எரிமலை இங்கே குமுறுதடா..
எங்கள் இதயமும் அதிலே கருகுதடா...
உரிமைகள் இழந்த பறவைகள் எம்முன்
உலகமும் ஊமை யானதடா .....
கொடியவர் ஆட்சியில் மனம் மகிழ்ந்து
சதி கூட்டணி அமைத்துத் திரியுதடா ...
வறியவர் வாழ்வதை நினைத்தவர் யாரோ..
வறுமையின் பிடியினுள் நாடும் போகுதடா ..
பனிமலை இங்கே உருகிட வேண்டும்
பகைவரின் உடல் அதில் மிதந்திட வேண்டும்
இயமனும் இங்கே மகிழ்ந்திட வேண்டும் எம்
இதயமும் அதனால் உயிர் பெற வேண்டும் ...
தமிழரின் தாகம் அடங்கிடுமா சொல் ?...
தாயகம் மீட்க்காமல் உறங்கிடுமா சொல்?..
நரிகளை வெல்லும் காலம் வரும்
நன்மைகள் கூடும் நேரம் வரும் ...
சிறகுகள் இழந்த பறவைகளே எம்
சிந்தையில் நின்றாடும் உறவுகளே
தினசரி இறந்து பிறவாதீர் -எந்தத்
திசையிலும் தனிமையில் செல்லாதீர் ...
கழுகுகள் சுற்றிடும் தீவு இங்கு
கருணைக்கு என்றும் இடம் கிடையாது
வருவது வரட்டும் என நினையாதே
வருந்திடும் எங்கள் உறவுகளே .......
நல்லது நடக்கட்டும் விரைவில்
ReplyDelete"பனிமலை இங்கே உருகிட வேண்டும்
ReplyDeleteபகைவரின் உடல் அதில் மிதந்திட வேண்டும்
இயமனும் இங்கே மகிழ்ந்திட வேண்டும் எம்
இதயமும் அதனால் உயிர் பெற வேண்டும்..." என்ற
உயிருள்ள வரிகளே
தங்கள் கவிதைக்கு அழகு!
நன்மைகள் கூடும் நேரம் விரைவில் வரட்டும் அம்மா...
ReplyDeleteஎனக்கும் இந்த ஐநா சபை மேலும் கோபமுண்டு ...கொடுமை நடக்கும் போது கண்ணை கொண்டு இருந்து விட்டு ,இன்று உரிமை ,சுதந்திரம் என்று சொல்வதைப் பார்த்தால் ...அதுவும் தந்திரமாய் நடந்து கொள்கிறதோ என்று படுகிறது !
ReplyDeleteத ம 3
நரிகளை வெல்லும் காலம் வரும்
ReplyDeleteநன்மைகள் கூடும் நேரம் வரும் ...
காலம் வரும் தோழி.
கவிதை அருமை.
சிறகுகள் இழந்த பறவைகளே எம்
ReplyDeleteசிந்தையில் நின்றாடும் உறவுகளே
தினசரி இறந்து பிறவாதீர் -எந்தத்
திசையிலும் தனிமையில் செல்லாதீர் ...
அருமை அருமை ஒவ்வொரு வரிகளிலும் ஆதங்கம் வெளிப்படுகிறது.
வாழ்த்துக்கள் தோழி! வாருங்கள் தோழி வலைப்பக்கம்.வந்தால் மகிழ்வேன்.
ReplyDeleteவணக்கம்!
எாிமலை போன்றே எாிந்திடும் சொற்கள்
நாிகளைக் கொல்லுமே நன்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
எரிமலையின் தாக்கம்
ReplyDeleteஇப்போது எங்களுக்குள்ளும்...
கழுகுகள் சுற்றிடும் தீவு இங்கு
ReplyDeleteகருணைக்கு என்றும் இடம் கிடையாது = நிஜம் தான்.
குமுறும் எரிமலைகள் குளிர்வதற்கு ஏதேனும் நடக்கவேண்டும் . நடக்குமா காத்திருப்போம்
ReplyDeleteநல்லதே நடக்கும் என நம்புவோம்......
ReplyDelete