி சகோ மேலும் எழுதுங்கள் !
  வாழ்த்துக்கள்
  தம 12

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ அச்சம் எதற்கு ?..இது மிருகத்தனமான அப்படிக்கூட
   சொல்ல முடியாது சகோதரா அதையும் விட கொடுமையானவர்களுக்காக எழுதப்பட்ட பா மாலை .நீங்கள் இதை மிகவும் ரசித்துப் படியுங்கள் அது போதும் :)மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
  2. ஹா ஹா ஹா எனக்கு பயம் ஒன்றும் இல்லை சும்மாதான் போட்டேன் ஆனால் சந்தோசமாய் இருக்கு இப்படி ஒரு எழுத்தாற்றல் உங்களுக்குள் இருப்பதை எண்ணி தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்திடவும் வணங்கிடவும் எப்போதும் தயாராக இருக்கின்றேன் நன்றி சகோ

   வாழ்க வளமுடன்

   Delete
  3. சக எழுத்தாளர் என்ற வகையில் நானும் உங்களைப் போலவே உங்களை வாழ்த்திடவும் வணங்கிடவும் தயாராக இருக்கின்றேன் சகோதரா காரணம் உங்களின் எழுத்துக்களும் எங்களை இப்படித்தான் பிரமிக்க வைக்கின்றது உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . :)

   Delete
 16. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 17. எழுச்சிமிக்க கவிதை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 18. வாழ்வில் கொடுமை செய்வார்க்கு வேட்டுவைப்பார் என்ற வரிகள் காலத்தின் முன்னேற்றப் போக்கை தெளிவாக முன்வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .

   Delete
 19. அருமையான உணர்வுமிக்க, வீரப்பெண்ணின் முழக்கம் போன்ற வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........