வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு
வந்து போகுதே எண்ணம்
கன்னி மயில் ஆட்டம் ஆடி
கண்கள் ரெண்டிலும்!
உன்னிடத்தில் மோகம்
உள்ள அந்தத் தாகம்
சொல்லில் அடங்காது
சொன்னால் புரியாது!
பூங்குருவிக் கூட்டம்
பாடும் அந்தப் பாட்டும்
தேனெடுக்கும் வண்டு
தேடி வரும் தோட்டம்!
ஆலமரம் புளியமரம்
அழகழகாய்ப் பூக்கும் மரம்
வேலவனின் ஆலயமும்
வேண்டி நிற்கும் பக்தர்களும்
கால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ?
ஊரழகைத் தேரழகை
உயிர் தரித்த மண்ணழகை
சொன்னால் புரியாது
சொல்லில் அடங்காது
இன்னலிது கேளு
எந்தன் உயிர்த் தீவே!
உன் மடியே சொக்கமடி
உணர்ந்தவர்க்குத் இன்பமடி
அள்ளி அணைக்காயோ?
அன்பை உதிர்க்காயோ?
என்றன் உயிர்த் தீவே!
என்று அணைப்பாயோ!
( வன்னி மண்ணைத் )
மண்ணின் பெருமை
ReplyDeleteஅறிந்தவர்களுக்கே
இந்த அற்புதக் கவிதையின்
அருமையும் புரியும்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
//சொன்னால் புரியாது
ReplyDeleteசொல்லில் அடங்காது
இன்னலிது கேளு
எந்தன் உயிர்த் தீவே ....///
தங்கள் உள்ளத்தை உணர முடிகிறது
சகோதரியாரே
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
வன்னி தேசத்துக்குள் புகுந்தால் தனிச்சுகந்தான் இருமருங்கிலும் மரங்கள். பலாப்பழம் பாலைப்ப .மாம்பழம் எல்லாம் விளையும் பூமி மறந்து வாழ்கிறோம்... சில நேரங்களில் நினைவுகள் வருவதுதான்.... அம்மா. முல்லைத்தீவில் அருள் பாலிக்கும் வற்றாப்பளை அம்மான் கோயில் சன்னிதியில் கால் பதித்தால் ஒரு தெய்வீக உணர்வுதான் தங்களின் கவியை படித்த போது தேசமே கண்ணில் வந்தாடியது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை அம்மா... வெறும் சொல்லில் அடக்க முடியாது...
ReplyDelete//
ReplyDeleteகால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ
ஊரழகைத் தேரழகை
உயிர் தரித்த மண்ணழகை
/// அருமையான வரிகள்... எந்த ஊர் போனாலும் எத்தனை வசதிகள் வந்தாலும் தாய் மண் தரும் சுகத்திற்க்கு ஈடு ஏதும் இல்லை.... என்றாகிலும் ஒரு நாள் நல்லது நடக்கும் என நம்புவோம்
அணைக்கும் காலம் விரைவில் வரட்டும் !
ReplyDeleteத ம 5
கால பயம் வந்ததனால்
ReplyDeleteகண்ணை விட்டு மறைந்திடுமோ
ஊரழகைத் தேரழகை
உயிர் தரித்த மண்ணழகை......ஏக்கமே மிஞ்சுகிறது. அருமையானஆக்கம்.
எண்ணங்கள் என்றும்
ReplyDeleteஎமக்கங்கே தானிருக்கும்
வண்ணக் கலவையொடு
வார்த்திட்ட கவிஅருமை!
வாழ்த்துக்கள் தோழி!
மண்ணின் பெருமையைப் பேசும் கவிதை, மிக அழகான புகைப்படத்துடன். நன்றி.
ReplyDeleteகவிதையை அருமை என்று ரசிக்க முடியவில்லை! அதனுள் ஆழமாய் பொதிந்திருக்கும் ஏக்கமும் வலியும் மட்டுமே மனதில் இறங்குகிறது!
ReplyDelete' மறந்து போகுமோ மண்ணின் வாசனை?
தொலைந்து போகுமோ தூர தேசத்தில்?
என்ற புகழ்பெற்ற ஈழத்துப்பாடல் நினைவுக்கு வருகிறது.
சிறப்பான வரிகள் கவி நயம் பிடித்து பாட வைக்கிறது..
ReplyDeleteஆஹா அருமை..........
ReplyDelete
ReplyDeleteவேதனை மிகுந்தாலும், .ஆஹா பாடிப் பார்த்தேன் அழகிய கவிதை.
வாழ்த்துக்கள் தோழி .....!
மண்ணின் மனம் என்று இதைத்தான் சொல்லுவார்களோ....
ReplyDeleteவன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு
ReplyDeleteஎண்ணி எண்ணி நினைக்க வைத்தீர்களே!
மண்வாசம் நெஞ்சில் மருகாமல் வாழ்ந்திருக்கும்
ReplyDeleteகண்ணோடு ஈரம் கசிந்து !
ஏக்கமுடன் எழுதி இனிய கவி அருமை
வாழ்க வளமுடன்
மண்ணின் வாசம் என்றும் நெஞ்சில்.....
ReplyDeleteத.ம. +1
வணக்கம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி தங்களின் அருமையான பாடல்களும் கவிதைகளும் எமது நெஞ்சத்தைக் கொள்ளை அடிக்கின்றது தொடர்ந்தும் எழுதுங்கள் எங்களின் மனமும் குளிரும்!