11/15/2010

காணாத காட்சி

காணாத காட்சி கண்டேன் 
கன்னியா குமரியில் -ஆழியும் 
புகழ் பாடும் அன்னையின் 
திருக்கோலம்-வாடாத முல்லைச்  
சிரிப்பெழிலால்   பாதம் தன்னில் 
யாரும் காணாத இன்பம் கண்டு 
கசிந்தது என் மனமே......
கங்கையும் யமுனயும்                                                                            காவிரியும் சங்கமிக்கும்
ஓர் அங்கமாய் விளைந்த தேசம்
அமர்ந்திருக்கும் தேவியவள்
மங்கையர்க்கு  அருள் புரிவாள் 
மானிடர் தம் குறை தீர்ப்பாள்
கங்கையில் அம்மர்ந்த கன்னித் 
தாயவள் பதம் போற்றி போற்றி......  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1 comment:

  1. நல்ல பாடல் ...அதுவும் எங்கள் ஊருக்கு மிக அருகிலுள்ள ஆலயத்தைப் பற்றி ....நன்றி சகோதரி !

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........