9/28/2012

இதற்கொரு பதில் சொல் இறைவா !...

ஆணுக்குப் பெண்
சமம் என்று இங்கே
அழகாகத் தோன்றும்
தெய்வம்தான்  எங்கே!...

வீணுக்குப்  பகைமை
விளைகின்ற தேசம்
நாளுக்கு நாளிங்கே
முன்னேறும் போது!...

நீதிக்குத் துணையாய்
நீ இல்லை இங்கே
இந்தப்  பாதிப்புத்  தொடர்ந்தால்
உன்னைப் பாராட்டுவதெங்கே!...

கோதி பூத் தலையில்
குடிகொண்டும் என்ன
மன பாதிப்பு எமக்கு
மலை போல இருக்க!!!!.....

சோடித்த பொம்மை அவள்
சிரிக்கின்ற போது துயர்
ஓடித்தான் ஒழியும்
இதுதானே பெண்மை !.....

கூடித்தான் இகழ்வார்
கூட்டத்திற்கு அழகாய்
ஏன் எம்மைப் படைத்தாய்
பெண் என்று !!!!............

நாலுக்குள் இரண்டு என
நவில்கின்றபோதும் பலர்
காலுக்குள் சிக்கித் தவிக்கின்ற
மலர்போல் அவள் இங்கே!...

வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
இந்த ஜாதிக்குள் பேதம்
அது அகலாது என்றால்
வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

 1. மிக அருமையான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. உலகின் கொடுமைகளை அத்தனையையும் போக்கி விட்டால் இங்கு இறைவனுக்கே இடமில்லை...

  ஏற்ற தாழ்வுகளும் சாதி மதங்களும் உலகோர் வாழ்க்கைக்கு கிடைத்த முற்கிரிடங்கள்...

  வலிகளோடுதான் வாழ் வேண்டும்...  அழகிய அர்த்தமுள்ள கவிதை...

  ReplyDelete
 3. வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
  இந்த ஜாதிக்குள் பேதம்
  அது அகலாது என்றால்
  வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!....

  புலம்பலோடு தான் வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது.

  ReplyDelete
 4. இந்தப் பாதிப்புத் தொடர்ந்தால்
  உன்னைப் பாராட்டுவதெங்கே!...

  அருமையான கவிதை.

  ReplyDelete
 5. நல்ல வரிகள்...
  கடவுளிடம் முறையிடுவதை விட நம்மில "சிலர்" உணர்ந்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்

  ReplyDelete
 6. வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
  இந்த ஜாதிக்குள் பேதம்
  அது அகலாது என்றால்
  வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!

  மறக்கமுடியாதவரிகள்

  ReplyDelete
 7. ஆண்டவனை கேட்பதை விட்டு விட்டு . ஆளுக்கு ஆள் துணிந்து நின்றால் குறை ஏதும் இல்லை . நன்றாக மாறிவிட்டது உலகம். ஆனாலும் இன்னும் சில புல்லுருவிகளால் நடப்பவை உங்கள் போன்றோர் எழுத்துகளால் திருத்தப்படும்

  ReplyDelete
 8. ''...நாலுக்குள் இரண்டு என
  நவில்கின்றபோதும் பலர்
  காலுக்குள் சிக்கித் தவிக்கின்ற...'''

  பிரளயம் வந்தாலும் உலகு மாறுமோ!!!!!!!!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........