காலம் போகும் போக்கில் தானே
மனிதன் போகிறான்
அவன் போகும் போது செய்யும் செயலை
அவனா செய்கிறான் ?..........
ஆட்டிப் படைக்க ஒருவன் உள்ளான்
அதை நாம் அறியணும்
அந்த ஒருவன் செய்யும் செயலை நினைத்தே
புருவம் உயத்தணும் ........
கருவம் கொண்டு நான் நான் என்றவர்
கண்ணை இழந்தவரே
மனக் கண்ணை இழந்த மனிதர் மட்டுமே
கடவுளை மறந்தனரே ...
உடலும் உயிரும் அவன்பால் இருக்க
ஊளையிடலாமா ?.....
ஊனுடலை மத்தித்துக்
கடலைத் தாண்ட காலம் வகுத்தவரே ..
கடலும் வானும் காணும் யாவும்
கடவுள் படைத்தது அந்தக்
கடவுள் இல்லை இல்லை என்றவர்
கதையை யார் தான் முடித்தது ?...
உருளும் உலகின் தத்துவத்தை
உணர்வாய் இந்நாளில் அதை
உணர மறந்து உடலை வதைத்து
உயிரைக் குடிப்பவரே .......
ஆடும் ஆட்டம் அடங்கும் ஒரு நாள்
ஆட்டிவிப்பவனால் அந்த
ஆட்டம் நின்றால் கூட்டம் மறையும்
அதையும் உணர்வாயே ...
நோட்டுக் கட்டின் தைரியத்தால் மனம்
நோக நடப்பவரே
உடல் நொந்து வெந்து போகும் போது
சிந்தை செய்பவரே .....
பாட்டுக்காக எழுதும் தத்துவம்
என்றே கொள்ளாதீர் எங்கள்
பாட்டன் பாட்டி முப்பாட்டன் தொழுத கடவுளை
முந்திச் செல்லாதீர்........
( காலம் போகும் போக்கில்)
//பாட்டன் பாட்டி முப்பாட்டன் தொழுத கடவுளை
ReplyDeleteமுந்திச் செல்லாதீர்........//
முத்தான முத்தாய்ப்பு!
கடவுள் குறித்த சிறப்பான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆட்டிப் படைக்க ஒருவன் உள்ளான்
ReplyDeleteஅதை நாம் அறியணும்
சிந்தையில் சிறந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அட!அடா!
ReplyDelete\\நோட்டுக்கட்டின் தைரியத்தால் மனம்
நோக நடப்பவரே
........................................
........................செய்பவரே//
என்ன அருமையான வரிகள்தோழி.
வெறும் புகழ்ச்சியில்லை! இறை என்பது என்ன என்று முழுமையாக உண்ர்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு கவிதை எழுத முடியும்.
ReplyDeleteகருவம் கொண்டு நான் நான் என்றவர்
ReplyDeleteகண்ணை இழந்தவரே..
மனக் கண்ணை இழந்த மனிதர் மட்டுமே
கடவுளை மறந்தனரே..
நிதர்சனமான உண்மை!..
அருமையான கவிதை!..
ஞாபகம் வந்த ஒரு பாடல் அம்மா...
ReplyDeleteஆடிய ஆட்டம் என்ன...? பேசிய வார்த்தை என்ன...?
தேடிய செல்வம் என்ன...? திரண்டதோர் சுற்றம் என்ன...?
கூடு விட்டு ஆவி போனால்... கூடவே வருவதென்ன...?
வீடு வரை உறவு... வீதி வரை மனைவி...
காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ...?
கடலும் வானும் காணும் யாவும்
ReplyDeleteகடவுள் படைத்தது அந்தக்
கடவுள் இல்லை இல்லை என்றவர்
கதையை யார் தான் முடித்தது ?...
நோட்டுக் கட்டின் தைரியத்தால் மனம்
நோக நடப்பவரே
உடல் நொந்து வெந்து போகும் போது
சிந்தை செய்பவரே .....
உண்மை உண்மை, அருமையான தத்துவங்களும் அறிவுரையும். மிக்க நன்றி வாழ்த்துக்கள்....!
"ஆட்டிப் படைக்க ஒருவன் உள்ளான்
ReplyDeleteஅதை நாம் அறியணும்
அந்த ஒருவன் செய்யும் செயலை நினைத்தே
புருவம் உயத்தணும்...." என்ற
அடிகளை வரவேற்கிறேன்
உண்மை உண்மை
ReplyDeleteத.ம.4
ReplyDeleteசிறுதெய்வ வழிபாடு என்பது காலங்காலமாக வருவதாகும். அவ்வாறே குலதெய்வ வழிபாடும். பதிவு அருமை.
ReplyDeleteகாலம் போகிறப் போக்கில் மனிதன் போகக்கூடாது. கடவுளை உணர்ந்து வாழவேண்டும் என்று வலியுறுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
//பாட்டன் பாட்டி முப்பாட்டன் தொழுத கடவுளை
ReplyDeleteமுந்திச் செல்லாதீர்........//
முடிவான வார்த்தைகள். முத்தான வார்த்தைகள்.
பாராட்டுகள்.
நித்தியமானவன் செயலை எண்ணி
ReplyDeleteநினைவுகள் எழுதும் கவிதை !
அருமை அருமை படித்தேன் ரசித்தேன்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
8