9/06/2012

பூந்தளிர்த் தென்றல்க் காற்றே...

பூந்தளிர்த் தென்றல்  காற்றே
பூ வாடை வீசும் பெண்ணே!
பாவாடைத்  தாவணியில் வந்ததேனோ!
குளிர் நீரோடை போல நெஞ்சைத்
தொட்டுச் சென்றதேனோ!

மானாட மயிலும் ஆட
மனம் போல நீயும் ஆட -இந்தக்
குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கிறதா?
உன்றன்  கொலுசும்தான் தாளம் போடப் பார்க்கிறதா?

முல்லைப் பூப்போல் என்றும்  சிரிக்கின்றாய்
முக அழகாலென்னை வதைக்கின்றாய் !..
பெண்ணே என்னைக் கொன்றுவிடு
இல்லை என்றால் இங்கே வந்துவிடு ......

என் எண்ணம் எங்கும் உன் விம்பமெடி
நான் ஏழை ஆனேன் என் பைங்கிளியே ...
இரு கன்னம் தொட்டு நான் மகிழ
ஒளி  மின்னல் பட்டுத் தெறிக்காதோ!

சின்னச் சின்னக் கதை பேசி
சிணுங்கும் உன்னை நான் அணைக்க
வெட்கப்பட்டு செந்தாமரைபோல்
இரு விழிகள் மூடி என்றன்
தோழில் வந்து சாய்ந்து விடு...

என் அத்தை பெத்த ரத்தினமே!
அழகு மயில் சித்திரமே !
ஒத்தையில உன் நினைப்பால்
ஒதுங்கி நிக்குதடி நித்திரைதான்.....

                                              (பூந்தளிர்த் தென்றல்....) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

23 comments:

 1. ரூபிகா கவிதை அருமை.

  ReplyDelete
 2. குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கிறதா !......
  உந்தன் கொலுசும்தான் தாளம் போடப் பாக்கிறதா!....
  sweet lines

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புதிய வரவிற்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 3. என் அத்தை பெத்த ரத்தினமே
  அழகு மயில் சித்திரமே !.........
  i like it

  ReplyDelete
 4. பூந்தளிர் தென்றல்க் காற்றே என்பது பூந்தளிர்த் தென்றல் காற்று என்று வருதல் நலம்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சரியான கருத்து .பூந் தளிர் இங்கே இடை நிறுத்தி
   தென்றல்க் காற்றே என பாடலை பாடியபோது அந்த
   ராகம் நெஞ்சில் ஒட்டிக் கொண்டது .உச்சரிக்கும்போதே
   தவறு என புரிந்துகொண்டேன் மன்னிக்கவும் .மிக்க
   நன்றி தங்கள் கருத்திற்கு .

   Delete
 5. அழகிய காதல் பாடல்! ரசிக்கவைத்த பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 6. ரஜினி பிரதாப் சிங்! பூந்தளிர் தென்றல் காற்று என்பதே சரியான உச்சரிப்பு! அக்கா அவசரத்தில் தவறிழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 7. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா நீண்டகால இடைவெளியின் பின் காண்பது
   மனதிற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது .நன்றி ஐயா தங்கள்
   வரவிற்கும் நல் வாழ்த்திற்கும் .

   Delete
 8. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 9. கவிதையே தென்றலாகத்தான் தவழ்கின்றது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்கள் கருதினால் என் உள்ளம்
   குளிர்கிறது .

   Delete
 10. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துகள்...

  ReplyDelete
 11. தென்றல் சசி அக்காவுக்கு போட்டியா வந்துடுவீங்க போல இருக்கே! :)

  ReplyDelete
 12. பூந்தளிர்த் தென்றல்......இதம் சுகம்.அத்தை பெத்த ரத்தினம் அதிஷ்டசாலிதான் !

  ReplyDelete


 13. வரவர கவிதையில் சந்தம் சர வெடிபோல் வருகின்றது!அருமை!

  நாளும் வளர வாழ்த்துக்கள்!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........