5/28/2011

காத்திருந்த விழிகள்....

முற்றத்து வெண்ணிலவே எம்மை
முதுகில் சுமந்தவள் எங்கே!
பத்துமாதம் சுமந்தவள்
பாதியிலே உயிர்துறந்தாள்!

எம் மொத்த உறவுகளையும்
தன் முதுகின்மேல் சுமந்தவள் அன்று
முள் வேலிக்குள் அகப்பட்டாள்
இன்றும் கத்திக் கத்தியே எம்
காலங்களும் வீணானதே!

கலங்குகின்றோம் வருந்துகின்றோம்..
கண்ணீரில் தினம் குளித்தும்  
தணியாத உயர் வெப்பத்தால் இதயம் 
கருகியே உருகிடும் இந்நிலை மாறுமோ!

கிட்டிப்புல்லு விளையாடும்போது 
எட்டி எட்டி அளந்த கரம் உன்னை 
விட்டுப் பிரிந்த நாள்முதலாய் 
தொட்டுத் தழுவத் துடிக்கிறதே!

ஏக்கம் கொண்ட நெஞ்சத்தில் 
தூக்கம் கெட்டுப் போனதே!
மாற்றமின்றி எம் வாழ்க்கை
மயாணம் நோக்கிச் செல்லுதே!

பட்டி தொட்டி எங்கேயும் நாம் 
பாடித்திரிந்த காலங்கள்
நித்தம் மனதை வாட்டுதே!
நீதி செத்துப் போனதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........