எண்ணிக் கழிக்கும் நாட்களுக்கிடையில்
இத்தனை துன்பம் ஏன் இறைவா ?.....!!!!!
இந்த மண்ணில் பிறந்த உயிகளுக்கெல்லாம்
மகிழ்ச்சியை என்றும் தா இறைவா .......
தண்ணிப் பஞ்சம் தாவரப் பஞ்சம்
தரையை வாட்டி வதைப்பதனால்
உயிர்களைக் கொல்லும் வெப்பம் உலகம் எங்கும்
உக்கிரமாதைத் தடுத்தருள்வாய்...........
வெள்ளிப் பனி மலை உருகிக் கடலை
தரையைத் தாவி வந்தென்றும்
உயிர்களை அள்ளிக் கொலை வெறி
ஆடும் ஆட்டம் அடங்கிட இங்கே அருள்புரிவாய்
மண்ணில் நல் வளம் மகிழ்வாய் பொங்கிட
மா தவத்தைத் துறந்து நீ வருவாய் என்றும்
கண்ணின் மணியென கருணைக் கடலென நற்
கருத்தில் உறைந்த பக்தருக்காய்
பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........
அருமையான வரிகள்... அருள் கிடைக்கட்டும்...
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ !
Deleteverygood prayer to siva. god bless you/ spr
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteசிவசிவ என்றிட சிவகதிதானே..... லெவ்ட்டு ரைட்டூ.. டேயூ நைட்டூ எனக் கவிதையில் கலக்குறீங்க அம்பாளடியாள்.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்றுமே வாழ்த்துச் சொல்லி என் கவிதைகளை வாழ வைக்கும்
Deleteஎன் தோழிக்கு அன்பு கலந்த நன்றிகள் .......
அம்பாளடியாள் அகமது உருக
ReplyDeleteஉன்பால் விண்ணப்பம் விடுத்துள்ளாள்
தென்பாலுறையும் சிவனே அரனே
அவளின் நல்மனம்வாழ அருள்செய்!
அருமையாக வரம் வேண்டினீர்கள்!
அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் தோழி!
மிக்க மகிழ்ச்சி தோழி தங்களின் இனிய வாழ்த்து என்றுமே
Deleteமனதைத் தொட்டு நிற்கின்றது .
//பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
ReplyDeleteபுழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........//
நிறைவான நியாயமான பிரார்த்தனைக்குப் பாராட்டுக்கள்.
எம் முழு முதற் கடவுள் சிவனிடம் நீங்கள் வேண்டியவைகள் அனைத்தும் அருமை! கவிதையும் அழகு!
ReplyDeleteஉலக நலம் வேண்டும் இனிமையானதொரு பிரார்த்தனை. வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteநெஞ்சம் நிறைவும் பிரார்த்தனை.
ReplyDelete