9/01/2012

அணையைத் தாண்டுது துயரம் இங்கேஅணையைத் தாண்டுது                           
துயரம் இங்கே அம்மா வருவாளா!.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயா.... நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயா...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக!!!....

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. அருமையான பாடல்... நன்றி...

  ReplyDelete
 2. //
  தாயவள் பாதம் போற்றியே நின்றோம்
  தாயே இங்கு வருவாயோ......
  //

  இவ்வளவு உருகி அழைக்கும் போது வராமல் போய்விடுவாரோ?

  ReplyDelete
 3. பக்தி மயமா இருக்கு.தாயே சரணம் !

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........