5/31/2011

தீராத சுமை.....

கதிர் அறுக்கக் குனிந்த தலை
கை அறுத்து நின்றதடா!
சிந்திய இரத்தத் துளிகளினால்
சிவந்த மண்ணும் அழுததடா!
களை எடுக்கும் கமக்காரன்
களங்கம் அற்ற உழைப்பாளி-அவன்  
நினைப்பு எங்கே போனதென்று
எமக்குமட்டும்தான்  தெரியுமடா!

சொல்ல வழி இல்லையடா!
எம் சொந்தங்களின் வலியதனை
அன்னை என நினைத்த பூமி
நல் அறுவடையைத் தந்த பூமி 
எம் வம்சமதை வளர்த்த பூமி 
வறுமை  நிலை துடைத்த பூமி 
நல் உறவுதனை துலைத்து விட்டு
உருக்குலைந்து நிற்பதனை

நெஞ்சமதில் நினைத்துவிட்டால்
இந்த நினைப்பு எங்கே போகுமடா!
கணக்கற்ற உயிர்ப்பலிகள் இங்கே
கருணையற்று நிகழ்ந்ததடா!
எமக்கென ஒரு வாழ்வு அது இன்றும்                                                           இருட்டிநிலேதான்  இருக்குதடா!
இந்தக் கவலைமட்டும் இல்லையென்றால்
கண்களுக்கு ஏது தொல்லையடா !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........