மண்ணும் வியக்க நின்றவனே
மதுரத் தமிழின் நாயகனே !
எண்ணும் பொழுதினில் வந்திங்கே
ஏற்றம் தந்து அருளாயோ !
கண்ணும் உன்றன் கழல்தேடிக்
காத்துக் கிடக்குது காவலனே!
விண்ணும் அதிர வந்தேதான்
விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய்
பண்ணில் நிறைந்த படரொளியே
பாடும் குயிலெனைப் பாடவைப்பாய்
கண்ணில் உன்றன் நினைவேந்திக்
கவிதை மழைநீ பொழிய வைப்பாய்
நண்ணும் துயரை நறுக்கியொரு
நாட்டம் அருள்வாய் நாளுமிங்கே
கண்ணும் கருத்தும் ஆனவனே
கருணைக் கடலே தேனமுதே !
செக்கச் சிவந்த மேனிதனில்
சேர்த்து முடிப்பேன் சந்தனத்தை
சொக்க வைக்கும் சுந்தரனே
சோலை வனத்தின் நாயகனே!
பக்கம் வந்தால் போதுமிங்கே
பாமழை பொழியும் தன்னாலே
மிக்க நலன் தரும் பார்வையினால்
மீட்டுக யாழென என் மனதை ....
விண்ணும் அதிர வந்தேதான்
ReplyDeleteவிரும்பும் வரத்தைத் தந்தருள்வாய்
பண்ணில் நிறைந்த படரொளியே
பாடும் குயிலெனைப் பாடவைப்பாய்
கண்ணில் உன்றன் நினைவேந்திக்
கவிதை மழைநீ பொழிய வைப்பாய் //
கவிதை அருமை சகோதரி!
ஏற்கனவே அப்படித்தான் பொழிந்து கொண்டிருக்கின்றீர்கள். தமிழ் கடவுள் இன்னும் உங்களைப் பொழிய வைப்பான்....நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
வாழ்த்துக்கள் சகோதரி!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
வண்ணத்தமிழ் கொண்டு மலையுறை வேலனின் புகழ்பாடிய விதம் சிறப்பாக உள்ளது.
த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை அருமை முருகன் துதி
ReplyDeleteதம. 2
பக்கம் வந்தால் ----பா மழை பொழியும் தன்னாலே.
ReplyDeleteபா மாலை --பா சரம் -பா ரசம் --பரவசம்
பழனிமலை பாலகனால்.
அமுதமழை -அருள் மழை-
அழகர் கோவில் ஆண்டவனால்,
தித்திக்கும் தேனமுதம் ,
திகட்டா அகமகிழ் அமிர்தம்
திருத்தணி திருமேனி .
வீரம் -விவேகம் -அப்பனுக்கே தந்த
சுப்பன் சுவாமிமலை,
சுந்தரத் தமிழில் சுப்பிரமணியன்
பண் பாடும் திறன் தரவே,பெறவே
நாளும் ஆறுமுகம் அவன் புகழ் பாடு.
th
பாமாலை அருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தம3
சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...
ReplyDeleteசொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=FMQV_4bg6Pw
ReplyDeleteதங்கள் பாடலை இங்கு கேட்டு மகிழுங்கள்.
பாடல் எங்கிலும் முருகன் என்ற சொல் இலாது கண்டு, நானே
முருகா, குமரா,கந்தா, வேலா என்று சேர்த்துக்கொண்டேன் ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும்.
பிழை எனின் பொறுக்கவேண்டும்.
சுப்பு தாத்தா.
www.kandhanaithuthi.blogspot.com
ஆகா எப்படி இப்படி தமிழ் அருவி மாதிரி கொட்டுகிறது ?
ReplyDeleteஅற்புதமான பாடல்
உங்கள் மனதை மட்டுமல்ல எங்கள் மனதையும் மீட்ட அழைக்கிறோம்.
ReplyDeleteமுருகன் என்றாலே பாடல்கள் பொங்கி வரும் ! அருவியாய் கொட்டுகின்ற சந்தங்களை ரசித்தேன் ! வாழ்த்துக்கள் ! பதிவு எழுதத் தொடங்கும் போது, நான் பதிவு செய்த முருகன் பாடலையும் பாடிப் பாருங்களேன் !
ReplyDeletehttp://psdprasad-tamil.blogspot.com/2006/12/sing-along-1.html