காதோரம் காதல் சொல்லும்
உன் பாடல் கேட்டால் போதும்
உடலும் மனமும் தீயில் எரியுது
அடி பெண்ணே உன்னாலே !......
என்னை அளவும் தொழவும்
விட்டுச் சென்ற ஆணவக்காரி நீதானே !....
தெருவோரம் நான் தூங்க
என் விழி நீரில் பயிர் வாழ
உனக்கென்ன பெண்ணே சொல் என்
உயிர் மூச்சைக் கொண்டு சென்றாயே!
கனக்கின்ற இதயத்தில் இங்கே
உனக்காகவே நான் வடித்த
கவிதைக்குள் அர்த்தப் பாரம் அதை
இறக்கத்தான் துடிக்கின்றேன் நீ
எனக்காகப் பிறந்தாயோ.... போ ..போ போ ....
மலைப் பாம்பு போல் உன் ஆசை என்
மனதை விழுங்கிச் செல்லத்தான்
தடு மாறுதே! என் உள்ளம் இருளானதே!
விடியாத பாதைகள் விரிகின்றதே!- அதில்
போதை இன்றி நெஞ்சம் அலை மோதுதே!
கனாக் காணும் உள்ளங்கள் உலாப் போகுதே!
நிலா கூட என்னைக் கண்டு இடம்மாறுதே!
இதுதான் உன் காதல் தந்த பாடம் இனிக்
கண்ணில் கங்கை ஓடும் .........புது ராகம்
உனைச் சேரும் அதில் சோகம் எனதாகும்
அது போதும் போதும் போதும் பெண்ணே ...
( காதோரம் காதல்....)
ரசிக்க வைக்கும் பாடல்...
ReplyDeleteநன்றி...
tm1
அருமை.
ReplyDeleteதுப்பாக்கி பட சர்சை. முஸ்லிம் எதிர்ப்பு நியாயமா?
ReplyDeletehttp://rajamelaiyur.blogspot.in/2012/11/
vijay-movie.html
நல்லாயிருக்குங்க சகோ..பிடிச்சது..
ReplyDeleteகாதல் பாடல் அருமை! நன்றி!
ReplyDeleteகாதோரம் காதல்....ரசிக்க வைக்கும் பாடல்...
ReplyDeleteதாளம்போட்டு பாடவைத்துவிட்டது
ReplyDeleteபாடல்...
அருமை அருமை...