3/06/2015

காக்கும் சக்தியே எமைக் காண ஓடிவா ...

                                                                           

பொன்னை அளித்தோம் ஏனிங்கே 
    பொல்லா தவரின் ஆசைக்குத்
தன்னைக் கொடுத்தும் தாழ்கின்றாள்
     தாய்மை நிறைந்த பெண்என்றும்! 
நன்மை எதையும் காணோமே
     நாளும் கொடுமை மேலோங்க
உன்னைத் துதித்தோம் பாரம்மா!
     ஊழை அகற்ற வா......அம்மா !

அல்லும் பகலும் துன்பத்தால்
     ஆன்மா துடிக்க லாமோசொல் ?!
கல்லும் கரையும் இந்நேரம்
      காக்க விரைந்து வா ,,தாயே !
நல்லோர் மனம்போல் வாழத்தான் 
     நன்மை அருளும் தெய்வம்நீ 
வல்ல துணையாய் எந்நாளும் 
      வந்திங் கினிமை அருள்வாயே !

கற்றார் எவரும் தம்போக்கில் 
   காலம் கடத்திச் செல்கின்றார் !
உற்றார் உறவினர் கூடத்தாம்  
   சுற்றம் மறந்து வாழ்கின்றார் !
நற்ற வமே..!நீ தானே...எந்  
     நாளும் பொழுதும் காப்பாயே !
அற்ப சுகத்தை உலகெண்ணி  
     அழிதல் அழகோ சொல்..தாயே !

அஞ்சிப் பிழைக்கும் வாழ்நாள்கள்  
     அன்பில் தவழ என்றென்றும்  
நெஞ்சில் துணிவைத் தந்திங்கே 
     நேர்மை வழியைக் காட்டம்மா ! 
பஞ்சம் மறையும் அப்போதே
     பாசம் மிகுந்த தாயுன்னால் 
கொஞ்சும் சலங்கை கூத்தாடும்  
      கோல விழிகள்  பூத்தாடும் !!!!

பெண்ணின் மனத்தைப் பொன்போல 
    போற்ற எவரும் செய்..தாயே !
கண்ணின் மணியே கற்பகமே 
     காவல் எமக்கு நீ..தானே !
எண்ணும் பொழுதே இன்பத்தை 
     என்றும் அருளும் அன்னைபோல் 
மண்ணில் எவரும் உண்டோ ..சொல்! 
      மாத வமே!..வா   எம்..தாயே ! 
      

      
 (படம் இணையத்தில் இருந்து
பெறப்பட்டது .நன்றி )                    

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

34 comments:

 1. தன்னைக் கொடுத்தும் தாழ்கின்றாள்
  தாய்மை நிறைந்த பெண்என்றும்!
  உண்மைதான்! மகளே! நலமா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வாருங்கள் புலவர் ஐயா !நான் நலமாக உள்ளேன் தாங்கள் எப்படி உள்ளீர்கள் ?பிள்ளைகளின் விடுமுறை நாள் ஆதலால் தொடர்ந்தும் ஆக்கங்கள் எழுத முடியாமல் போய் விட்டது இனித் தொடர்ந்து எழுதுவேன் .மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 2. இன்றைய சூழலை விளக்கும் வரிகள் சிறப்புங்க தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 3. பெண்ணின் மனத்தைப் பொன்போல
  போற்ற எவரும் செய்..தாயே!..
  கண்ணின் மணியே கற்பகமே
  காவல் எமக்கு நீ..தானே!..

  அப்படியே அன்னை அருள் புரிய வேண்டுகின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 4. விருத்தப்பாக்கள் அருமை!
  ரசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா !

   Delete
 5. Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா !

   Delete
 6. அருமை அம்மா...

  நீண்ட நாட்களுக்குப் பின் பகிர்வைக் கண்டு மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா !

   Delete
 7. வணக்கம்
  அம்மா
  பாடிய வரிகள் கண்டு மகிழ்ந்தது மனம்...
  மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 8. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 9. நெஞ்சில் துணிவைத் தந்து
  நேர்மை வழியைக் காட்டுவார்
  அருமை
  தம 8

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 10. மனதை வருடும் வரிகள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 11. தமிழ் மணம் 10

  அருமையாய் கோர்த்த விருத்தப் பாமாலை....
  உடல் நலம் தானே...தோழி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி !
   நான் மிகவும் நலமாக உள்ளேன் அவ்வாறே தாங்களும்
   நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன் .

   Delete
 12. கவிதை நெகிழ்சியடைய வைத்து விட்டது
  தமிழ் மணம் 12

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !

   Delete

 13. வணக்கம்!

  அன்னையை வேண்டி அளித்த அருங்கவிதை
  பொன்னையே ஒக்கும் பொலிந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !

   Delete
 14. மிகவும் அருமையான பொருள் பொதிந்த வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !

   Delete
 15. பெண்ணின் மனத்தைப் பொன்போல
  போற்ற எவரும் செய்..தாயே !
  கண்ணின் மணியே கற்பகமே
  காவல் எமக்கு நீ..தானே !//

  அம்மாதான் காவல் தரவேண்டும் என்பது உண்மை.
  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !

   Delete
 16. போற்றிப் புகழும் இத்தாயும்
  புண்ணியம் கோடி நல்கட்டும்
  ஏற்றித் தொழுவோம் எந்நாளும்
  எங்கும் சாந்தி நிலைபெறவே !

  அருமை சகோ வார்த்தைகளின் ஆழம்
  சொல்லடுக்கு அற்புதம் தொடரட்டும் கவிப்பயணம்

  வாழ்த்துக்கள்
  தம 14

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........