உள்ளம் அது
ஒளி வெள்ளம் என
துள்ளும் நிலை
அது போதும் இங்கே
இது தான் வாழ்க்கை
அன்பே கேளு!
சொல்லித் தரவா
பள்ளிப் பாடம்?
அதில் இல்லை இது போல்
இன்பம் ஏதுவும்!
முத்தம் மழையாகும்
இங்கு உயிர் மூச்சில்
சுகம் சேர்க்கும்
சித்தம் தடு மாறாமல்
இன்பத் தேனை
அது வார்க்கும்
அன்பால் பொங்கும்
இன்பம் நூறு அதை
ஏற்றுக் கொண்டால்
துன்பம் ஏது!
உன்னில் எனைக் காண
அட என்னில் உனைக் காண
வண்ணக் கவி பாடும்
என் எண்ணம் உனதாகும்!
கண்ணே கதை கேளு
கனியாத மனம் ஏது?
விண்ணே குடையாகும்
ஆனந்த விழிநீர் மழையாகும்
பொன்னின் நிற மானே!
அதைச் சொன்னால் புரியாதே!
அள்ளிக் கொள்ள வா ...
என் அன்பைப் பொழிவேனே ....
( உள்ளம் அது ஒளி.....)
மிக மிக அருமை
ReplyDeleteசொக்கிப் போனது மனது
வேறென்ன சொல்ல
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துகள்
சித்தம் தடு மாறாமல்
ReplyDeleteஇன்பத் தேனை
அது வார்க்கும்///
பிறகு மீண்டும் மீண்டும் கேட்கும்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteஅன்பிலே கட்டுண்டு கிடப்போம்...
ReplyDeleteஅதுவே நிதர்சனமான இன்பமென
உரைக்கும் அழகிய பாடல் சகோதரி...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி வருகைக்கும் தங்கள் பாராட்டிக்கும் !
Deleteநமக்கு கல்யாணம் ஆகலங்க இதெல்லாம் தெரியாது ..
ReplyDeleteமற்றபடி கவிதை அருமை
மிக்க நன்றி வருகைக்கும் தங்கள் பாராட்டிக்கும் !
Deleteசூப்பர்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் !
Deleteஅன்புத்தோழி!
ReplyDeleteஉள்ளத்தில்வந்த இன்ப
ஒளிவெள்ளத்தில் கள்லமிலா
உறவின் எண்ணத்தில் எழுதிய
உம் கவிப்பிரவாகத்தில் என்
மனத்தில் கண்ட ஆனந்தத்தில்
சொன்னதிந்த வாழ்த்துக்களே!!
மிக்க மகிழ்ச்சி தோழி தங்களின் வாழ்த்துக் கண்டு பெருமிதம் அடைந்தேன் !
Deleteமனம் கவர்ந்த கவிதை. ரொம்ப அழகான வரிகள் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி தோழி தங்களின் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் .
Deleteஅம்பாள் உங்களுக்கு இணை நீங்களேதான்.மெட்டோடு இதம் தருகிறது கவிவரிகள் !
ReplyDeleteமகிழ்வான செய்தி சொல்லி என் மனதோடு நின்றாய் தோழி !
ReplyDeleteமிக்க நன்றி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
கண்ணே கதை கேளு
ReplyDeleteகனியாத மனம் ஏது .......
விண்ணே குடையாகும்
ஆனந்த விழிநீர் மழையாகும்
அழகு அருமை
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteசிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஅன்பில் நிறைந்த கவிதை. வாழ்த்துகள்.
ReplyDelete