Showing posts with label மறக்கமுடியாத சில நினைவுகள். Show all posts
Showing posts with label மறக்கமுடியாத சில நினைவுகள். Show all posts

7/11/2011

மறக்க முடியாத சில நினைவுகள்..(தொ -2 )

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே.இன்றைய எனது மறக்க 
முடியாத நினைவுகளில் இடம்பெற இருப்பது இலங்கையில் 
கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையில் வீற்று
இருக்கும் ஸ்ரீ வீர மகா கண்ணகி அம்மன் (பத்தினி)கோவில்.
இந்தக் கோவில் 1973 ல் ஸ்தாபிக்கப்பட்டது .இது ஒரு மிகச் சிறிய
கோவில். ஆனாலும் அம்பாளின் அருளாட்சிக்கு எல்லை இல்லை.
பக்த்தர்கள் தம் விருப்பம்போல அம்பாளுக்கு பாலாபிசேகம்
செய்வதுமுதற்கொண்டு அன்னதானம் வழங்குவதிலும் இந்த 
ஆலயத்தைப் பராமரிப்பதுவரை அவரவர் விருப்பம்போல் 
காணிக்கைகளைச் செலுத்தி அம்பாளின் அருளைப்பெற்று 
வருகின்றார்கள்.வேண்டிய வரம் அளிக்கும் இந்தக் கண்ணகி
அம்மன் கோவிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள்
வந்துபோகின்றனர்.விசேஷ தினங்களில் அன்னையின் தரிசனத்தைக்
காண்பதற்கு மிகவும்  சிரமமாக இருக்கும். அத்தனைக்கும் காரணம்
நான் சொல்வதைவிட உங்களில் யாருக்காவது சந்தர்ப்பம் கிட்டினால்
இந்தக் கோவிலுக்கு ஒருதரம் சென்று வாருங்கள்.ஆலயங்கள்
இன்று முழத்துக்கு முழம் எங்கெல்லாம் அமைந்திருந்தாலும் சில
ஆலயங்களில்மட்டுமே புதுமையான உணர்வைப் பெறமுடிகின்றது.
அந்தவகையில் இந்தக் கோவிலில் உள்ள சிறப்பினை நான் பிறர்போல்
விளம்பரம் செய்வதர்க்குக்கூட விரும்பவில்லை.காரணம் என் 
மனதில்க் குடிகொண்டிருக்கும் என் அம்பாள்மீது பக்தி மட்டும் அல்ல 
நான் அவள்மீது நிறைந்த பாசமும் வைத்திருக்கின்றேன்.என் எண்ணம் 
என் சிந்தனை உடல் பொருள் ஆவி அத்தனையிலும் குடிகொண்டிருக்கும்
இந்த உணர்வை வெறும் பிதற்றல் என  பிறர் நம்ப மறுத்தால் அதைத்
தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்குக் கிடையாது.ஆனாலும் இந்த
அம்பாளினுடைய புதுமையை பலரும் அறியச் செய்வதில் எனக்கொரு 
பேரானந்தம்.அதற்குக் காரணம் நிறையவே இருக்கின்றது.
எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிட முடியாது.ஆனாலும்
ஒரே வார்த்தையில் சொல்கின்றேன் நான் நானாக வாழ எனக்கு 
வேண்டிய வரத்தைக் குறைவின்றிக் கொடுத்தாள்.இன்றும் அவளால்த்
தான் நான் உயிர்வாழ்கின்றேன்.இப்போது நான் இட்ட தலைப்பிற்கு 
வருவோம்!...
 இதுவரை இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் சிறப்பைத்தான்     சொன்னேன். அன்று நான் காணும்போது  கற்கோவிலில் குடிகொண்டு இருந்ததாய் என்று என் இதயக்கோவிலில் வந்து அமர்ந்தாளோ
 
அன்றுதான்  அவளருளால் முதன்முறையாக இந்த வலைத்தளத்தை நான்
ஆரம்பித்தேன். முகவரி தொலைந்த எனக்கு இப்படி ஒரு முகவரியைத்
தேடியடைய வைத்தவளும் அவள்தான்.எப்படி என்று கேட்க்கின்றீர்களா?..
பல கனவுகள் சுமந்து எதுவுமே கைகூடாமல் இந்த வெறும்கூடு
இது இருந்து என்ன பயன். மனிதனாகப் பிறந்தால் எதையாவது சாதிக்க 
வேண்டும் .நான் அப்படி எதைச் செய்துவிட்டேன்?ஏதாவது செய்யவேண்டும்  
என்று ஆதங்கத்துடன் இந்தத் தாயை நினைந்து ஆழமாகச் சிந்தித்தேன் .
கிட்டத்தட்ட பத்துப் பாடல்கள் உருவாக்கும் வல்லமையை அவள்
எனக்கருளினாள். இதை எதிலாவது வெளியிட வேண்டும் என்று
என் ஆவலின் நிமிர்த்தம் எனக்கு இந்த வலைத்தள செய்திகிட்டவே
அவள்தந்த பாடலுடன் நான் ஆரம்பித்த இந்தத் தளத்தில் அவளின்
அன்புக்கு நான் அடிமை என்ற உணர்வு எனக்குள் எழவே "அம்பாளடியாள்"
என்று  பெயர் சூட்டினேன்.அந்தப்பாடலே எனது ஆக்கங்களுள் பிரபல
மான இடுகைகளில் ஒன்றாக வெளிவந்த "ஆதி சக்தி ஆனவளே
அம்மா தாயே" என்றபாடல் இதை நானே பாடி வெளியிட உள்ளேன்.
இந்தப் பாடல் வருகின்ற 16 ம் திகதி என் வலைத்தளத்தில் நீங்களும்
கேட்கலாம். நன்றி உறவுகளே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
தவறாமல்க் கருத்திட்டு இந்த ஆக்கத்தை வாழ வையுங்கள் என்று
பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி வணக்கம்.................... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

நெடுந்தீவுபற்றிய சில அரிய தகவல்கள்.....


  
யாழ். குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஏறக்குறைய 32 கிலோ மீற்றருக்கு அப்பாலும் இராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவிலும் நெடுந்தீவு அமைந்துள்ளது.
இத்தீவு கிழக்கு மேற்காக 9 கிலோ மீற்றர் நீளத்தையும் வடக்குத் தெற்காக 6 கிலோ மீற்றர் அகலத்தையும் ஓர் சரிந்த இணைகர வடிவில் சுமார் 30 கிலோ மீற்றர் சுற்றளவையும் கொண்டது.
இத்தீவு தலைத் தீவு பசுத் தீவு பால் தீவு அபிஷேகத் தீவு தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழை க்கப்பட்டு வந்தன. எனினும் இப் பெயர்கள் யாவும் காரணப் பெயர்களாகவே அமைந்தன.


             இது பெருக்கு மரம் இம்மரம் பலநூறு ஆண்டுகளுக்கு 
முர்ப்பட்டதெனக் கூறுகின்றார்கள்.நெடுந்தீவில் 
இருக்கும் இந்த பெருக்குமரமே தென்னாசியாவில் 
இரண்டாவது பெரிய சுற்றளவான  மரமும் ஆகும். 

இதுதான் நெடுந்தீவு மாவலி துறைமுகம்.இதைப் பயன்படுத்தி
ஒல்லாந்தர் குதிரைகளை ஏற்றி இறக்கினார்களாம்.அதனால்த்தான்
இதற்க்கு இப்பெயர் உருவானது என்றார்கள்.அதற்கு அருகில் உள்ள
புகைப்படம் நெடுந்தீவில் காட்டுக் குதிரைகள் வசிக்கும் இடம்.
பார்பதற்கு றொம்ப  அழகா இருக்கும்.
                                           

இதுதானுங்க கல்வேலி பார்ப்பதற்கு மிக மிக அழகாக
இருக்கும்.ஒரே அளவில்  இந்த வேலிகள் கட்டியுள்ள
அந்த நுட்பத்தை என்னவென்று சொல்ல!....ஆனா
இவங்க றொம்ப உறுதியாகக் கட்டி வச்சிருக்காங்க.
இதையே வேறமாதிரி யோசிச்சுப் பாருங்க நம்ம
சண்டைக்கார வீடுகளில் இந்தமாதிரி வேலி இருந்தா
நிலைமை எப்படி இருக்கும் அதனால ஆதாரபூர்வமாய் 
இன்னொரு அதிசயம் சொல்லுறன் கேளுங்க. 
இதனுடய பாதி அங்க நிறைய இருக்குங்க.என்ன நா  சொல்லுறது
பொய் என்குறீர்களா?....இது என்ன சின்னம்?...காதல் சின்னம்தானே?..
அப்ப நா சொல்லுறதுதா ரொம்ப சரி....எனுன்னா காதல் அங்க நிறைய
இருக்குது சின்னம்மட்டும்தான் இல்ல.வேணும் எண்டா கீழ நெடுந்தீவு
வெளிச்சவீடு இருக்கு அதப் பயன்படுத்தி கப்பலையோ படகையோ
புடிச்சு நெடுந்தீவிலையே போய்ப் பாருங்க. ஒரு வேலியிலகூட
இரத்தக்கற காணமாட்டீங்க.அதவிட றொம்ப முக்கியமா ஒண்ணத்
தெரிஞ்சுகொள்ளணும் தை மாசிமாசம் நெடுந்தீவுக்கு போறத
கனவாலகூட நினைச்சுப் பாக்காதீங்க அம்புட்டுத்தா. அனுபவத்தோட
சொல்லுற. கப்பல் பனையளவு தூரம் குதிச்சு குதிச்சுத்தான் போகும்.
பெரும்பாலும் இந்த மாசங்களில அவங்களே பயணம் செயுறதில்லயாம்
நான் நெடுந்தீவுக்கு போயிற்று வந்ததில றொம்ப  றொம்ப மறக்க
முடியாத சம்பவமே இதுதான்.பலமுற மாலுமி சொர்க்கதக் காட்டினார்
ஆனா எனக்குத்தான் றொம்ப பயமா இருந்திச்சு.உயிரை கையில 
புடிச்சுக்கொண்டு ஓடியாந்திற்றன்.ஆகா ஒண்ட மறந்திற்ரன் வெடி
அரசன் கோட்டை அது ரொம்ப நல்லா இருந்திச்சு.நா குடிச்ச கூழும்
நல்லா இருந்திச்சு இப்ப நா உங்களுக்கு குடுத்த கூழ் நல்லா இருந்தா
கீழ உள்ள வெளிச்சவீட்டப் பயன்படுத்தி நெடுன்தீவப் போய்ப் பாருங்க
இதுக்கு மேல சத்தியமா எனக்கு நேடுந்தீவப்பத்தி ஒண்ணுமே தெரியாது.
ஆனா அடுத்த பதிவு அத பாக்க தவறீடாதீங்க இது றொம்ப முக்கியமானது.
                                                  
ஆகா ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல
மறந்திற்றன்.நீங்க இன்னும் நல்லா நெடுந்தீவு
பற்றி தெரிஞ்சுக்க வேணும் என்றால்
www . neduntheevu . com இதில்  welcome  to  neduntheevu
சென்று பாருங்கள். ஹி.....ஹி.....ஹி..........தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/10/2011

கொடையிற் சிறந்த "கொடிவேல்"

ஏவாமற் பணிபுரிய ஈசன் எமக்களித்த
இருகரமே மூவா மக்களுள் முனிவரும்
நின்கருணை உளமறிவார்...........
 
நாவால் நாமுரைக்க முடியா நின்பணியது!..
காரிருளில் ஒருவிளக்காய் எமைக்காத்து 
நின்ற திருவிளக்கே வானுலகம் சென்றாலும் 
வையத்தே நின்புகழ் வாழ்வாங்கு வாழ 
வள்ளலே நாகேந்திரரே நின்பணி  பூவோடு 
மணமதுபோல் பூவுலகில் நிலைத்திருக்க 
நன்நாவுடைய மனிதரெல்லாம் 
நின்நன்றியை எடுத்துரைக்க வையத்தே
நின்வம்சமெல்லாம் தழைத்திருக்க மாறாது
மறையாது நின்பணி தொடர்ந்திருக்க
மறுபடியும் பிறந்து இங்கே வாழ்வாங்கு 
வாழ வாழ்த்துரைப்போம்....
 
என்ன இந்தப் பிறவியென இருளில்
கிடப்பவர் முன் தன்னை அழித்து ஒளிகொடுக்க
இத்தரணியிலே மெழுகினைப்போல்
கல்வியொடு கருணையும் கலந்து பிறந்த மானிடருள்
உன்னை ஒருவனாய் ஒளிகொடுக்கும் தலைவனாய் 
எண்ணி மகிழ இறைவன் எமக்களித்த வள்ளல் 
பெருந்தகையே எம் வாழ்வில் இன்பம் அளித்த 
நாகேந்திரரே எம்மையாம் இழந்த பின்னும் 
உன்பெயர் நிலைத்திருக்கக் கவிபாடிடுவோம்.... 
 
நெஞ்சமெனும் ஆலயத்தில் நிழல்
கொடுத்த தந்தையிடம்-தஞ்சமென
வந்தவர்க்குத்  தானம் கொடுத்தகரம்
பஞ்சமெனும் நிலைபோக்கி பாசமளிக்கும்
மனமுனை நெஞ்சுருக வாழ்த்துகிறோம்
நித்தமும் பணிபுரிந்த ஒப்பிலா அன்பின்
உணர்வுடைய அன்னையே!...தந்தையே!..
நின் ஊனுடல் மறைந்திடினும் எம் உள்ளத்தே
பெரும் பேருடனும் புகழுடனும் திகழும் மனம்
வாழ்க வாழ்கவென வாழ்த்துரைப்போம்....
 
தீவொடு தீவாய் திகளுமொரு நெடுந்தீவினிலே
பூவொடு நாரினைப்போல் பிணைந்தனர் நற்பணியில் 
பூவுலக நாயகனாம் புண்ணியனாம் 
நாகேந்திரரொடு செல்லம்மா கரம்பிடித்து 
சேவையினால் தன்தேவை மறந்த இனம் 
அல்லும் பகலும் இணைந்தன்பாய் இரு உயிரும் 
சொல்லில் அடங்காப் பணிபுரிந்தனரே!.......
கண்ணின் மணியெனக் காத்த நெடுந்தீவில் 
இன்னும் பலபிறவி எடுத்து இங்கே நலம்வாழ 
வாழ்த்துரைப்போம்...........
 
காரிருளில் ஒரு விளக்காய் 
கருணையுடைய திரு விளக்காய்
பார் புகழ வந்தபிதா நெடுந்தீவினிலே
நெஞ்சை நெகிழவைத்து நித்தமும் சேவைசெய்து 
எமை உத்தமராய் வாழ வைத்து
ஒளிகொடுத்த தெய்வமே உயர்திரு 
நாகேந்திரரே நின்உருமறைந்து போனாலும் 
வழிவழியாய் உன் கருணைக் கரம்கொடுத்த 
பொருள் மறவோம் புண்ணியனே உனது 
உடல்கொடுத்து எமக்களித்த வரம் மறவோம்
செந்தமிழன் சிரம் காக்க சேவையிலே தன்
தேவை மறந்த மாமனிதன் தேடித் தேடி 
வரம்கொடுத்த தெய்வமே உனது
மூச்சுக்காற்றில் முனிவரும் தன் தவம் துறப்பார் 
மன்னவனோ அவன்புகழில் ஒருகணம் 
மயங்கி நிற்பான் தன்னையொருவர் 
புகழுரைத்தால் அதைத்தவறு என்றே 
இவர் அறிவுரைப்பார்!...........
வெறும் சொல்லில் மட்டும் செயலைக் 
காட்டும் மனிதர் வாழும் இவ்வுலகில் 
பள்ளிப்பாலகரும் சொல்லி மகிழ்ந்திடக் 
கல்விக்கூடம் தந்த பிதா.......
தண்ணிக்கிணறுடன் இறைதாகம் தீர்த்திட 
கோவில் அமைய சேவை புரிந்த பிதா...
எம்மை உலகொடு இணைந்து  வாழ
இயந்திரப்படகை வரவழைத்தார் 
தன்னைநாடி வருவோரெல்லாம் 
தன்னுறவாக எண்ணி மகிழ்ந்தார் 
தானம் கொடுத்து தானும் மகிழ்ந்து 
எம் தலைவனைப்போல நின்றார்!..
வானம் இறைக்கும் நீரைப்போல 
தானும் கொடுக்கும் இடமறியார்
ஊசி முனையிலும் பொருளைத்தேடி
அலையும் மனிதர்கள் வாழும் உலகில் 
கொடையில் சிறந்த மனிதனதனால் 
கொடிவேல் என்று பெயரும் பெற்றார். 
 
(இதுவே எனது முதலாவது கவிதை அரங்கேற்றம்.
அடுத்த பதிவிலும் இன்னுமொரு வித்தியாசமான 
அனுபவத்தோடு சந்திக்கின்றேன் தொடருங்கள் 
உறவுகளே......) 
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மறக்கமுடியாத சில நினைவுகள் (தொ.1 )

வணக்கம் என்அன்புக்கு  இனிய உறவுகளே இன்றைய பதிப்பு இதுவரை 
நான் எழுதிவந்த ஆக்கங்களுள் முற்றிலும் வித்தியாசமானது.என் மன 
உணர்வுகளோடு தொடர்புடைய சில மறக்க முடியாத என் நினைவுகளைத் 
தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இந்த அம்பாளடியாள் மிகவும் மகிழ்ச்சி
அடைகின்றாள்.அந்தவகையில் இன்றைய முதற்பதிப்பு நெடுந்தீவுபற்றியும்
அங்கு வாழ்ந்த ஒரு மாமனிதரைப்பற்றியும் நான் அறிந்த சிலவற்றைத்
தங்களுக்கு தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.அதன் அடிப்படையில் 
நெடுந்தீவின் முடிசூடா மன்னனாகத்  திகழ்ந்த   ஸ்ரீமான். சுப்பிரமணியர் 
நாகேந்திரர் அவர்களும் அவரது பாரியார் ஸ்ரீமதி . நாகேந்திரர் செல்லம்மா
அவர்களைப்பற்றிய  தகவலும் இன்றைய எனது ஆக்கத்தில் இடம்பெற 
இருக்கின்றது.  என்னைப்  பொறுத்தவரையில்     இவர்களைப்பற்றித்  
தெரியாதவர்கள் ஈழத்தில் மிகக் குறைவாகத்தான்  இருக்க முடியும்.
இருப்பினும் இவர்களைப்பற்றி என் வலைத்தளத்தில் குறிப்பிடுவதை
நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன்.காரணம் மக்களுக்காக
தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களுக்கு சேவை செய்வதையே
தம் வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்த நெடுந்தீவின் வரலாற்று நாயகன், பெருந்தலைவன், நெடுந்தீவின்   முதன்  முதல்  கிராமசபைத் தலைவராகவும் கிராமத் தலைமைக்காரராகவும் , சமாதானநீதவானாகவும்  பணியாற்றியவர்.அதுமட்டும் அல்லாமல் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தை ஆரம்பித்து சொந்தச் செலவில் தற்காலிக பாடசாலையை அமைத்து வழங்கியவர்.மக்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்த உத்தமர் என்றும் நெடுந்தீவில்
நான்குமுறை கிராமசபைத் தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு அம்மக்களினது நன்மைகருதி போக்குவரத்துவசதி,கல்வி,சமயப்பணி,          விவசாயம்போன்ற துறைகளில் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்ப்படுத்தி மக்களின் மனதில் தனது இந்த அரிய சேவையினாலும் நற்குணத்தினாலும் கொடிவேல் என்று பெயர்பெற்ற இந்த மகானைப்போன்றே அவரது மனைவியாரும் ஈழத்தின் முதற்பெண் கிராமசபைத் தலைவியாக நெடுந்தீவு கிராமசபையால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பெற்று உலகில் நெடுந்தீவுக்குப்பெருமை  சேர்த்தவர்என்பதும் அன்று  மகாவித்தி யாலயத்தை   நிரந்தர கட்டடமாக அமைக்க தனது காணியைத் தந்துதவியவர்  என்பதும் நான் கேள்வியுற்ற சம்பவங்கள்.
 
மண்ணில் மலர்வு :1889 -11  -14              மண்ணில் மலர்வு 1900 - 04 -26 
கிராமசபைத் தலைவராக 1932 -1935  கி .சபைத்  தலைவியாக1941  .1944  
இரண்டாம் முறை                 1935  -1938  கி .சபைத்  தலைவியாக1944  - 1948
மூன்றாம் முறை                   1952  - 1956
நான்காம் முறை                   1939  -1952
மண்ணில் உயர்வு: 1973  - 07 - 02            மண்ணில் உயர்வு: 1989 - 07 - 12  
 
அது சரி இத்தனை தகவலுக்கும் இன்றையஎனது தலைப்பிற்கும் என்ன  தொடர்பு இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா?...இருக்கின்றதே. உங்களுக்கு நன்கு தெரியும் எனக்கு கிறுக்கும் பழக்கம் அதிகம் உண்டு  என்பது .அந்தவிசயம் எப்படியோ இந்தக் குடும்பத்தினருக்கு தெரியவந்ததனால்  அவசரத்துக்கு நல்ல கவிஞர்கள் கிடைக்காதபட்சத்தில் இந்த மிளகுரசம் போதும் என்று எனக்கு ஒருசந்தர்ப்பத்தை  வழங்கினார்கள்.    வழங்கிய தோடு மட்டும் நின்று  விடாமல் கவிதை அருமையாக   இருக்கின்றது  என்றும் அதை நீயே வந்து பாடித்   தரவேண்டும் என்றும்  அந்தநெடுந்தீவு  மண்ணுக்கு என்னை அழைத்தனர். பிறகு சொல்ல வேண்டுமா என் நிலையை!...  கவிபாடும் தீவுக்கு என்  முதற்கவிதை அரங்கேற்றம்  அத்தோடு என் ஆட்டம் முற்றுப்புள்ளி பெற்று  விடுமோ என்ற எனது       மனநிலையை சொல்லி  வேலை இல்லை!!!.....  ஆனால் நான் தப்பித்துக்  கொண்டேன். மாறாக  அவர்கள் எனக்கு அளித்த கௌரவம்,  உபசரிப்பு  அவைதான் இன்றும்  நான்  இவ்வளவு துணிச்சலாகக்  கவிதைகளை     எழுதக்காரணம்.  இப்போது  சொல்லுங்கள்    என் நீங்காத நினைவுகளில்  இடம்பெற்ற  இந்த  நிகழ்வுகளை  என்றும் என்னால் மறக்க முடியுமா?...           அதுமட்டும் அல்ல நான் பிறப்பதற்கு முன்னால்த்தோன்றி மறைந்த இந்த  இரு புண்ணியயீவன்களின்  சேவையைப் பாராட்டி அவர்களது  உருவப்  படத்தை அவர்கள்  உருவாக்கிய  மகாவித்தியாலயத்தில் திரைநீக்கம்  செய்துவைத்து பலரது  சிறந்த  ஆக்கங்களுடன் எனது  ஆக்கத்தையும் இணைத்து நூல்வெளியீடு செய்த அந்தநிகழ்வின்போது  பலநூற்றுக் கணக்கான  மாணவர்கள், ஆசிரியர்கள்மாமேதைகளின்  மத்தியில்  துணிச் சலாக இந்த இருவரினது சேவைகளையும்,பெயரையும்  கருப்பொருளாக  வைத்துகவிதையை  பாடலாகப்  பாடிய  அந்த நிகழ்வை   நான்  எவ்வாறு  மறப்பேன்!.....                                                                                                        இவ்வளவுதானா  இல்லை இன்னும் நிறையவே    இருக்கிறது.  அவர்கள் மனம்போல இந்தசிறுதுரும்புடன்  ஆடிப் பாடி மிக    அழகாக உபசரித்து தங்கள் ஊரைச் சுற்றிக்காட்டினார்களே இதைநான்      எவ்வாறு  சொல்வேன்........மொத்தத்தில் என்  வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத  சந்தோசத்தை  அன்று நான் அனுபவித்தேன்.இதற்கு பல காரணங்கள் இருதாலும் இன்று இந்த ஆக்கத்தை நான் எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.அதுதான் நன்றிக்கடன்.எனது இந்த ஆக்கத்தைக் காணும் ஒவ்வொருத்தர் இதயத்திலும் இந்த புண்ணிய யீவன்களின் நினைவுகள் ஒரு மீள் பதிவாக மலரவேண்டும் என்பதே        என் ஆவல். அடுத்த பதிவில்எனது"கொடையில்சிறந்த     கொடிவேல்"என்ற  தலைப்பில் உருவான என் கவிதைகளை  வெளியிடுகின்றேன் .  வளமைபோல் தங்களின் கருத்துக்களையும், விருப்பத்தையும் தெரிவித்து இந்த பதிப்பை  வாழ வைப்பீர்கள் என்ற  நம்பிக்கையுடன் தொடர்கின்றேன். நன்றிஉறவுகளே. 
                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.