ஞாபகசக்தியே உயிர்களின் சக்தி!.....
நேற்றைய பொழுது நினைவில் இல்லையே
இன்றைய பொழுதும் அரையும் குறையும்தான்
நாளைய பொழுது என்ன ஆகுமோ அதை
நினைத்தால் நெஞ்சில் பயமோ !!!!...........
பார்த்துப் பழகுங்கள் உறவுகளே....
மனம் சிறைப் பட்டால் அதுவும் துயரே!...
இசை மீட்டிடத் துடிக்கும் வீணையின் நரம்பு
அறுந்தால் துன்பம் தாங்காது !......
நேற்றில்லை இன்றில்லை என்றுமே
மன நின்மதி வேண்டும் வாழ்விலே!..
நாம் ஏற்றிடும் துயரோ... எந்நாளும்
இறுதியில் தரும் நோய் இதுதானே !....
வீக்க தூக்கம் பார்க்க வேண்டாம் நீ
விட்டுத் தள்ளு வரும் துயரை என்றும்
ஏற்ற காலம் வரும் வரைக்கும் இதில்
எந்த நினைப்பும் உனக்கு வேண்டாம்!.....
போட்டியில் போகுது உலகமிங்கே
நீ எது சொன்னாலும் புரியப் போவதில்லை
உன்னை வாட்டிடும் செயலே அதிகமாகுமே
வருந்துவதால் இங்கு பயன் என்ன !.........
கூட்டிக் கழித்து நன்மை அறிவாய்
கொண்ட கொள்கை தாண்டி நீயும்
இதய சுகத்தில் நலனைக் காட்டு
இதை நீ தாண்டினால் சுடுகாடே !....
நாம் ஆட்டம் போடும் காலம் கொஞ்சம்
அடையும் இன்பம் அதிலும் கொஞ்சம்
வாட்டம் ஏன்தான் வாழ்வில் எமக்கு
வந்தவரைக்கும் அமைதி கொள்ளு !....
///பார்த்துப் பழகுங்கள் உறவுகளே....
ReplyDeleteமனம் சிறைப் பட்டால் அதுவும் துயரே!..///
மிக உண்மை
ada....
ReplyDeleteபார்த்துப் பழகுங்கள் உறவுகளே....
ReplyDeleteமனம் சிறைப் பட்டால் அதுவும் துயரே!.........
////////////
எனக்கு முதல் ஒருவர் சொல்லிட்டுப் போயிட்டார் :மிக உண்மை :
அழகான கோர்வை
போட்டியில் போகுது உலகமிங்கே
ReplyDeleteநீ எது சொன்னாலும் புரியப் போவதில்லை
உன்னை வாட்டிடும் செயலே அதிகமாகுமே
வருந்துவதால் இங்கு பயன் என்ன !.........
அழகாகச் சொன்னீர்கள்.
/// நாம் ஆட்டம் போடும் காலம் கொஞ்சம்
ReplyDeleteஅடையும் இன்பம் அதிலும் கொஞ்சம்
வாட்டம் ஏன்தான் வாழ்வில் எமக்கு
வந்தவரைக்கும் அமைதி கொள்ளு !.... ///
பல திரைப்பட பாடல்கள் நினைவிற்கு வந்தன...
" நேற்றில்லை இன்றில்லை என்றுமே
ReplyDeleteமன நின்மதி வேண்டும் வாழ்விலே!..
நாம் ஏற்றிடும் துயரோ... எந்நாளும்
இறுதியில் தரும் நோய் இதுதானே !.... "
உறவும் பாரமே ! நம் கவிஞர் கண்ணதாசன் அண்ணன் இதை தான் சொல்லி இருக்கார் !
நன்றிங்க சகோதரி
நாம் ஆட்டம் போடும் காலம் கொஞ்சம்
ReplyDeleteஅடையும் இன்பம் அதிலும் கொஞ்சம்
வாட்டம் ஏன்தான் வாழ்வில் எமக்கு
வந்தவரைக்கும் அமைதி கொள்ளு !
எனக்கு பிடித்தவரிகள்
எல்லாம் அவன் செயல்ன்னு போயிட்டே இருந்தா என்றும் அமைதிதான் தோழி ..
ReplyDelete