10/14/2014

இதையும் கொஞ்சம் சிந்திப்போமா !




ஊரோடு  உற்ற பகையால்  ஊனுடலை வதைத்தால்
வேரோடு  கெட்டொழியும்  வாழ்வு  !சேரும்
வேதனையை விட்டகன்று வாழும் வழியைப் பார்த்தாலே
சாதனைகள் தொடரும் சாவிலும் !

கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்து பகை முடிக்கும்
துர்  புத்தி உய்யவிடாது  வாழ்நாள் முழுதும் !
எண்ணத்தைச் சரி செய்து ஏற்றமுற நினைப்பவர்களே
வண்ணம் குன்றாது வாழ்வர் வாழ்வினிக்க !

முறையற்ற வாழ்வை முழுமனதோடு வாழ்ந்து முடித்தவர்
கறையை அகற்றுவது கடினம் எக் காலத்திலும் !
குறை செராத வண்ணம் குணத்தைக் காத்தவரே
இறையாகக் கணிக்கப் படுவர் இறந்த பின்னும் !

குற்றமற்ற நெஞ்சங்களைக்  கொன்று குவிக்கும் மனத்தவரைச்
சுற்றம் என்றும் ஏற்காது !ஏற்ற பொழுதிலும்
ஊற்றெடுக்கும் உணர்வுகளால் உட் பகைதான் வளரும்
மாற்றமில்லை இதனில் மறந்தும் !

தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட 
மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !
ஏற்றத் தாழ்வு எவர் உள்ளத்தில் உதித்தாலும் அவை 
சீற்றத்தைத் தந்து சீரளிக்குமே அல்லால் வாழ்வளிக்காது !

(படம் கூகுளில் இருந்து பெறப்பட்டது !நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

18 comments:

  1. நல்ல கருத்துகள் அடங்கிய கவிதை.
    வாழ்த்துக்கள் அம்பாளடியாள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட
    மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !//

    அருமையான வரிகள் சகோதரி! கவிதை முழுவதுமே மிக அர்த்தம் பொதிங்க அருமையான கவிதை வரிகள்! சிந்திக்க வைப்பதே!

    ReplyDelete
  3. தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட
    மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !

    அருமையான ஆக்கம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. #தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி#
    இந்த பொய் முகம் என்றாவது ஒருநாள் கிழிந்தே தீரும் !
    த ம 3

    ReplyDelete
  5. கவிதையும் கருத்தும் அபாரம்நியயமனாவையே தோழி நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  6. வணக்கம் தோழி!

    வாழும் வழிகளை வாஞ்சையோ டிட்டகவி!
    நாளும் குவிக்கும் நலம்!

    அருமையான சிந்தனை! அற்புதமான வரிகள்!
    அனைத்தும் சிறப்பு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. எண்ணத்தைச் சரி செய்து ஏற்றமுற நினைப்பவர்களே
    வண்ணம் குன்றாது வாழ்வர் வாழ்வினிக்க !..// உண்மை..தம. 5

    ReplyDelete
  8. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கருத்துக்கள் நன்று!

    ReplyDelete
  10. கொந்தளித்து வரும் சந்தம்...
    கொட்டிக் கிடக்கின்ற உணர்வுகள்..
    சிந்தா நதி...
    அருமை கவிஞரே!!

    ReplyDelete
  11. கருத்துக்கள் அனைத்தும் இனிமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வணக்கம்
    சொல்லிய கருத்துக்கள் அத்தனையும் சிறப்பாக உள்ளது... சொல்ல வார்த்தைகள் இல்லை... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. வாழ்க்கைக்கு ஒரு பாடமாய் அழகிய கவிதை:)))

    ReplyDelete
  14. வணக்கம் !

    கருத்துச் சொன்ன சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
    நன்றிகள் !மிக்க நன்றி வரவிற்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  15. அருமையான கவிதைகள்.வாழ்த்துக்கள் கவிதாயினி.

    ReplyDelete
  16. அன்பின் அம்பாளடியாள் - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அருமையான கருத்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........